மாருதி சுசுகி பெலினோ விலை – அதை எங்கிருந்து துவங்குவது?
published on அக்டோபர் 14, 2015 09:36 am by raunak for மாருதி பாலினோ 2015-2022
- 11 Views
- 10 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
S-கிராஸிற்கு பிறகு, மாருதியின் பிரிமியம் நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்யப்படும் இரண்டாவது தயாரிப்பு இது.
ஜெய்ப்பூர்:
இந்தியாவின் முதல் பிரிமியம் ஹேட்ச்சான சென் காரை 1000 cc என்ஜின் உடன் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து ஸ்விஃப்ட் அறிமுகத்தின் மூலம் அப்படியொரு டிரென்ட் கொண்டு வரப்பட்ட போது, பிரிமியம் விலை நிர்ணயத்தோடு வரும் ஹேட்ச்களை மக்களும் ஏற்றுக் கொள்ள தொடங்கினர். அதன் பிரபலத்தை பாதிக்கும் வகையில், பல கூடுதல் அம்சங்களை கொண்ட i20-யை அறிமுகம் செய்து, ஹூண்டாய் தனது தலையை உயர்த்தியது. முதல் தலைமுறை ஹேட்ச் தொடர்ந்து களத்தில் இருந்த நிலையில், ஐரோப்பிய தோற்றத்தை காட்டி மக்களை கவர்ந்து சென்ற எலைட் i20 அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்கள் மற்றும் இடவசதியை கொண்டு கிராண்ட் i10 உடன் ஸ்விஃப்ட் மோதிய போதும், எலைட் i20 மற்றும் கிராண்ட் i10 ஆகிய கார்களை இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனால் ஹூண்டாயின் பிரபலமான ஹேட்ச்சான எலைட் i20-யை வீழ்த்த ஏதாவது ஒரு தயாரிப்பை உருவாக்க முடிவு செய்த மாருதி, தற்போது பெலினோவின் மூலம் நிறுத்தப்பட்ட சேடனின் பெயரை எப்படியாவது கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், கொரியன் நிறுவனமான ஹூண்டாய் தனது இரண்டாவது தலைமுறை i20 என்ற எலைட் i20யை, முதலில் நம் நாட்டிலும், பிறகு முழு உலகத்திற்கும் வெளியிட்டது. இதே அடிசுவடுகளை மாருதி நிறுவனமும் பின்பற்றிய அதே முறையில் செய்து வருகிறது. ஆனால் இந்த கட்டுரையில், நான் விலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளேன். ஏனெனில் ஆரம்ப நிலை தயாரிப்புகளை பொறுத்த வரை சிக்கனத்தை சார்ந்திருப்பதை கருத்தில் கொண்டால், நம் நாட்டில் ஒரு பிரிமியம் தயாரிப்பின் வெற்றியில் விலை முக்கியத்துவம் வகிக்கிறது. மேலும் இப்போது போட்டியிடும் தயாரிப்புகளில் உள்ள அம்சங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன என்பதால் விலையின் மீது நான் அதிக கவனம் செலுத்தியுள்ளேன். எனவே இங்கே மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு, எதிர்பார்க்கப்படும் பெலினோவின் விலை நிர்ணயம் மற்றும் முக்கிய அம்சங்களை காண்போம்.
மேலும் படிக்க: