• English
  • Login / Register

ரூ.7.39 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிஸான் மேக்னைட் கெசா எடிஷன்

published on மே 29, 2023 06:00 pm by ansh for நிசான் மக்னிதே 2020-2024

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மேக்னைட்-இன் லோவர்-எண்ட் கார் வேரியன்ட் -ஐ  அடிப்படையாகக் கொண்ட இந்த ஸ்பெஷல் எடிஷன், இன்ஃபோடெயின்மென்ட்  மற்றும் இசையில் கவனம் செலுத்தும் அப்டேட்களைப் பெறுகிறது.

Nissan Magnite

  • XL மேனுவல் கார் வேரியன்ட் -ஐ அடிப்படையாகக் கொண்டது போல் தெரிகிறது.

  • JBL சவுண்ட் சிஸ்டம் உடன் 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கிடைக்கிறது.

  • புதிய மஞ்சள்நிறம் கலந்த பழுப்பு நிற இருக்கைகள் மற்றும் ரியர் வியூ கேமராவுடன் வருகிறது.

  • இந்த ஸ்பெஷல் எடிஷன் பேஸ் 96PS 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.

நிஸான் மேக்னைட் இந்தியாவில் புதிய கெசா ஸ்பெஷல் பதிப்பைப் பெற்றுள்ளது. மேலே உள்ள பேஸ் XL வேரியன்ட் அடிப்படையில், அதன் இன்ஃபோடெயின்மென்ட்  மற்றும் சவுண்ட் சிஸ்டம் நுட்பமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

விலை

Nissan Magnite Geza Edition Launched At Rs 7.39 Lakh


கெசா எடிஷன்


XL மேனுவல் வேரியன்ட்


வேறுபாடுகள்


ரூ. 7.39 லட்சம்


ரூ. 7.04 லட்சம்


+ரூ 35,000

இந்த ஸ்பெஷல் எடிஷன் XL வேரியன்ட் மீது ரூ. 35,000 பிரீமியத்தைக் கொண்டுள்ளது மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த விலை பிரீமியத்திற்கு என்ன அப்டேட்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

இதில் என்ன புதிதாக உள்ளது ?

Nissan Magnite 9-inch touchscreen infotainment

Nissan Magnite JBL Sound System

இந்த ஸ்பெஷல் எடிஷன் இசையில் கவனம் செலுத்துவதால் (ஜப்பானிய மொழியில் கெசா என்ற சொல் இசையுடன் தொடர்புடையது ), இது ஒரு புதிய 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் JBL பிரீமியம் சவுண்ட் சிஸ்டத்தை பெறுகிறது. இது தவிர, இந்த ஸ்பெஷல் எடிஷனில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பின்புற பார்க்கிங் கேமரா, மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிற இருக்கைகள், ஆப்-அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஆம்பியன்ட் லைட்டிங்குகள் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா ஆகியவையும் உள்ளன.

மேலும் படிக்கவும்: அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள சிறந்த 7 கார் பிராண்டுகள் நமக்காக என்ன திட்டமிட்டுள்ளன என்பதை இதோ தெரிந்து கொள்வோம்

பவர்டிரெயின்

Nissan Magnite Engine

மேக்னைட் கெசா எடிஷன் 5- வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள 1 லிட்டர் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் (72PS மற்றும் 96Nm)  வருகிறது. எஸ்யூவி யின் ஹையர் வேரியன்ட்களில் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (100PS மற்றும் 160Nm வரை) 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்

Nissan Magnite Rear

ரூ.6 லட்சம் முதல் ரூ.11.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிஸான் மேக்னைட் , டாடா நெக்ஸான், கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது .

மேலும் படிக்கவும்: மேக்னைட்  ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Nissan மக்னிதே 2020-2024

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience