அதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம்
published on பிப்ரவரி 18, 2016 10:20 am by manish for ஜாகுவார் எப் டைப் 2013-2020
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
உலகெங்கிலும் உள்ள மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ஜாகுவார் SVR கார்களின் வரிசையில், அடுத்ததாக வெளிவரவுள்ள F- டைப் ஸ்போர்ட்ஸ் காரின் அதிகாரபூர்வமான வீடியோவை, பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான ஜாகுவார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது, புதிய காரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. F – டைப் கார் வரிசையில் இடம் பெறும் இந்தப் புதிய SVR மாடல், கன்வர்டபிள் மற்றும் கூபே என்ற இரண்டு வகைகளிலும் கிடைக்கும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில் ஜாகுவார் F – டைப் SVR கார் காட்சிக்கு வைக்கப்படும். ஜாகுவார் நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் வரிசை என்ற நற்பெயரை, SVR மாடல் இன்று வரை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஸ்டாண்டர்ட் ஸ்போர்ட்ஸ் காருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஜாகுவார் F டைப் SVR காரின் வெளிப்புறத் தோற்றத்தில் பெரிய மாற்றங்களையோ, மேம்பாடுகளையோ உங்களால் பார்க்க முடியாது. ஆனால், இந்நிறுவனத்தினர் இந்த கார் முழுவதிலும் பல நுட்பமான மேம்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியும். ஏரோடைனமிக் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள முன்புறபம்பர் பகுதியை, ஜாகுவார் நிறுவனம் ஏரோடைனமிக் பாக்கேஜ் என்று அழைக்கிறது. பம்பர் பகுதி தவிர்த்து, ஏனைய பகுதிகளில் செயல்திறனை மேம்படுத்தும் அம்சங்களான கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்டிவ் ரியர் விங், ஆண்டி-ரோல் பார், அப்ரெட்டட் சேசிஸ், தட்டையான அன்டர்ஃபுளோர், அகலமான டயர்கள், கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ள மேல் விதானம், பின்புற வென்ச்சுரி மற்றும் இன்கோனல் எக்ஸாஸ்ட் அமைப்பு போன்றவை இடம்பிடிக்கின்றன.
ஜாகுவார் F டைப் R மற்றும் V8S வேரியண்ட்களில் பொருத்தப்பட்டுள்ள அதே 5.0 லிட்டர் V8 பெட்ரோல் இஞ்ஜினில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய SVR மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. 575 PS என்ற அளவில் சக்தி மற்றும் 700 Nm என்ற அளவில் அதிகபட்ச டார்க்கையும், இந்த இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. புதிய F டைப் SVR மாடலின் எடை, F டைப் R ஸ்போர்ட்ஸ் காரை விட 25 கிலோ குறைவாகவே இருக்கிறது. இதன் விலை வரம்பு, ரூ. 87.16 லட்சங்கள் முதல் ரூ. 89.11 லட்சங்கள் வரை உள்ளது. சர்வதேச சந்தையில், புதிய F டைப் SVR மாடலுக்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்ட இந்த வேளையில், இந்தியாவில் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கான விடையை ஜாகுவார் நிறுவனம் இன்று வரை அறிவிக்கவில்லை.
ஜாகுவாரின் புதிய SVR மாடல் கார் எப்படி சீறிப் பாய்ந்து சாலைகளில் செல்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்: