புதிய மஹிந்திரா KUV100-யின் ட்ரைலர் மூலம் பின்புற தோற்றம் வெளிப்பட்டது

published on டிசம்பர் 29, 2015 10:14 am by nabeel for மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி

புதுடெல்லி:

KUV100

நாம் புத்தாண்டிற்குள் நுழையும் இந்நேரத்தில், 2016 ஆம் ஆண்டின் அதிக எதிர்பார்ப்பைக் கொண்ட அறிமுகங்களில் முதலாவதாக வெளிவருவது KUV100 ஆகும். இந்த காரை வெளிப்படுத்திய மஹிந்திரா நிறுவனம், இவ்வாகனத்தின் பின்புறம் மற்றும் உட்புற அமைப்பை குறித்த விபரங்களை வெளியிடவில்லை. எனினும் உட்புற அமைப்பு ஏற்கனவே வேவுப் பார்க்கப்பட்ட நிலையில், பின்புற தோற்றம் தொடர்ந்து மறைப்பொருளாகவே இருந்து வந்தது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, மஹிந்திரா நிறுவனம் ஒரு சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) ஆக மாறி, ‘இந்த இளம் SUV’ (த யங் SUV) உடன் பாலிவுட் நட்சத்திரமான வருண் தவான் தோன்றும் KUV100-யின் சமீபகால ட்ரைலரின் மூலம், அதன் பின்புற தோற்றத்தின் ஒரு கண்ணோட்டத்தை அளித்தது. மேலும் இந்த ட்ரைலரின் மூலம் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளின் விபரங்களும் நமக்கு கிடைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் மூலம் இவ்வாகனத்தின் பின்புற தோற்றத்தின் படங்கள் மட்டுமே அளிக்கப்பட்டாலும், நாங்கள் அதை சரியாக படம் பிடித்துள்ளதால், உங்களுக்கு ஒரு நீண்ட காட்சி அமைப்பை பெற முடியும்.

KUV100

பின்புற அமைப்பில், பாடியுடன் இணைந்து செதுக்கப்பட்டது போல சிறப்பாகவும், அழகாகவும் அமைந்த ஒரு ஸ்பாய்லர் காணப்படுகிறது. கிளெஸ்டரோடு கூட வளைந்த நிலையில், பாடி லைனுக்கு மேற்புறமாக, ஒரு சூழ்ந்த அமைப்பாக டெயில்லைட் கிளெஸ்டர் அமைந்துள்ளது. புட் கேட்டின் மேல்நடு பகுதியில் மஹிந்திராவின் லோகோ இடம்பெற்றுள்ளது. அதன் கீழான பக்கவாட்டில் KUV100 என்று எழுதப்பட்டுள்ளது. பின்பக்க வைப்பர் ஆம் மட்டுமே இடம்தவறி அமைக்கப்பட்டது போன்று காட்சியளிக்கிறது. மஹிந்திரா லோகோவை ஒட்டிய பகுதியில் இது அமையப் பெற்று, ஒரு காயமடைந்த விரலை போல தோற்றம் அளிக்கிறது. இவை தவிர பூட் கேட்டில் எந்த ஒரு அம்சங்களும் இடம் பெறவில்லை. இதிலிருந்து மஹிந்திரா நிறுவனம் ஒரு நிதானமான தோற்றத்தை அளிக்க விரும்புவதாக தெரிகிறது.

KUV100

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை, KUV-யின் 4 வகைகளிலும் ஏர்பேக்குகளுடன் கூடிய தரமான ABS-யை தேர்விற்குட்பட்டதாக கொண்டுள்ளது. ஹூண்டாய் கிராண்டு i10, ஃபோர்டு ஃபிகோ, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா ஸீகா ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில், இந்த காரின் விலை ரூ.4-7 லட்சம் என்ற வட்டத்திற்குள் அமைகிறது. மஹிந்திரா டீலர்ஷிப்களில், ரூ.10,000 மூலம் இந்த காருக்கான முன்பதிவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.

இந்த காரில், mஃபால்கன் என்று அழைக்கப்படும் மஹிந்திராவின் ஒரு புதிய என்ஜின்களின் குடும்பத்தை கொண்டுள்ளது. பெட்ரோல் மில்லில் ஒரு 1.2-லிட்டர், 3-சிலிண்டர் யூனிட் மூலம் 5,500rpm-ல் 82bhp ஆற்றலையும், 3,500rpm-ல் 114Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளித்து, mஃபால்கன் G80 என்று அழைக்கப்படுகிறது. டீசல் மில்லில் ஒரு 1.2-லிட்டர், 3-சிலிண்டர் டர்போ யூனிட் மூலம் 3,750rpm-ல் 77bhp ஆற்றலையும், 1,750 முதல் 2,250rpm-க்குள் 190Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளித்து, mஃபால்கன் D75 என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் ஒரு 5-ஸ்பீடு மேனுவல் உடன் பொருத்தப்பட்டு கிடைக்கும் நிலையில், எதிர்காலத்தில் மஹிந்திரா நிறுவனம் மூலம் ஒரு ஆட்டோமேட்டிக் வகை அறிமுகம் செய்யப்படலாம். எங்கள் கைகளுக்கு கிடைத்து, ஒரு முறை இதை ஓட்டி பார்த்த பிறகே, இந்த என்ஜின்களின் செயல்பாடுகளை குறித்து கருத்து கூற முடியும் என்பதால், தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா KUV 100 NXT

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience