சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய Mini Cooper S மற்றும் Countryman EV கார்கள் இந்த தேதியில் வெளியிடப்படவுள்ளன

புதிய BMW 5 சீரிஸ் உடன் லேட்டஸ்ட் மினி கார்களின் விலை விவரங்கள் ஜூலை 24 அன்று அறிவிக்கப்படும்.

  • மினி நான்காவது தலைமுறை கூப்பர் S மற்றும் முதல் கன்ட்ரிமேன் EV ஆகியவற்றை இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

  • வெளிப்புறத்தில் எண்கோண கிரில் மற்றும் அனைத்து LED லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • அவற்றின் கேபின்கள் மினிமலிஸ்டிக் கவர்ச்சியைக் கொண்டுள்ளன, சுற்று 9.4-இன்ச் OLED தொடுதிரை மையமாக உள்ளது.

  • 7-ஸ்பீடு DCT உடன் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் புதிய கூப்பர் S ஐ வழங்க மினி.

  • கன்ட்ரிமேன் EV ஆனது 66.4 kWh பேட்டரி பேக்குடன் WLTP உரிமை கோரப்பட்ட 462 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது.

  • Mini 2024 கூப்பர் S காரின் விலை ரூ. 47 லட்சத்தில் இருந்து தொடங்கலாம். கன்ட்ரிமேன் EV -யின் விலை ரூ. 55 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் ( விலை விவரங்கள் அனைத்தும், எக்ஸ்-ஷோரூம் -க்கானவை).

நான்காம் தலைமுறை மினி கூப்பர் எஸ் மற்றும் முதல் மினி கன்ட்ரிமேன் இவி ஆகியவற்றுக்கான முன்பதிவு தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த இரண்டு மாடல்களும் ஜூலை 24 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மினி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டு மினி மாடல்களிலிருந்தும் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதற்கான விரைவான விவரங்கள் இங்கே:

மினி கூப்பர் S

கூப்பர் S கார் இப்போது அதன் 4 -வது ஜென் அவதாரத்தில் அதன் பிரபலமான கிளாஸிக் தோற்றத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் புதிய எண்கோண வடிவ கிரில், LED DRL -களுடன் கூடுய வட்ட வடிவ LED ஹெட்லைட்கள், 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் கொண்ட LED டெயில் லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய கூப்பர் S காரில் 2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (204 PS/300 Nm) கொடுக்கப்பட்டுள்ளது. இது 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது இது முன் சக்கரங்களை இயக்குகிறது. இது இப்போதுள்ள பதிப்பை விட சக்தி வாய்ந்தது மற்றும் 0-100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டும்.

வொயிட் கலர் அப்ஹோல்ஸ்டரி உடன் ஒரு பிளாக் கேபின் தீமை பெறுகிறது. மேலும் அதன் சின்னமான வட்ட தீம் தக்கவைத்துக் கொண்டுள்ளதோடு ஒரு மினிமலிஸ்டிக் தோற்றத்தைக் கொண்டுள்ளது. 9.4-இன்ச் வட்ட வடிவ OLED டச் ஸ்கிரீன், பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள் ஆகியவை இந்த காரில் உள்ள வசதிகள் ஆகும். 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை வழங்கியுள்ளது.

மினி கன்ட்ரிமேன் இவி

முதன்முதலில் மினி கன்ட்ரிமேன் EV ஆனது கிளாசிக் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு ஒரு புதிய தோற்றத்தைப் பெறுகிறது. ஆல்-எலக்ட்ரிக் கன்ட்ரிமேன் 66.4 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது WLTP- கிளைம்டு ரேஞ்ச் 462 கி.மீ ஆகும். இது 204 PS மற்றும் 250 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது. கன்ட்ரிமேன் EV ஆனது 0 முதல் 100 கி.மீ வேகத்தை 8.6 வினாடிகளில் எட்டும்.

வெளிப்புற வடிவமைப்பில் ஒரு எண்கோண கிரில், 20-இன்ச் அலாய் வீல்கள், LED DRL -கள் மற்றும் LED டெயில் லைட்ஸ் கொண்டபுதிய LED ஹெட்லைட்கள் ஆகியவை அடங்கும். 2024 மினி கன்ட்ரிமேன் EV -யின் இன்ட்டீரியர் புத்தம் புதியது மற்றும் வட்ட வடிவ சென்ட்ரல் டிஸ்பிளே ஹவுஸிங் உடன் இன்ட்டீரியர் தீம் மினிமலிஸ்ட்டிக் ஆக உள்ளது. டாஷ்போர்டிலும் சென்டர் கன்சோலை சுற்றிலும் அதன் EV தன்மையை காட்டுவதற்காக புளூ கலர் டிரிம் இன்செர்ட்களை பெறுகிறது. அதே நேரத்தில் மினி டேன் அப்ஹோல்ஸ்டரியுடன் இந்த காரை வழங்கும்.

9.4-இன்ச் OLED டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட்ஸ், ஆட்டோ ஏசி மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய வசதிகள் உள்ளன. அதன் பாதுகாப்பு வலையில் டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் (ADAS) அடங்கும்.

மேலும் படிக்க: இந்தியாவில் EV வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த BIS புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்துகிறது

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

நான்காவது ஜெனரேஷன் மினி கூப்பர் S ஆரம்ப விலை ரூ.47 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எலக்ட்ரிக் மினி கன்ட்ரிமேன் ரூ.55 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலை இருந்து தொடங்கலாம். மினி கூப்பர் S காருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை. கன்ட்ரிமேன் EV ஆனது ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6, மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் உடன் போட்டியிடும்.

வாகனங்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடருங்கள்.

Share via

Write your Comment on Mini கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை