புதிய Nissan X-ட்ரெயில் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது, இந்தியாவில் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
published on ஜூன் 26, 2024 06:18 pm by dipan for நிசான் எக்ஸ்-டிரையல்
- 82 Views
- ஒரு கருத்தை எழுதுக
நிஸான் இந்தியாவின் போர்ட்ஃபோலியோவில் மேக்னைட்டுடன் சேர்ந்து விற்பனை செய்யப்படும் ஒரு காராக நிஸான் X-ட்ரெயில் இருக்கும்.
-
இந்தியாவில் நிஸான் நான்காம் தலைமுறை X-ட்ரெயில் எஸ்யூவியின் டீஸரை வெளியிட்டுள்ளது.
-
இது CBU (முற்றிலும் கட்டப்பட்ட யூனிட்) ஆக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்.
-
உலகளவில் இது 12V ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது.
-
இந்தியா-ஸ்பெக் எக்ஸ்-டிரெயிலின் பவர்டிரெய்ன்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
-
எஸ்யூவி ரியர் வீல் டிரைவ் (RWD) அல்லது ஃபோர் வீல் டிரைவ்(4WD) உடன் கிடைக்கிறது.
-
இது ஜூலையில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.40 லட்சத்தில் தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
இந்தியாவில் நிஸான் நிறுவனம் அதன் புதிய எஸ்யூவியான நிஸான் X-ட்ரெயில் காரைன்அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் புதிய எஸ்யூவிக்கான முதல் டீசரை வெளியிட்டுள்ளதால் இதைச் சொல்கிறோம். மேக்னைட் எஸ்யூவி -யுடன் அதன் இந்திய போர்ட்ஃபோலியோவில் நிஸானின் ஒரே காராக X-ட்ரெயில் இருக்கும். புதிய X-ட்ரெயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
வெளிப்புறம் மற்றும் உட்புறம்
சர்வதேச அளவில் X-ட்ரெயில் 5 மற்றும் 7 சீட் செட்டப்பில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவி -யின் அளவுகளின் விவரங்கள் பின்வருமாறு:
அளவுகள் |
நிஸான் X-ட்ரெயில் எஸ்யூவி |
நீளம் |
4,680 மி.மீ |
அகலம் |
1,840 மி.மீ |
உயரம் |
1,725 மி.மீ |
வீல்பேஸ் |
2,705 மி.மீ |
வடிவமைப்பைப் பொறுத்தவரை இது LED லைட்களுடன் ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப்பை கொண்டுள்ளது. மற்றும் நிஸானின் சமீபத்திய V-மோஷன் வடிவமைப்பைக் கொண்ட பெரிய கிரில்லை கொண்டுள்ளது. எஸ்யூவியில் 18- அல்லது 19-இன்ச் அலாய் வீல்கள், வேரியன்ட்டை பொறுத்து இருக்கும். இது LED டெயில் லைட்ஸை கொண்டுள்ளது. ஆனால் லைட் பார் இல்லை, இது இன்று பெரும்பாலான நவீன எஸ்யூவி -களில் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.
உட்புறம் டூயல்-டோன் பிளாக் மற்றும் டேன் கலர் லெதரெட், எலமென்ட்களில் சில்வர் ஆக்ஸன்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்திய மாடலில் உள்ள இன்ட்டீரியர் கலரில் மாற்றங்கள் இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
X-ட்ரெயில் 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பவர்டு டெயில்கேட், மெமரி ஃபங்ஷன் கொண்ட ஹீட் & பவர்டு முன் இருக்கைகள், 10-ஸ்பீக்கர் பிரீமியம் போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் யூனிட் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதே அளவிலான ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 10.8-இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவையும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு வசதிகளில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், முன் மோதல் எச்சரிக்கை மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) தொகுப்பும் கொடுக்கப்படலாம்.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
சர்வதேச அளவில் நிஸான் X-ட்ரெயில் ஆனது 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 12V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 2 வீல் டிரைவ் (2WD) முறையில் 204 PS மற்றும் 330 Nm மற்றும் ஃபோர் வீல் டிரைவ்(4WD) 213 PS மற்றும் 495 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இதில் 8 ஸ்பீடு CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
இந்தியா வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
2024 நிஸான் X-ட்ரெயில் இந்தியாவில் ஜூலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். இதன் விலை ரூ. 40 லட்சத்திற்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன், டொயோட்டா ஃபார்ச்சூனர், மற்றும் எம்ஜி குளோஸ்டர் உடன் போட்டியிடும்.
வாகனங்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடருங்கள்.
0 out of 0 found this helpful