நிஸ்ஸானின் டெர்ரானோ மற்றும் மைக்ரா மாடல்களின் உலக கோப்பை டுவென்டி 20 ஸ்பெஷல் எடிஷன் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
published on பிப்ரவரி 08, 2016 10:20 am by saad
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
உலகம் முழுவதும் பிரபலமான கார் தயாரிப்பாளரான நிஸ்ஸான் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்து, 2023 –ஆம் ஆண்டு வரையிலான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்திய ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில், தனது இரண்டு ஸ்பெஷல் எடிஷன் வாகனங்களை வெளியிட்டுள்ளது. அடுத்து வரும் 8 வருடங்களில் நடைபெறவுள்ள ICC –யின் ICC உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் ICC டுவென்டி 20 உலக கோப்பை உட்பட அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும், பிரதான ஸ்பான்சராக நிஸ்ஸான் நிறுவனம் இருக்கும். நிஸ்ஸான் டெர்ரானோ மற்றும் நிஸ்ஸான் மைக்ரா என்ற இரண்டு வாகனங்களின், சிறப்பு டுவென்டி 20 எடிஷன்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன்களாக வெளிவந்துள்ள இவை இரண்டும் புதிய ஆர்ப்பரிக்கும் வண்ணங்களுடன், வெளிப்புறத்தில் அழகிய டிகால்கள் ஒட்டப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், உலகம் முழுவதும் தற்போது டுவென்டி 20 அலை வீசிக் கொண்டிருப்பதால், இந்த கார்களின் உட்புறம் டுவென்டி 20 என்ற தீமில் வடிவமைக்கப்பட்டு, அனைவரையும் வசீகரிக்கின்றன.
நிஸ்ஸான் டெர்ரானோவின் XV S வேரியண்ட்டில் உருவாக்கப்பட்டுள்ள டுவென்டி 20 வேர்ல்டு கப் எடிஷனில், 110 PS சக்தி மற்றும் 248 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இது 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டு வரும். அது மட்டுமல்ல, இந்த SUV காரில் 16 அங்குல அலாய் சக்கரங்கள், எலக்ட்ரிக் ORVM, ABS, பின்புறத்தில் சில்வர் ஸ்கிட் ப்ளேட்கள், EBD அமைப்பு, இரண்டு வண்ணங்களில் வரும் உட்புற அலங்கரிப்புகள், பளபளப்பான பியானோ வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள கருப்பு நிற சென்டர் கன்சோல் மற்றும் இது போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய நிஸ்ஸான் மைக்ரா டுவென்டி 20 வேர்ல்டு கப் எடிஷனில், 68 PS சக்தி மற்றும் 104 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில், முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள், கீ லெஸ் என்ட்ரி, EBD, ABS, 4 ஸ்பீக்கர்கள், பவர் என்ட்ரி மற்றும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், நிஸ்ஸான் மைக்ரா டுவென்டி 20 வேர்ல்டு கப் எடிஷன் மற்றும் நிஸ்ஸான் டெர்ரானோ டுவென்டி 20 வேர்ல்டு கப் எடிஷன் ஆகிய இரண்டு கார்களின் வெளிப்புறத் தோற்றத்திலும், பல்வேறு விதமான மேம்பாடுகள் இடம்பெறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அடுத்து வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலக கோப்பை டுவென்டி 20 மேட்ச் மீது மக்களின் மத்தியில் உள்ள அதீத ஆர்வத்தின் காரணமாக, இந்த இரண்டு வாகனங்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதையும் படிக்கவும் : 2016 ஆட்டோ எக்ஸ்போவில் நிஸ்ஸான் GT-R காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
0 out of 0 found this helpful