• login / register

நவீன நிஸ்ஸான் GTR காரின் புகைப்படத் தொகுப்பு: அனைத்து வித பார்வையாளர்களையும் கவர்ந்த காட்ஜில்லா

நிசான் ஜிடிஆர் க்கு published on பிப்ரவரி 10, 2016 03:24 pm by அபிஜித்

  • 12 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

2016 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஹைபிரிட் க்ராஸ்ஓவர் X டிரைல் மற்றும் காட்ஜில்லா என்று அனைவராலும் அழைக்கப்படும் சூப்பர் கார் GTR ஆகிய இரண்டு புதிய கார்களை, நிஸ்ஸான் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. ஆல் வீல் ட்ரைவ் அமைப்பு கொண்ட இந்த கார் நிச்சயமாக தனித்துவத்துடன் வலம் வரும். ஒரு சில அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இது முழுமையான ஏரோ டைனமிக் அமைப்பில் தயாரிக்கப்படவில்லை என்று நாம் யூகிக்கிறோம். எனினும், இந்த காரில் உள்ள லேசர் பிரிசிஷன் ஹாண்டலிங் அமைப்பு, வெயிட் டிஸ்ட்ரிபியூஷன் திறன் மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ் போன்ற சிறப்பம்சங்களால், இது போற்றுதலுக்குரிய காராகத் திகழ்கிறது. ஏற்கனவே வெளிவந்துள்ள ஏராளமான விமர்சனங்கள் மற்றும் சோதனை ஓட்டங்களின் முடிவுகளை வைத்து ஸ்போர்ட்ஸ் காரான GTR -ரின் திறனை எளிதாக கணிக்கலாம். ஒரு நற்செய்தி என்னவென்றால், இந்த முறை நிஸ்ஸான் நிறுவனம் தனது GTR காரை இந்திய சந்தையில் உறுதியாக அறிமுகப்படுத்தப் போகிறது.  எனினும், இதன் ரசிகர்கள் அனைவரும் மேலும் 3 அல்லது 4 மாதங்கள் வரை இதன் அறிமுகத்திற்காக காத்திருக்க வேண்டும். 

GTR காருடன் போட்டியிடும் ஏனைய கார்களில் உள்ள இஞ்ஜின்களுடன் ஒப்பிடும் போது, இதில் பொருத்தப்பட்டுள்ள 3.8 லிட்டர் V6 மோட்டார், அவற்றிற்கு சமமானதாக இல்லை என்பதே உண்மை; எனினும், இந்த காரின் செயல்திறனை நாம் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில், டிராக் டைம், அசாத்திய வேகம் மற்றும் தனித்துவமான கார்னரிங் திறன் போன்ற கண்ணோட்டங்களில் பார்க்கும் போது, நிச்சயமாக ஏராளமான சூப்பர் கார்களை GTR மிஞ்சிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், ஸ்டார்ட் செய்து 4 வினாடிகளுக்குள்ளாகவே, இது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விடுகிறது. 545 bhp என்ற அளவில் சக்தி உற்பத்தி செய்யப்படுவதால், அதிகபட்சமாக மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை இதன் வேகத்தை அதிகரிக்க முடியும். 
GTR காரின் வெளிப்புறத் தோற்றம்

செயல்திறன் அவுட்புட், G ஃபோர்ஸ் டேட்டா மற்றும் கார்னரிங் வேகம் போன்றவற்றை சித்தரிக்கும் சிறந்த இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் போன்ற முக்கிய வசதிகள் அனைத்தும் GTR காரின் உட்புறத்தில் இடம்பெற்றிருந்தாலும், இதன் உட்புறம் சற்றே பழமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. எனினும், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கார்களான போர்ஷ் 911 போன்றவற்றுடன் ஒப்பிடும் போது GTR மாடலின் ஒட்டுமொத்தத் தோற்றம் நவீனமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.  

இந்த ஜப்பானிய சூப்பர் காரின் விரிவான புகைப்படத் தொகுப்பை கண்டு களியுங்கள்!

மேலும் வாசிக்க நிஸ்ஸானின் டெர்ரானோ மற்றும் மைக்ரா மாடல்களின் உலக கோப்பை டுவென்டி 20 ஸ்பெஷல் எடிஷன் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016  கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

வெளியிட்டவர்

Write your Comment மீது நிசான் ஜிடிஆர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

Ex-showroom Price New Delhi
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?