டீசல் கார்களின் தடைக்கு ஜாகுவார் நிறுவனம் பதில்: டில்லியில் உள்ள காற்றின் தரம், கார்கள் வெளியிடும் புகையை விட மிகவும் மாசடைந்து இருக்கிறது
published on பிப்ரவரி 09, 2016 12:21 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவின் தலைநகரான டில்லியில் 2,000 சிசி மற்றும் அதற்கும் மேற்பட்ட இஞ்ஜின் திறன் கொண்ட கார்களை தடை செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, ஜகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்திற்கு மிகவும் வருத்தம் தருவதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில், ஜகுவார் டீசல் கார்கள் டில்லியில் வெளியிடும் புகையின் அளவுடன் ஒப்பிடும் போது, டில்லியில் உள்ள காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஜகுவாரின் XJ சேடன் காரில் 3.0 லிட்டர் V6 டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. XF சேடன் மாடல், ஒரு பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் இரண்டு டீசல் இஞ்ஜின்கள் என்ற ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் உள்ள டீசல் இஞ்ஜின்கள் 2 லிட்டரை விட அதிகமான கொள்ளளவில் வருகின்றன. அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள XE சேடன் காரில் இரண்டு விதமான பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷங்கள் வருகின்றன. மேலும், தனது ஏனைய மாடல்களிலும் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனைத் தரலாமா என்று ஜாகுவார் நிறுவனம் யோசித்து வருகிறது.
‘சமீபத்திய ஐரோப்பிய VI கட்டுப்பாட்டுத் திட்டங்களில், டில்லியில் உள்ள காற்றை சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த வகை வாகனங்கள் ஒரு தூசி உறிஞ்சியைப் (வாக்யூம் கிளீனர்) போல காற்றை சுத்தம் செய்கின்றன.... ஏனெனில், இந்த கார்கள் வெளியிடும் புகையை விட, அவை உள்ளிழுக்கும் காற்றின் தரம் மிகக் குறைவாக இருக்கிறது,’
ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO, திரு. ரால்ஃப் ஸ்பெத், இந்நிறுவனத்தின் வருத்தத்தைப் பற்றி PTI செய்தியாளரிடம் குறிப்பிடும் போது, “நீங்கள் ஏன் இத்தகைய வாகனங்களைத் தடை செய்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மன்னிக்கவும், இது என் புலங்களுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்கிறது,” என்று கூறினார். மேலும், அவர், “சமீபத்திய ஐரோப்பிய VI கட்டுப்பாட்டு திட்டங்களில் முற்போக்கு தொழில்நுட்ப அம்சங்கள் அடங்கியுள்ளன. அவற்றின் மூலம், நாம் டில்லியில் உள்ள காற்றை சுத்தம் செய்யலாம். ஏனெனில், இந்த வகை வாகனங்கள் ஒரு வாக்யும் கிளீனரைப் போல செயல்படுகின்றன.... ஏனெனில், அவை வெளியிடும் புகையின் தரத்தை விட, டில்லியில் உள்ள காற்றின் தரம் மிகவும் மாசடைந்து உள்ளது,” என்றார்.
சுற்றுச்சூழல் மாசுபாடைக் குறைக்க, பழைய கார்களைத் தடை செய்வது மற்றும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கட்டுப்படுத்துவது போன்ற வேறு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்று அவர் கூறினார். தவறான ஆலோசனை மற்றும் தவறான தொழில்நுட்பம் மூலம் ஒரு பிரச்சனைக்கு, ஒரே ஒரு தீர்வை மட்டும் தருவது சரியான தீர்வாகாது, என்றும் அவர் தனது உறுதியான கருத்தைத் தெரிவித்தார். “நான் ஒரு இஞ்ஜினியர். உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆணை, ஒரு போதும் வாகன சந்தையையோ மற்றும் வேறு எதையும் பாதிக்காது. இந்த முடிவு எந்த விதத்தில் தொழில்நுட்பத்தைச் சார்ந்ததாக இருக்கிறது? தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் போது, இத்தகைய முடிவு நியாயமற்றதாக இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க : தேசிய பசுமை தீர்பாயத்தின் (NGT) உத்தரவு படி , ஜனவரி 6 ஆம் தேதி வரை டெல்லியில் அனைத்து டீசல் வாகனங்களின் பதிவும் ( ரெஜிஸ்ட்ரேஷன்) நிறுத்தப்படுகிறது.
0 out of 0 found this helpful