ஜாகுவார் F -டைப் கார்களின் இன்டீரியர்ஸ் அழகினை விளக்கும் பிரத்தியேக படங்களைக் கொண்ட புகைப்பட கேலரி !
published on பிப்ரவரி 08, 2016 10:16 am by saad for ஜாகுவார் எப் டைப் 2013-2020
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஆடம்பரமான தயாரிப்புக்களை காட்சிப்படுத்தும் விஷயத்தில் மற்ற எந்த கார் தயாரிப்பாளர்களையும் விட ஜாகுவார் குறைந்து விடவில்லை . இந்த பிரிட்டிஷ் நாட்டு கார் தயாரிப்பாளர் தங்களது F - பேஸ் SUV வாகனத்துடன் இணைந்து தங்களது XE மற்றும் XF செடான் கார்களையும் காட்சிக்கு வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் ஜாகுவார் அரங்கத்தை அதிர வைத்தது எது என்று பார்த்தால் அது F – டைப் வாகனங்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது. அனைத்து ரேஸ் பிரியர்களையும் பரவசப்படுத்தி தன பக்கம் சுண்டி இழுத்தது F - டைப் வாகனங்கள் என்று சொல்லும் அளவுக்கு பெரும்பாலானோர் இந்த வாகனங்களை வட்டமிட்டனர். இந்த ரேசிங் கார் இப்போது கூப் மற்றும் கன்வர்டிபல் என்று இரண்டு வடிவங்களில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 3.0 லிட்டர் V6 பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படும் இந்த சூப்பர் கார் 340hp அளவு சக்தி மற்றும் அதிகபட்சமாக 450Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் பெற்றது. இந்த F -டைப் கார்களிலேயே அதிக சக்தி கொண்ட F -டைப் R கூப் கார்களில் அதிகபட்சமாக 550hp அளவு சக்தி மற்றும் 680Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் 5.0 லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எட்டு வேக ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த F - டைப் R கூப் கார்கள் 100 கி.மீ வேகத்தை கண்ணிமைக்கும் 4.2 நொடிகளில் தொட்டுவிடுகிறது என்று சொல்லும் போது இந்த சூப்பர் காரின் ஆற்றலை நாம் நன்கு உணர முடிகிறது. அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் புயலென இந்த கார்கள் பாய்ந்து செல்லும் என்றும் தெரிய வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த F - டைப் காரின் பிரத்தியேகமான படங்களைப் பார்க்கும் போதே உங்களுக்கு இந்த உண்மைகள் நன்கு விளங்கும்.
மேலும் வாசிக்க : ஜாகுவார் F டைப்