சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

எம்.ஜி. ஹெக்டர் காத்திருப்புக் காலம்: இலவசத் துணை பாகங்கள் பெற ஒரு வாய்ப்பு

published on செப் 03, 2019 05:08 pm by dhruv attri for எம்ஜி ஹெக்டர் 2019-2021

எம்.ஜி. ஹெக்டரின் பல்வேறு வகைகளை வாங்குவதற்குக் காத்திருப்புக் காலம் 6 மாதங்கள்

  • மிக நீண்ட காலமாகக் காத்திருக்கும் ஹெக்டர் எஸ்யூவி வாடிக்கையாளர்களை, எம்.ஜி. மோட்டார் வியப்புக்குள்ளாக்க இருக்கிறது. 'காத்திருப்பு வீண் போகாது' பிரச்சாரத் திட்டத்தின் கீழ், எம்.ஜி யை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு வாரமும், வாரம் 1,000 புள்ளிகள் அளிக்கும். இவற்றை அதிகாரபூர்வ எம்ஜி துணைக்கருவிகள் அல்லது முன்பணம் செலுத்தப்பட்ட பராமரிப்பு சேவைத் தொகுப்புகளைப் பெற பயன்படுத்தலாம்.

  • உங்களது காத்திருப்புக் காலம் நான்கு முதல் ஆறு வார காலமாக இருந்தால் நீங்கள் 4000 முதல் 6000 புள்ளிகள் பெற வாய்ப்பு உள்ளது. எம்.ஜி. மோட்டார் இப்புள்ளிகளின் பண மதிப்பு குறித்த தகவலை வெளியிடாவிட்டலும் இது எம்.ஜி. வாடிக்கையாளர்களுக்கு ஒரு சாதகமான அம்சமாகும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய உங்கள் சம்பந்தப்பட்ட எம்.ஜி. டீலரை அணுகவும்.

  • அதிகாரபூர்வ எம்ஜி ஹெக்டர் துணைக்கருவிகளின் வாரண்டிக் காலம்: ஒரு வருடம் அல்லது 20,000 கி.மீ. தொலைவு பயணம்

  • எம்.ஜி. இதுவரை ஹெக்டருக்கு 28,000 பதிவுகள் உள்ளதாகவும் மற்றும் நடப்பு ஆண்டிற்கு உரிய இந்த எஸ்யூவி விற்பனை முடிந்து விட்டதாகவும் அறிவித்துள்ளது. தற்போது அனைத்து வகைகளுக்கும் காத்திருப்புக் காலம் ஆறு மாதங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு எம்.ஜி. மோட்டாரின் அதிகார பூர்வ அறிக்கையைப் பார்க்கவும்

ஊடக வெளியீடு

எம்.ஜி. மோட்டார் தனது 'காத்திருப்பு வீண் போகாது' திட்டத்திற்கு மேலும் மதிப்புக் கூட்டும் வகையில் பரிசளிப்புத் திட்டத்தைச் சேர்த்துள்ளது.

புது டெல்லி, ஆகஸ்ட் 23, 2019 : வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தும் குறிக்கோளின் ஒரு பகுதியாக. எம்.ஜி. மோட்டார், இந்தியா தனது 'காத்திருப்பு வீண் போகாது' திட்டத்திற்கு தனித்துவமான பரிசளிப்பு நடவடிக்கைளைக் கூட்டியுள்ளது. முன்னதாக, ஹெக்டரின் ஒவ்வொரு இரு வாரக் காத்திருப்புக் காலத்திற்கும் ஒரு பெண் குழந்தைக்கு கல்வி அளிக்க, ஐம்பாக்ட் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடனான கூட்டு முயற்சியை அறிவித்திருந்தது

இந்தப் பரிசுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்கள் , 1,000 புள்ளிகள் பெறுவார்கள். இவற்றை எம்.ஜி. ரக உண்மையான துணைக்கருவிகள், உடன் அல்லது முன்கூட்டிப்பணம் செலுத்தப்பட்ட பராமரிப்பு சேவைத் தொகுதிகள் ஆகியவற்றை இந்த ஆண்டு புதிய ஹெக்டரைப் பெறும் போது பெற்றுக் கொள்ளலாம். எம்.ஜி. ஹெக்டரின் துணைக்கருவிகள், அதனுடய 120 சேவை மையங்களிலும் கிடைக்கும். ஒரு ஆண்டு அல்லது 20,000 கி.மீ. தூரப் பயணம் என்ற உத்தரவாதத்தில் அளிக்கப்படுகின்றன.

இந்தியாவின் முதல் இணயதள வண்டியான எம்.ஜி. ஹெக்டர், 28,000 த்திற்கும் அதிகமான முன்பதிவுகளுடன் திணற வைக்கும் அளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. குறித்த கால மற்றும் சரியான வினியோகத்தில் கவனத்தைச் செலுத்துவதற்காக நிற்வனம் தனது முன் பதிவினைத் தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

'காத்திருப்பு வீண் போகாது' முயற்சி குறித்துத் கருத்துத் தெரிவித்த எம்.ஜி. மோட்டாரின் தலைவரும் செயல் இயக்குனருமான திரு. ராஜீவ் சாபா கூறுகையில், " வாடிக்கையாளர்களின் திருப்தி குறித்த எங்கள் குறிக்கோளை உறுதிப்படுத்தும் ஒரு பகுதியாக எங்கள் 'காத்திருப்பு வீண் போகாது' திட்டம் தனித்துவமிக்க பரிசளிப்பு நடவடிக்கை மேலும் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தை கல்வி முயற்சியை ஊக்கப்படுத்துவதுடன் ஹெக்டரைப் பெற்றுக்கொள்ளும் தருணத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை இந்த பரிசு நடவடிக்கை எற்படுத்தும்."

ஹெக்டரை விற்பனை செய்யத் துவங்குமுன்பே தயாரிப்பாளர், விற்பனையாகும் ஒவ்வொரு ஹெக்டருக்கும் ஒரு பெண் குழந்தைக்குக் கல்வி அளிக்கும் தனது திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிறுவனம், தி பெட்டர் இந்தியா, ட்ராக்ஸ் போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நீம் முயற்சியின் கீழ் தனது ஹலோல் ஆலையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கிறது. எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள நிறுவனம் என்ற அடிப்படையில், நாடு முழுவதும் 31% பெண் ஊழியர்களைக் கொண்ட தனது தொழிலாளர்களுடன், பணியிடத்தில் பாலின வேறுபாட்டிற்கு எடுத்துக்காட்டாக தன் தொழில்துறைக்கு சிறப்பான அளவுகோள்களை எம்.ஜி நிறுவி வருகிறது.

முன்னதாக இந்த ஆண்டு எம்.ஜி. ஐஇம்பாக்ட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி தொலைதூர கிராமங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கற்றல் மையங்களைத் தத்து எடுத்துக்கொள்ள இருக்கிறது. பின் தங்கிய நிலையில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் பெரிய அமைப்பாக இதனை எடுத்துச் செல்லும் தொலை நோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக எம்.ஜி. மோட்டார் இந்தியா, இந்தத் திட்டத்தை மேலும் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவு படுத்த எண்ணி உள்ளது. தவிர நாட்டில் ஆண்டுதோறும் நிறுவனத்தின் வளர்ச்சியின் போது பெண் குழந்தை கல்விக்குத் தனது பங்களிப்பைக் குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிப்பதாக உறுதி அளித்துள்ளது.

ஆகஸ்ட் 2019 அன்று மிக நீண்ட காத்திருப்புக்காலத்தை உடைய வாகனங்களாக எம்.ஜி. ஹெக்டர் மற்றும் ஹாரியர் இருந்தன.

மேலும் விவரங்களுக்கு : ஹெக்டரின் சாலை விலை

d
வெளியிட்டவர்

dhruv attri

  • 46 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது எம்ஜி ஹெக்டர் 2019-2021

Read Full News

explore மேலும் on எம்ஜி ஹெக்டர் 2019-2021

எம்ஜி ஹெக்டர்

Rs.13.99 - 21.95 லட்சம்* get சாலை விலை
டீசல்13.79 கேஎம்பிஎல்
பெட்ரோல்13.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை