போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்
published on பிப்ரவரி 09, 2016 12:48 pm by sumit for ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜாகுவார் நிறுவனம் தங்களது தயாரிப்புகளிலேயே மிக குறைந்த விலையிலான XE மாடல் கார்களை ரூ. 39.90 லட்சங்களுக்கு இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் குறி வைக்கிறது. மெர்சிடீஸ் C – க்ளாஸ், ஆடி A4 மற்றும் BMW 3 - சீரிஸ் கார்களுடன் இந்த XE கார்கள் போட்டியிடும் . இந்த பிரிவில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான முடிவை எளிதாக எடுக்கும் விதத்தில் இந்த நான்கு கார்களின் முக்கிய அம்சங்களையும் தொழில்நுட்ப புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு தெளிவான ஒப்பீடு ஒன்றை தயாரித்து உங்களுக்கென பிரத்தியேகமாக அளித்துள்ளோம்.
போட்டி கடுமையாக தான் உள்ளது. இதுவரை இந்த பிரிவில் மூன்று ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில் இப்போது இந்த பிரிவில் புதிதாக நுழைந்துள்ள ஜாகுவார் XE என்ன செய்ய போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதிய அதிநவீன சிறப்பம்சங்கள் , அதிக ஆற்றலை வெளியிடும் திறன் ஆகிய தனது தனித்துவமான சிறப்புக்களால் ஜாகுவார் போட்டி களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.
மேலும் வாசிக்க போட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI
0 out of 0 found this helpful