Happy Holi

புதிய Volkswagen Tiguan R-Line இந்தியாவில் அறிமுகமாகும் தேதி எது தெரியுமா ?

வோல்க்ஸ்வேகன் டைகான் 2025 க்காக மார்ச் 13, 2025 08:26 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் என்பது அடிப்படையில் சர்வதேச-ஸ்பெக் மூன்றாம் தலைமுறை டிகுவான் காரின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட வெர்ஷன் ஆகும். இது 2023 செப்டம்பரில் உலகளவில் காட்சிப்படுத்தப்பட்டது.

  • இது இந்தியாவில் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட் (CBU) ஆக விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

  • டூயல் பாட் ஹெட்லைட்கள், 20-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் கிரில் மற்றும் முன் டோர்களில் 'ஆர்' பேட்ஜ்களை வெளிப்புறம் பார்க்க முடிகிறது.

  • பிளாக் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் கேபின் தீம் கொடுக்கப்படலாம்.

  • 12.9-இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளை கொண்டிருக்கலாம்.

  • பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை கொடுக்கப்படலாம்.

  • தற்போதைய-ஸ்பெக் டிகுவானில் உள்ள அதே 190 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை இது பயன்படுத்தக்கூடும்.

  • விலை ரூ.55 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆர்-லைன் ஏப்ரல் 14, 2025 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் இது முதல் முறையாக இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் முதன்முதலில் புதிய தலைமுறை டிகுவானை 2023 ஆண்டு செப்டம்பரில் உலகளவில் வெளியிட்டது. இப்போது அதன் ஸ்போர்ட்டியர் பதிப்பான ‘ஆர்-லைன்' இந்தியாவுக்கு வரவுள்ளது. இது கட்டமைக்கப்பட்ட யூனிட் (CBU) ஆக விற்கப்படலாம். வரவிருக்கும் டிகுவான் ஆர்-லைன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

ஸ்போர்ட்டியான தோற்றம்

டிகுவான் ஆர்-லைனின் ஒட்டுமொத்த வடிவமைப்பு அதன் வழக்கமான பதிப்பை போலவே உள்ளது. இது எல்இடி டிஆர்எல் ஸ்ட்ரிப் -களுடன் கூடிய டூயல்-பாட் LED ஹெட்லைட்களை கொண்டுள்ளது, இது வழக்கமான மாடலில் இதை தனித்து காட்ட 'ஆர்' பேட்ஜை உள்ளடக்கிய கிளாஸி பிளாக் டிரிம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. டைமண்ட் கட் வடிவத்துடன் பம்பரில் பெரிய ஏர் இன்டேக் சேனல்கள் உள்ளன. இது டூயல்-டோன் 20-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. மேலும் முன் கதவுகளில் ‘ஆர்' பேட்ஜ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் பிக்சலேட்டட் டீடெயில் உடன் கனெக்டட் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் டெயில்கேட்டில் 'டிகுவான்' லோகோவை கொண்டுள்ளது. முன் பம்பரை போலவே பின்புற பம்பரும் டைமண்ட் வடிவ எலமென்ட்களை கொண்டுள்ளது.

கேபின் மற்றும் வசதிகள்

டைகுன் -ன் ஸ்போர்ட்டியர் பதிப்பாக இருப்பதால் டைகுன் ஆர்-லைன் ஆனது பிளாக் கலர் கேபின் தீம் மற்றும் கருப்பு சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். டாஷ்போர்டில் இல்லுமினேட்டட் எலமென்ட்களுடன் அதன் நீளம் முழுவதுக்கும் உள்ள ஒரு கிளாஸி பிளாக் ஸ்ட்ரிப் கொடுக்கப்படலாம். ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைனில் 12.9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் எலக்ட்ரானிக் அட்ஜஸ்ட்களுடன் கூடிய ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகள் இருக்கலாம்.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது மல்டி ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றை கொண்டிருக்கும். லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் மிட்டிகேஷன் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் உடன் இது வரலாம்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

டிகுவான் ஆர் லைனில் தற்போதைய-ஸ்பெக் மாடலில் உள்ள அதே 2-லிட்டர் TSI இன்ஜின் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விவரங்கள் இங்கே:

இன்ஜின்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

190 PS

டார்க்

320 Nm

டிரான்ஸ்மிஷன்

7-ஸ்பீடு DCT*

டிரைவ்டிரெய்ன்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

*DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் விலை ரூ.55 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டுஸான், மற்றும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Volkswagen டைகான் 2025

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை