மாருதி வேகன்ஆர் AMT சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் பட்டது.
published on நவ 05, 2015 01:40 pm by அபிஜித் for மாருதி வேகன் ஆர் 2013-2022
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
தானியங்கி மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் தொழில்நுட்பம் சீராக பிரபலமடைந்து வருகிறது, இதற்கு தக்க சான்றாக மாருதி செலீரியோ கார்கள் பெற்றுள்ள வெற்றியை சொல்லலாம். மாருதி தான் முதல் முதலில் விலை குறைவான AMT தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அது இப்போது நல்ல பலனைத் தர துவங்கியுள்ளது. நிறைய தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் நீண்ட நாள் கனவாகும். அதன் விளைவாக இப்போது தங்களது இன்னுமொரு பட்ஜெட் (விலை குறைந்த) கார்களில் இந்த AMT தொழில்நுட்பத்தை பொருத்த முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் புதிதாக இப்போது வேகன்ஆர்/ஸ்டிங்ரே AMT வெர்ஷன் கார்கள் அறிமுகமாக உள்ளது. இந்த கார் நமது உளவு படங்களில் சிக்கியுள்ளது. இந்த கார்களின் அறிமுகத்தைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் , இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று யூகங்கள் தெரிகிறது.
தற்போது உள்ள வேகன்ஆர்/ஸ்டிங்ரே கார்களைப் போன்ற தோற்றத்தையே இந்த புதிய கார்களும் பெற்றுள்ளது. கூடுதலாக AMT லீவர் மற்றும் பேட்ஜிங் புதிதாக உள்ளது. செலீரியோ AMT கார்களைப் போன்றே இந்த வேகன்ஆர்/ஸ்டிங்ரே கார்களின் Vxi ட்ரிம்களில் மட்டுமே AMT தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருக்கும். இதைத் தவிர செலீரியோ AMT கார்களில் உள்ளது போன்றே இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டரில் கியர் ஷிப்ட் இன்டிகேடர் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜின் கூட செலீரியோவில் பயன்படுத்தப்பட்டு வரும் 67 பிஎச்பி சக்தி, 90nm அளவுக்கு டார்க் திறன் கொண்ட 1.0 லிட்டர் இன்லைன் 3, என்ஜின் தான் இந்த வேகன்ஆர்/ஸ்டிங்ரே கார்களில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க : ஒப்பீடு: மாருதி சுசுகி பலேனோ vs எளிட் i20 vs ஜாஸ் vs போலோ vs புன்டோ ஈவோ
செலீரியோ AMT மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதற்கு நெரிசல் மிகுந்த நகர்புற போக்குவரத்தின் போது கையாள்வதற்கு மிக சுலபமாக இருப்பதும் , மாருதி நிறுவனம் சொன்னது போலவே லிட்டருக்கு 23.1 கி,மீ மைலேஜ் தருவதும் இரண்டு முக்கிய காரணங்களாக அறியப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட , தனது பிரிவில் , AMT கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு வெளிவந்துள்ள ஒரே கார் என்பது செலீரியோவிற்கு கூடுதல் சிறப்பை தந்துள்ளது.
இதையும் பாருங்கள் :
0 out of 0 found this helpful