புதிய மினி கன்ட்ரிமேன்: அடுத்த ஆண்டு இறுதியில் வருகிறது
மினி கூப்பர் கன்ட்ரிமேன் க்கு published on jul 23, 2015 03:52 pm by manish
- 5 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: மினி கன்ட்ரிமேனின் தற்போதைய மாடலுக்கு பதிலாக, F60 என்ற குறியீட்டு பெயருடன் கூடிய புதிய மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 - ஆண்டின் துவக்கத்தில் மினி கப்ரியோலேட் என்ற புதிய மாடலையும், கன்ட்ரிமேனின் புதிய மாடலை ஆண்டின் இறுதியிலும் மினி வெளியிட உள்ளது.
நான்கு முறை டாகர் ரேலி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மினி எக்ஸ்-ரெய்டு காரின் ஸ்போர்ட்டி ஸ்டைலுடன் புதிய மாடல் மினி கன்ட்ரிமேன் கார்கள் உருவாக உள்ளது. இதன்மூலம் யுகேஎல் பிளாட்பாமின் அடிப்படையில் அமைந்த தற்போதுள்ள மாடலை விட அதிக இடவசதியுடன் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரடுமுரடான பாதைகளிலும் ஓட்ட தகுந்த ஒரு மாடலையும் கன்ட்ரிமேன் வெளியிட உள்ளது. பிஎம்டபிள்யூ 2 சிரிஸ் ஆக்டிவ் டுரரை போல, ஹைபிரிட் பவர்-டிரெய்ன் மற்றும் நான்கு சக்கரங்களிலும் ஓடும் திறன் போன்ற தன்மைகள் புதிய மினி கன்ட்ரிமேன் மாடலிலும் அமையப்பெற்றிருக்கும். காரின் நீளம் 150 மிமி மற்றும் அகலம் 10 மிமி அதிகரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு பெரியதாக தெரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய கன்ட்ரிமேன் காரின் கால் வைப்தற்கான இடவசதியும் கூடுதலாகவே இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்
மினியின் எதிர்கால வெளியீடுகளில், 5 புதிய கார்களை களமிறக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கப்ரியோலேட்: மினி சூப்பர்லேக்கிரா, கூப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் டிவின்ஸ்: கிளப்மேன் மற்றும் கப்ரியோலேட். புதிய கன்ட்ரிமேன் இந்த பட்டியலில் 5 வது மாடலாக சேர்ந்துள்ளது. மினியின் மேற்கண்ட 5 மாடல்களும் வெளிவர உள்ளது.
- Renew Mini Countryman Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Best Health Insurance Plans - Compare & Save Big! - (InsuranceDekho.com)
0 out of 0 found this helpful