நிஸ்ஸான் நிறுவனம், சாலைகளில் பைலடெட் ட்ரைவ் கார்களுக்கான சோதனை ஓட்டத்தை ஆரம்பித்தது
நிசான் லீஃப் க்காக நவ 03, 2015 06:03 pm அன்று bala subramaniam ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
2020 – ஆம் ஆண்டிற்குள் சிறந்த தானியங்கி வாகனங்களைச் சாலைகளில் ஓடச்செய்வது என்ற தனது உன்னத கனவை மெய்ப்பிக்கும் விதமாக, நிஸ்ஸான் நிறுவனம், தனது முதல் மூல முன் மாதிரி புரோட்டோடைப் காரை பைலடெட் ட்ரைவ் முறையில், ஜப்பானின் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்புற சாலைகளில், சோதனை ஓட்டத்தை நடத்தியது. நிஸ்ஸான் லீஃப் மின் வாகனத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புரோட்டோடைப் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஸ்ஸான் நுண்ணறிவு டிரைவிங் வரிசையில் வரவிருக்கும் கார்களை சிறந்த முறையில் உருவாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடுப்பதற்கு முன்பே, தற்போது உள்ள நிஜ போக்குவரத்தில் எவ்வாறு இயங்குகிறது என்பதை கணிப்பதற்காக, நெடுஞ்சாலை மற்றும் நகர சாலைகளில் இந்த காரை ஓடச் செய்து சோதனையிட்டது. தானாக இயங்கக் கூடிய விதத்தில் செயல்பட, இந்த காரில் பலவிதமான சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை, மில்லிமீட்டர் வேவ் ரேடார், லேசர் ஸ்கேனர்கள், காமிராக்கள், அதி-விரைவில் இயங்கும் கணினி சில்லுகள் (கம்ப்யூட்டர் சிப்ஸ்), மற்றும் ஒரு சிறப்பு HMI (ஹியூமன் மெஷின் இன்டர்ஃபேஸ்) ஆகியன ஆகும்.
உறுதி செய்யப்பட்டது: நிஸ்ஸான் GT-R இந்த வருடத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
நகர சாலைகளில் பைலடெட் ட்ரைவ் செய்வதற்காக, நிஸ்ஸான் இரண்டு அருமையான தொழில்நுட்பங்களை இந்த புரோட்டோடைப் காரில் உபயோகித்து உள்ளது. ஹை-ஸ்பெக் லேசர் ஸ்கேனரின் சிறிய மினியேச்சர் மற்றும் 8-வே 360 கோணத்திலும் பார்க்கவல்ல காமிரா அமைப்பு ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும், நிஸ்ஸானின் இந்த சோதனை ஓட்டத்திற்குக் கை கொடுத்திருக்கின்றன. லேசர் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி, இந்த வாகனம் தனக்கும் தன் சுற்றுப்புறங்களுக்கும் இடையே உள்ள தூரத்தைத் தானாகக் கணக்கிடுகிறது. முப்பரிமாண (3D) அளவீடு இந்த கணிப்பிற்கு உதவி செய்து, இந்த வாகனம் இட நெருக்கடி மிகுந்த பகுதிகளையும் எளிதில் கடக்க உதவுகிறது. லேடஸ்ட் தொழில்நுட்பத்தில் வரும் இதன் காமிரா அமைப்பு, சாலை சந்திப்புகள் மற்றும் கூர்மையாகத் திரும்பும் சாலைகளிலும் சீராகப் பயணம் செய்வதற்குத் தேவையான துல்லியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
“நிஸ்ஸான் நிறுவனத்தில், நாங்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, பைலட்டெட் ட்ரைவ் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். எங்களது இந்த குறிக்கோளை நோக்கி நாங்கள் மிக நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரம்தான், இன்று நாங்கள் அறிமுகம் செய்யும் புரோட்டோடைப் ஓட்டமாகும். நிஸ்ஸான் நிறுவனம் பாதுகாப்பான மற்றும் சிக்கல் இல்லாத டிரைவிங் எக்ஸ்பீரியன்சை மக்களுக்கு எதிர்காலத்தில் தர வேண்டும் என்று ஆசைப் படுகிறது. எனவே, வாகனத் துறையில் முதல் முதலாக பைலடெட் ட்ரைவ் முறை ஓட்டத்தை, நாங்கள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்று நிஸ்ஸானின் மூத்த துணைத் தலைவர் டக்காவோ அசாமி கூறினார்.
2016 –ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளில், பைலடெட் ட்ரைவ் திட்டத்தின் முதல் படியாக ‘பைலடட் ட்ரைவ் 1.0’ என்னும் திட்டத்தை செயல்படுத்த நிஸ்ஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குள், நெடுஞ்சாலைகளில் உள்ள லேன்களில் தானாக மாறுவதற்கான அதி நவீன தொழில்நுட்பத்தை ‘மல்டிபில் லேன் பைலடெட் ட்ரைவ்’ மூலம் செயல்படுத்த முடியும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது. 2020 – ஆம் ஆண்டிற்குள், போக்குவரத்து மிகுந்த நகர ரோடுகளிலும், சிக்கலான சாலை சந்திப்புகளிலும், தானியங்கி கார்கள் எளிதாகவும் வெற்றிகரமாகவும் பயணிக்கும் விதத்தில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் வாசிக்க:
நிஸ்ஸான் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் 8 வருட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தக் கோப்பில் கையெழுத்திட்டது
க்ராஸ் ஓவர் தொழில்நுட்பத்தின் முதல் படத்தை (டீசர்) அதன் ரசிகர்களுக்கு நிஸ்ஸான் வெளியிட்டது
2015 டோக்கியோ மோட்டார் கண்காட்சி: நிஸ்ஸான் நிறுவனத்தின் IDS கான்செப்ட் வெளியீடு