அடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன்ஸ் நமது பார்வைக்கு
published on நவ 30, 2015 02:38 pm by அபிஜித் for ரெனால்ட் ஃபுளூன்ஸ்
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் ப்லூயன்ஸ் இந்தியாவில் சோபிக்க தவறிய மாடல் என்றாலும் , புதிதாக இப்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகமாக உள்ள அடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன்ஸ் நிச்சயம் உங்களை பரவசப்படுத்தும் !
ஜெய்பூர் : முழுதும் டிஜிடல் மயமாக்கப்பட்டுள்ள ஆம் ஆண்டில் அடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன்ஸ் சில தினங்களுக்கு முன் ப்ரேன்ஸ் நாட்டில் காரின் பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்ட நிலையில் வெள்ளோட்டத்தில் ஈடுபட்டிருந்த போது உளவு படங்களில் சிக்கியது. நிச்சயம் படு நேர்த்தியாக கண்ணை கவருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த அடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன்ஸ் 2016 வெளியாகும் என்று தெரிகிறது இந்தியா ? இந்தியாவில் அறிமுகம் எப்போது என்பது பற்றி இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை. மேலும், இப்போது புழக்கத்தில் உள்ள மாடல் மிகவும் சுமாராகத் தான் விற்பனை ஆகிவரும் நிலையில் ரெனால்ட் நிறுவனம் தனது விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய அடுத்த தலைமுறை ப்லூயன்ஸ் கார்களை எதிர்பார்க்கப்படும் காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று யூகங்கள் தெரிவிக்கிறது.
இந்த காரின் தோற்றத்தைப் பற்றிய கணிப்புகள் , நமக்கு இந்த காரின் உடல் பகுதி வடிவமைப்பை ஓரளவு விளங்கச் செய்கிறது. காரின் வெளிப்புற உடல் பகுதியைப் பொறுத்தவரை முன்புறம் , பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதியில் நிறைய வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு காரின் ஒட்டுமொத்த தோற்றம் மிகவும் நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. ரேனால்டின் தனித்துவமான க்ரில் அமைப்போடு பொருந்தி போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஹெட் லேம்ப் க்ளஸ்டர் மற்றும் கட்டுறுதியான தோற்றம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போனட் இந்த புதிய ப்லூயன்ஸ் கார்களுக்கு தனி அழகை தருகிறது. இந்த புதிய ப்லூயன்ஸ் கார்களின் வடிவமைப்பாளர்கள் பூமரேங் வடிவிலான LED DRLகளை இந்த கார்களில் கொடுக்கவில்லை. ரெனால்ட் நிறுவனத்தின் அறிமுகமாக உள்ள புதிய தலைமுறை வாகனங்கள் ( மீகேன் மற்றும் டலிஸ்மான் ) இந்த பூமரேங் வடிவிலான LED DRL கள் விளக்குகளை பெறும்.
மிகேன் ப்லூயன்ஸ் கார்களின் ஹேட்ச்பேக் வெர்ஷன் ஆகும். காரின் பக்கவாட்டு பகுதியும் பின்புற விளக்குகளின் அமைப்பும் ப்லூயன்ஸ் கார்களில் உள்ளது போலவே இருந்தாலும் , தனித்துவமான பூமரேங் வடிவிலான LED மற்றும் பம்பர் அமைப்பு இந்த காரை ப்லூயன்ஸ் கார்களில் இருந்து நன்கு வேறுபடுத்திக் காட்டுகிறது.
இந்த ப்லூயன்ஸ் கார்கள் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என்றும் தற்போதய ப்லூயன்ஸ் மாடலில் புழக்கத்தில் உள்ள என்ஜின் அமைப்பு எந்த மாற்றமும் இன்றி இந்த புதிய ப்லூயன்ஸ் கார்களிலும் பொருத்தப்படும் என்றும் அறியப்படுகிறது. பெட்ரோல் மாடல்களைப் பொறுத்தவரை 100 பிஎச்பி, 130 பிஎச்பி மற்றும் 205 பிஎச்பி என்று மூன்று என்ஜின் ஆப்ஷன்களிலும் , டீஸல் மாடலைப் பொறுத்தவரை 130 பிஎச்பி திறன் கொண்ட 1.6 லிட்டர் dci என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிகிறது. இருந்தாலும் இங்கே இந்தியாவில், டஸ்டர் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 108 பிஎச்பி திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தான் தற்போதைய ப்லூயன்ஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மூலம் : தியோபிலஸ் ஷின்
இதையும் படியுங்கள்