2016 ஆட்டோ எக்ஸ்போவில் நிஸ்ஸான் GT-R காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
published on பிப்ரவரி 04, 2016 04:08 pm by nabeel for நிசான் ஜிடிஆர்
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், நிஸ்ஸான் நிறுவனம் தனது GT-R காரை காட்சிக்கு வைத்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில், இந்த கார் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். 2016 வாகன கண்காட்சியில் அமைந்துள்ள நிஸ்ஸான் நிறுவனத்தின் அரங்கம், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. ஏனெனில், இந்த அரங்கத்தில்தான், உலகம் முழுவதும் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற, பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட கார்களின் அரசனாகத் திகழும் புதிய நிஸ்ஸான் GT-R கார், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வேகம் மற்றும் சீராக திரும்பும் திறன் போன்ற சிறப்பம்சங்களின் சின்னமாக GT-R விளங்குகிறது. கண்காட்சியில், GT-R காருக்குப் போட்டியாக, ஆடியின் புத்தம் புதிய R8 மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், இந்த காரின் விலை, சுமார் ரூ. 2 கோடிகள் என்று நிர்ணயிக்கப்படும். இந்திய சந்தையில், ஆடி R8 மற்றும் போர்ஷ் 911 போன்ற கார்களுடன் நிஸ்ஸானின் புதிய கார் போட்டியிடும்.
6,400 rpm என்ற அளவு சுழற்சியில் 554 bhp சக்தி மற்றும் 3,200 – 5,800 rpm என்ற அளவு சுழற்சியில் 632 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 3.8 லிட்டர் டிவின் டர்போ V6 இஞ்ஜின், புதிய GT-R காரை இயக்குகிறது. இஞ்ஜினுடன் இணைந்த 6 ஸ்பீட் டூயல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன் வசதி, உற்பத்தி செய்யப்பட்ட சக்தியை அனைத்து சக்கரங்களுக்கும் (4WD) கொண்டு சேர்க்கிறது. அது மட்டுமல்ல, ஸ்டார்ட் செய்த 2 வினாடிகளுக்குள், மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தைத் தொட்டு விடுகிறது. அது போலவே, அதிகபட்சமாக, மணிக்கு 315.4 கிலோ மீட்டர் வரை இதன் வேகத்தை அதிகரிக்கலாம். சிறந்த ஏரோடைனமிக்ஸ் அமைப்பு பெற்ற தலைசிறந்த கார்களின் பட்டியலில், 0.26 என்ற அளவு டிராக் கோ-யெஃபிசியேண்ட் கொண்ட புதிய GT-R காரும் இடம் பெறுகிறது. முகப்புப் பகுதியில், பெரிய கருப்பு கிரில் மற்றும் GT-R சின்னம் போன்றவை பொருத்தப்பட்டு வழக்கமான ஜப்பானிய கார்களின் பாடி ஸ்டைலைப் பெற்றிருந்தாலும், இந்த கார் பார்ப்பதற்கு நவீனமாகவும் வசீகரமாகவும் உள்ளது. பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள விங், இந்த காரின் ஸ்போர்டியான தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டுகிறது. மேலும், அதிக வேகத்தில் செல்லும் போது, இந்த விங் காருக்கு டவுன் ஃபோர்ஸ் கொடுப்பதால், சிறந்த முறையில் டிராக்ஷன் கிடைக்கிறது. GT-R காரின் பின்புறத்தில், வட்ட வடிவத்தில் 4 பெரிய டெய்ல் லைட்கள் இணைக்கப்பட்டுள்ளன. பின்புற தோற்றத்திற்கு மேலும் பொலிவேற்ற 4 எக்ஸாஸ்ட் முனைகளிலும் க்ரோமிய அலங்கரிப்புகள் இடம் பெறுகின்றன.
GT-R காரின் உட்புறம் நவீனமாகக் காட்சியளிக்கிறது. கியர் லீவரின் பின் பகுதியில், இந்த காரை ஸ்டார்ட் செய்ய உதவும் புஷ் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. குளிர்சாதனம் மற்றும் ம்யூசிக் சிஸ்டத்தை நிர்வாகிக்கும் பட்டன்கள்; மற்றும் இந்த காரின் அனைத்து மெக்கானிக்கல் விவரங்களையும் காட்டும் பெரிய டிஸ்ப்ளே ஸ்கிரீன் போன்றவை டாஷ்போர்டில் இடம்பெறுகின்றன. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், அனலாக் மற்றும் டிஜிட்டல் என்ற இரண்டு வித அமைப்புகளின் கலவையில் உள்ளது. வேகம், கார்னரிங் மற்றும் ஜி-ஃபோர்ஸ் போன்ற செயல்திறன் சார்ந்த தகவல்கள் மற்றும் லாப் டைம் நேரம் போன்றவற்றை, டாஷ் போர்டில் உள்ள டிஸ்ப்ளே யூனிட் தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் வாசிக்க : நிஸ்ஸான் நிறுவனம் கிக்ஸ் க்ராஸ்ஓவர் வாகனங்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளதை உறுதி செய்தது.