சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய ஜெனரேஷன் Kia Seltos சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது

க்யா Seltos க்காக பிப்ரவரி 18, 2025 08:52 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஸ்பை ஷாட்கள் மூலமாக வரவிருக்கும் செல்டோஸ் சற்றே பாக்ஸியான வடிவம் மற்றும் ஸ்கொயர் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் கிரில்லை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் சி-வடிவ LED DRL -களும் உள்ளன.

  • ஸ்பை ஷாட்கள் மூலமாக சோனெட் போன்ற எல்இடி ஃபாக் லைட்ஸ் மற்றும் நிமிர்ந்த பானட் ஆகியவற்றை இது கொண்டிருக்கலாம் என தெரிய வருகிறது.

  • உட்புறத்தின் படங்கள் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் இது நவீன தோற்றம் கொண்ட டாஷ்போர்டுடன் வரக்கூடும்.

  • கியா சிரோஸிடமிருந்து 3 ஸ்கிரீன் செட்டப்பை கடன் வாங்கக்கூடும்.

  • பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் ஏசி மற்றும் வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் ஆகியவை அடங்கும்.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ADAS, 360-டிகிரி கேமரா மற்றும் TPMS ஆகியவை அடங்கும்.

  • தற்போதைய-ஸ்பெக் கியா செல்டோஸ் காரை விட சற்று கூடுதல் விலையில் இது வரலாம்.

இந்தியாவில் கியாவின் முதல் காரான கியா செல்டோஸ் ஒரு ஜெனரேஷன் அப்டேட்டுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் காம்பாக்ட் எஸ்யூவி -யின் அடுத்த ஜென் பதிப்பு ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட செல்டோஸ் காரின் உருவம் மறைக்கப்பட்டிருந்தாலும், புதிய செல்டோஸ் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது ​​புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களுடன் பாக்ஸியான வடிவத்தை கொண்டுள்ளது தெரிய வருகிறது. ஸ்பை ஷாட்களில் இருந்து தெரிய வரும் விவரங்களை இங்கே பார்ப்போம்:

ஸ்பை ஷாட்கள் எதை காட்டுகின்றன ?

வரவிருக்கும் கியா செல்டோஸில் தற்போதைய வடிவமைப்பில் இருப்பதை போல இல்லாமல் சதுரமான LED ஹெட்லைட்களை கொண்டிருக்கலாம் என்பதை ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன. பானட் மிகவும் நிமிர்ந்த வகையில் உள்ளது, மேலும் கிரில் செங்குத்து ஸ்லேட்டுகளுடன் பாக்ஸியான வடிவமைப்பை கொண்டுள்ளது. உருவம் மறைக்கப்பட்டிருந்ததால் பம்பரை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. என்றாலும் கூட சோனெட் போலவே புதிய செல்டோஸின் இருபுறமும் இரண்டு ஸ்ட்ரிப்-டைப் எல்இடி ஃபாக் லைட்கள் இருப்பது போல் தெரிகிறது.

பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போதும் புதிய செல்டோஸ் அதிக பாக்ஸி வடிவத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது ஒரு பெரிய எஸ்யூவி போல தோற்றமளிக்கிறது. பின்புற ஃபுல் வெல் பகுதியும் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாக உள்ளது.

பின்புறத்தில் டெயில்கேட் வடிவமைப்பு தெரியவில்லை. ஆனால் சி-வடிவ LED டெயில்லைட்கள் மற்றும் சாய்ந்த LED டர்ன் இண்டிகேட்டர்களை பார்க்க முடிகிறது. டெயில்கேட்டில் ஒரு கிடைமட்டமாக பல்ஜ் ஒன்று உள்ளது. ஒருவேளை இது டெயில்லைட்களை இணைக்கும் லைட் ஸ்ட்ரிப் ஆக இருக்கலாம்.

உட்புறம் பற்றிய விவரங்கள் இல்லை. ஆனால் இது கியா சிரோஸ் போன்ற 3 ஸ்கிரீன் செட்டப் உடன் கூடிய நவீன டேஷ்போர்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொகுப்பு

இதன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது டூயல் 12.3-இன்ச் திரைகள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்னொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்க்கு) மற்றும் கியா சிரோஸ் போன்ற ஏசி கட்டுப்பாடுகளுக்கு 5-இன்ச் டச்-பேஸ்டு ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்களுடன் வர வாய்ப்புள்ளது. மேலும் பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேஷன் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் அப்படியே இருக்கக்கூடும்.

பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் தொடரலாம். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட அம்சங்களுடன் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பதை ஸ்பை ஷாட்ட்டில் செல்டோஸின் முன் கிரில்லில் உள்ள ரேடார் ஹவுசிங் உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க: பாருங்கள்: கியா சிரோஸில் எத்தனை ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன?

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

அடுத்த தலைமுறை கியா செல்டோஸ் தற்போதைய-ஸ்பெக் மாடலின் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

115 PS

160 PS

116 பி.எஸ்

டார்க்

144 Nm

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்*

6-ஸ்பீடு MT, 7-படி CVT

6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

டிரைவ்டிரெய்ன்

ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

*CVT = கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் iMT = கிளட்ச் லெஸ் மேனுவல் கியர்பாக்ஸ்; AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

குறிப்பிடத்தக்க வகையில் ஊடகங்களில் வெளியான சில அறிக்கைகள் வரவிருக்கும் செல்டோஸ் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் ஆப்ஷன் உடன் ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்புடன் வரலாம் என்று தெரிவிக்கிறது. இருப்பினும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

வரவிருக்கும் புதிய தலைமுறை கியா செல்டோஸ் தற்போதைய-ஸ்பெக் மாடலை விட சற்று விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ் விலை தற்போது ரூ.11.13 லட்சம் முதல் ரூ.20.51 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இது தொடரும்.

பட ஆதாரம்

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Kia Seltos

R
rsubba rao
Feb 18, 2025, 12:33:03 PM

When this is coming to India?

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை