சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஜூலை 24 அன்று புதிய BMW 5 Series LWB கார் வெளியிடப்படவுள்ளது, முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது

published on ஜூன் 24, 2024 03:59 pm by sonny for பிஎன்டபில்யூ 5 சீரிஸ்

இது இந்தியாவில் வெளியாகவுள்ள முதல் லாங் வீல்பேஸ் 5 சீரிஸ் ஆகும். மேலும் இது உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் உலகளாவிய சமீபத்திய தலைமுறை BMW 5 சீரிஸ் ஆடம்பர (லக்ஸரி) எக்ஸிகியூட்டிவ் செடான் அறிமுகமானது. தற்போது ஒரு வருடம் கழித்து, அது இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அதற்கு முன்னரே ஆல்-எலக்ட்ரிக் பதிப்பான BMW i5 M60 ஏப்ரல் 2024 -ல் முதலாவதாக இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. இப்போது 5 சீரிஸ் கம்பஸ்டன் இன்ஜினின் லாங் வீல்பேஸ் (LWB) காருக்கு முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு

8 -வது தலைமுறை 5 சீரிஸ் இன்னும் ஸ்போர்ட்டி மற்றும் அதிநவீன தோற்றத்தை முன்பக்கத்தில் கொண்டுள்ளது. ஷார்ப்பான விவரங்கள் மற்றும் பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றத்துக்கு ஸ்மூத் எட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது சமீபத்திய நேர்த்தியான BMW LED லைட்டிங் செட்டப்பை பெறுகிறது, அதே நேரத்தில் கிரில்லும் ஒளிரும் வகையில் உள்ளது. இந்த BMW செடானின் LWB பதிப்பை இந்திய வாடிக்கையாளர்கள் பெறுவது இதுவே முதல் முறையாகும். உலகளாவிய சந்தைகளில் உள்ள வெர்ஷனில் 19-இன்ச் அலாய் வீல்கள் இருந்தாலும், இந்தியா-ஸ்பெக் மாடலுக்கு 18 -கள் அலாய் வீல்கள் மட்டுமே கொடுக்கப்படும்.

நவீன கேபின்

புதிய தலைமுறை BMW 5 தொடரின் உள்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான 12.3-இன்ச் ஸ்கிரீன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான 14.9-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் பிராண்டின் தற்போதைய இன்டெகிரேட்டட் டிஸ்பிளேக்கக் கொடுக்கப்பட்டுக்கின்றன. புதிய 7 சீரிஸை போலவே, சென்ட்ரல் ஏசி வென்ட்கள் பார்வைக்கு வராமல் இருக்க டாஷ்போர்டில் இன்டெகிரேட்டட் ஆக கொடுக்கப்பட்டுள்ளன.

BMW எக்ஸிகியூட்டிவ் செடானிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது போல் உட்புறங்கள் ஆடம்பரமாக இருக்கும். ஆனால் இப்போது அவை இகோ ஃபிரென்ட்லி பொருள்களால் ஆனது. ஆகவே அவை மிகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உள்ளன. ஃபிளாக்ஷிப் 7 சீரிஸை போலவே இது சென்ட்ரல் கன்சோலில் கிரிஸ்டல் எலமென்ட்களை பெறுகிறது.

காரிலுள்ள வசதிகள் என்ன ?

இந்தியா-ஸ்பெக் நியூ-ஜென் 5 சீரிஸ் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆம்பியன்ட் லைட்ஸ், 18-ஸ்பீக்கர் போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகிய வசதிகளுடன் வருகிறது. இது 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் வசதியான இருக்கைகள் ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் மேலும் சில அசிஸ்ட் வசதிகள் உள்ளன. ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியா-ஸ்பெக் யூனிட்களுக்கான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை தவிர்த்து விட்டதாக தெரிகிறது.

இன்ஜின்கள்

உலகளவில் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் பெட்ரோல், டீசல் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் பவர் ட்ரெய்ன்களுடன் பியூர்-எலக்ட்ரிக் BMW i5 ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்தியா-ஸ்பெக்கிற்கான பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதே வேளையில் இந்தியாவில் ஹைபிரிட் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வெளியீடு

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் LWB விலை விவரங்கள் அடுத்த மாதம் ஜூலை 24 -ம் தேதியன்று வெளியிடப்படும். இது இந்தியாவில் உள்ளூரில், சென்னைக்கு அருகிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். மேலும் இதன் விலை ரூ.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ், ஆடி A6 மற்றும் வோல்வோ S90 ஆகியவற்றுக்கு போட்டியாக தொடரும்

s
வெளியிட்டவர்

sonny

  • 26 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது பிஎன்டபில்யூ 5 Series

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை