• English
    • Login / Register

    பிளாக் ஸ்டோர்ம் எடிஷனில் ஆல் பிளாக் -காக மாறிய எம்ஜி க்ளோஸ்டர்

    எம்ஜி குளோஸ்டர் க்காக மே 29, 2023 06:28 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 43 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    முழுமையான கறுப்பு நிற வெளிப்புறத்தைத் தவிர, இந்த சிறப்பு பதிப்பில் வித்தியாசமான கேபின் தீம் கிடைக்கும்.

    MG Gloster Black Storm

    எம்ஜி க்ளோஸ்டர் விரைவில் புதிய சிறப்பு எடிஷன் பதிப்பைப் பெறும். ஒரு புதிய டீசரில், கார் தயாரிப்பு நிறுவனம் எஸ்யூவி -யின் சிறப்பு "பிளாக்ஸ்டார்ம்" எடிஷனின் ஒரு காட்சியைக் கொடுத்தது. அதன் தோற்றத்தில் இருந்து, க்ளோஸ்டர்- இன் இந்த சிறப்பு எடிஷன் பிளாக்ஸ்டார்ம் பேட்ஜிங்குடன் வெளிப்புறத்தில் முழுமையான  கறுப்பு நிறத்தைப் பெறும்.

    இதில் புதிதாக என்ன எதிர்பார்க்கலாம்

    MG Gloster Black Storm

    எம்ஜி ஏற்கனவே க்ளோஸ்டரை கறுப்பு நிற வெளிப்புற ஷேடுடன் வழங்குகிறது. எனவே இந்த சிறப்பு எடிஷனில், அனைத்து குரோம் பிட்களும் கறுப்பு நிறத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம், மேலும் இது முழு கறுப்பு அலாய் வீல்களையும் பெறலாம். அதன் கேபினின் டீஸர் இல்லை என்றாலும், அதன் இருக்கைகளிலும் அதே கறுப்பு வண்ணத்தை எதிர்பார்க்கலாம்.

    அம்சங்கள்

    MG Gloster Cabin

    டீஸர், பிளாக் ஸ்டோர்ம் பதிப்பைப் பற்றி அதிகம் விளக்கம் கொடுக்கவில்லை, ஆனால் எஸ்யூவி இன் நிலையான பதிப்பு ஏற்கனவே நன்கு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இது எந்த  கூடுதல் அம்சங்களையும் சேர்க்காது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டூயல்-பேன் அகலமான சன்ரூஃப், 12-வே அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது.

    மேலும் படிக்கவும்: 5-ஆண்டு எதிர்காலத்திட்டத்தை வெளியிடும் எம்ஜி மோட்டார் இந்தியா, முக்கிய கவனம் பெறும் EVக்கள்

    பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்போன்ற மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகள் (ADAS) ஆகிய அம்சங்களுடன் வரும்.  ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றைப்  பெற்றுள்ளது.

    பவர்டிரெயின்

    MG Gloster Engine

    பிளாக் ஸ்டோர்ம் 2-லிட்டர் டீசல் இன்ஜின் (161PS மற்றும் 374Nm) பின்புற சக்கர டிரைவ் அமைப்பு மற்றும் 2-லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜின் (216PS மற்றும் 479Nm) ஆகியவற்றைப் பெறும் ஸ்டாண்டர்டு எடிஷனின் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களையும் பெறக்கூடும். நான்கு சக்கர டிரைவ் டிரெய்னுடன்வரக்கூடும். இரண்டு இன்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    விலை & போட்டியாளர்கள்

    MG Gloster

    க்ளோஸ்டர் விலை ரூ. 38.08 இலட்சம் முதல் ரூ. 42.38 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் பிளாக் ஸ்ட்ரோம் எடிஷன் ஸ்டானடர்டு கார் எடிஷன்களை விட கூடுதல் பிரீமியத்தைக் கொண்டிருக்கும். க்ளோஸ்டர்- டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    மேலும் படிக்கவும்: எம்ஜி க்ளோஸ்டர் டீசல்

    was this article helpful ?

    Write your Comment on M g குளோஸ்டர்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience