மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.
published on பிப்ரவரி 16, 2016 12:30 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை நகரில் தற்போது நடைபெற்று வரும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் வோல்க்ஸ்வேகன் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரான தங்களது தயாரிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளன. வோல்க்ஸ்வேகன் தனது விரைவில் அறிமுகமாக உள்ள அமியோ கார்களையும் , 2016 XE மற்றும் XJ கார்களை ஜாகுவார் நிறுவனமும் மேடையேற்றி உள்ளன. ஜாகுவார் XE கார்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 39.90 லட்சங்களுக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) அறிமுகப்படுத்தப்பட்டன. .
முதல் முதலாக பிப்ரவரி 02., 2016 -ல் வோல்க்ஸ்வேகன் தனது அமியோ கார்களை காட்சிக்கு வைத்தது. காம்பேக்ட் செடான் ரக காரான இந்த அமியோ கார்களை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் முழுதும் இந்தியாவில் உள்ள தங்களது சக்கன் தொழிற்சாலையில் உருவாக்கி உள்ளது. போலோ ஹேட்ச்பேக் மற்றும் வெண்டோ செடான் கார்களில் உள்ள ஏராளமான அம்சங்கள் இந்த கார்களில் இணைக்கப்பட்டுள்ளன.. க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மழை உணரும் சென்சார்கள் என்று இதன் பிரிவில் உள்ள மற்ற கார்களில் இல்லாத சிறப்பம்சங்கள் இந்த அமியோ கார்களில் இடம் பெற்றுள்ளன. 74bhp சக்தியையும் 110Nm அளவுக்கு டார்கையும் உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் மூன்று -சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றுடனும், 88.7bhp அளவு சக்தி மற்றும் 230Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் 1.5 லிட்டர் நான்கு - சிலிண்டர் TDI டீசல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றுடனும் இந்த புதிய அமியோ வெளியாகும் என்று தெரிய வருகிறது. இந்த வருட இறுதிக்குள் அறிமுகமாகும் என்றும் தெரிய வருகிறது.
ஜாகுவார் நிறுவனம் தங்களது மிக முக்கியமான செடான் வகை காரான XJ கார்களை சமீபத்தில் மேம்படுத்தி ரூ. 98.03 லட்சங்களுக்கு (எக்ஸ் - ஷோரூம் ,மும்பை ) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் 2என்ஜின் ஆப்ஷன்களிலும் 3 ட்ரிம்களிலும் வெளிவந்துள்ளது.. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஒன்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றும் தற்போது கிடைக்கிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் காணப்படவில்லை. . உட்புறத்தில் பல அடுக்கு விர்சுவல் டிஸ்ப்ளே அமைப்பு மற்றும் 20.32 செ.மீ டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் கூடிய முழுதும் டிஜிடல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகிய புதிய அம்சங்களை காண முடிகிறது. XE கார்களைப் பொறுத்தவரை , இந்த காரை ஒரு குழந்தை ஜாகுவார் என்று சொல்லலாம். இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களின் பிரிவில் புதிதாக இணைந்துள்ளது. இந்த பிரிவில் தற்போது ஜெர்மன் நாட்டின் மூன்று கார் தயாரிப்பு பிரம்மாக்களான மெர்சிடீஸ் . ஆடி மற்றும் BMW நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த XE கார்களில் இரண்டு வகையான சக்தியை உற்பத்தி செய்யும் விதத்தில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளன. . ஸ்டேண்டர்ட் ட்யூனிங் செய்யப்பட்ட என்ஜின் 197bhp சக்தி மற்றும் அதிகபட்சமாக 320Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. அதே சமயம் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூன் செய்யப்பட்ட என்ஜின் 236bhp அளவு சக்தி மற்றும் அதிகபட்சமாக 340Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.
மேலும் வாசிக்க : போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்
0 out of 0 found this helpful