புதிய ஜாகுவார் XF மாடல்: நுர்பர்க்ரிங்-கில் உளவுப்படத்தில் சிக்கியது
ஜாகுவார் எக்ஸ்எப் க்காக நவ 02, 2015 11:44 am அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
அடுத்து வெளிவர உள்ள புதிய ஜாகுவார் XF சேடனின் நீண்ட வீல்பேஸ் பதிப்பின் ஒரு சோதனை வாகனம், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட போது உளவுப்படத்தில் சிக்கியது. இந்த ஆடம்பர சேடனை நுர்பர்க்ரிங்கில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட போது உளவுப் படத்தில் சிக்கியது. இந்த காரை பார்த்தால், தரமான XF காரில் இருந்து எந்த மாற்றத்தையும் பெற்றதாக தெரிவதில்லை. இந்த கார் நீளமான வீல்பேஸை கொண்டிருப்பதால், பின்புறத்தில் ஒரு தாராளமான கேபினை கொண்டு, ஆடம்பரமான மற்றும் இதமான உள்ளறை அம்சங்களின் உருவாக்கத்தை அதிகமாக பெற்றிருக்கலாம். மேலும் இந்த நீண்ட வீல்பேஸை கொண்டிருப்பதன் மூலம் வழக்கமான தரமான XF-ன் பின்புற கதவை விட, சற்று நீண்ட பின்புற கதவை பெற்றிருக்கும் என்பது விளங்குகிறது. இந்த சோதனை வாகனம், கருமை பின்புற விண்டோக்கள் மற்றும் விண்டுஷில்டு ஆகியவற்றை பெற்றிருந்தது. ஆனால் பின்புற கேபினின் மேம்பாடுகள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்த நீண்ட வீல்பேஸ் அமைப்பின் மூலம் கிடைக்கும் இன்னொரு உபயோகம் என்னவெனில், B-பில்லரின் பின்புறம் கூடுதலான இடவசதியை பெற முடிகிறது. இதனால் பின்புற கேபின் இடவசதி அதிகரித்ததன் விளைவாக, பின்புற பயணிகளுக்கான கால்களை வைக்கும் இடம் தாராளமாக அளிக்கப்பட்டு, சொகுசாக மாற்றப்பட்டிருக்கும். தற்போதைய தரமான ஜாகுவார் XF மற்றும் XF L ஆகிய வகைகளை காட்டிலும், இந்த கார் குறைந்தது சில இன்ச் நீளம் அதிகமாக இருக்கலாம். ஆனால் தற்போதைய இந்த மாடல்களோடு ஒப்பிட்டு, அடுத்து வரவுள்ள இந்த கார் துல்லியமாக எவ்வளவு நீளம் அதிகமாக இருக்கும் என்பது சரியாக தெரியவில்லை. இந்த கேபின் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ள செய்தி அவ்வளவு வரவேற்பை பெறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் தற்போது XF L மற்றும் தரமான XF கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் JLR-ன் புதிய 2.0-லிட்டர் இன்ஜினியம் மற்றும் 3.0-லிட்டர் V6 பெட்ரோல் மற்றும் டீசல் மில்ஸ் ஆகியவை தான், இந்த காரிலும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. எனவே இந்த காரின் எடைக்கு ஏற்ற ஆற்றல் (பவர் டூ வெய்ட்) விகிதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், இயந்திரவியல் மேம்பாடுகளில் மாற்றம் இருக்கலாம். இந்த மாடலை சீன சந்தையை குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் டெஸ்லா, ஆடி போன்ற பல கார் தயாரிப்பாளர்கள், அந்நாட்டு சந்தையில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மேலும் அதிகமான பின்புற இடவசதியை பெற்ற கார்களை விரும்பும் சார்பினரை கொண்ட சீன வாடிக்கையாளர் தளத்தை புதிய XF L போன்ற கார்கள் மூலம் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த காரை, அடுத்த ஆண்டு நடைபெறும் பீஜிங் மோட்டாரில் ஜாகுவார் நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது.
மேலும் படிக்க: