புதிய மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி மாடல் ரூபாய். 5.28 லட்சத்திற்கு அறிமுகம்
மாருதி ஸ்விப்ட் 2014-2021 க்காக அக்டோபர் 08, 2015 06:57 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 20 Views
- 15 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்விஃ
ப்ட் மாடலின் க்ளோரி எடிஷனை வெளியிட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் (லிமிடெட் எடிஷன்) மட்டுமே கிடைக்கும். இந்த காரின் மெக்கானிக்கல் அம்சங்களை ஆராய்ந்தால், புதியதாக எதுவும் இல்லாமல் தற்போது சந்தையில் உள்ள ஸ்விஃப்ட காரில் உள்ள அம்ஸங்களையே பிரதிபலிக்கிறது. ஆனால், பந்தைய கார்களில் உள்ளது போல பட்டையான கோடுகளை, காரின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதியிலும் பெற்று துள்ளளுடன் வெளிவருகிறது. இந்த காரில், 1.2 லிட்டர் K ரக பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும். இந்த இஞ்ஜின், 5 வேக ஆளியக்க ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படுள்ளது.
மாருதி ஸ்விஃப்ட் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, மினி கூப்பர் காரின் வடிவத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. தற்போது, புதிதாக இணைக்கப்பட்ட பந்தய கோடுகளும், பளீரென உள்ள சிவப்பு-வெள்ளை வண்ணக் கலவையும் மீண்டும் மினி கூப்பரை நினைவூட்டுகின்றன. இந்த சிறப்பு அறிமுகத்தில், பின்புறத்தில் தூக்கலாக ஒரு ஸ்பாய்லர் இணைக்கப்பட்டு, துருதுருப்பான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
C பில்லார் பகுதியில் கருப்பு வண்ணம் பூசப்பட்டதால், இதன் அழகிய வடிவம் மேலும் வசீகரமாக உள்ளது. இது தவிர, பளிச்சென தெரியும் சிவப்பு நிறத்தில் உள்ள விதானம், சிவப்பு டிகால் ஸ்டிக்கர்கள், உயரம் குறைவாக தெரிய சைட் ஸ்கிர்ட்ஸ் மற்றும் பின்னால் வரும் வாகனங்கள் தெளிவாக தெரிவதற்காக விங் கண்ணாடிகள் போன்ற சிறப்பம்ஸங்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஸ்விஃப்ட் கார் “விளையாட்டு வீரர்களுக்கு’, “பரபரப்பாக செயல்படும் ஆற்றல் வீரர்களுக்கு” போன்ற கோஷங்களுடன் வெளிவருகிறது.
புதிய ஸ்விஃப்ட்டின் உட்புறத்தில் புளு டூத் வசதியுடன் கூடிய ம்யூசிக் சிஸ்டம்; பின்புறத்தில் சென்று நிறுத்த உதவும் ரியர் வியூ காமிரா; கருப்பு சிவப்பு வண்ணக் கலவையில் வரும் இருக்கை விரிப்புகள்; ஓட்டுச் சக்கரத்திற்கும் (ஸ்டியரிங் வீல்) கியருக்கும் உறை; மற்றும் கால் வைக்கும் இடத்தில் புது விதமான விரிப்புகள போன்ற, மனதுக்கு இதமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய க்ளோரி எடிஷன், VDi மற்றும் VXi போன்ற மாடல்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கிறது. VDi க்ளோரி மாடலில் உடனடியாக ப்ரேக் பிடிக்க வசதியாக ப்ரேக் அஸ்சிஸ்ட் மற்றும் EBD –யுடன் வரும் ABS போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஸ்விஃப்ட் க்ளோரி மாடலில் அலாய் சக்கரங்களோ, பாதுகாப்பு காற்றுப் பைகளோ இடம் பெறாது என்று இந்நிறுவனம் திட்டவட்டமாகக் கூறுகிறது.
மாருதி சுசூக்கி ஸ்விஃப்ட் கிக்ளோரி எடிஷன் விவரங்கள்:
- மாடல்கள்: VXi மற்றும் VDi
- விலை: ரூபாய். 5.28 லட்சம் (VX) மற்றும் ரூபாய். 6.19 லட்சம் (VD)
- இஞ்ஜின்: 1.2 லிட்டர் K வரிசை பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல்
- செயல்திறன்: 6000 rpm –இல், 83.11 bhp குதிரைத் திறன் (VXi) மற்றும் 4000 rpm –இல், 73.94 bhp குதிரைத் திறன் (VDi)
- டார்க்: 4000 rpm –இல் 115 Nm (VXi) மற்றும் 2000 rpm –இல் 190 Nm (VDi)
- மைலேஜ்: லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் (பெட்ரோல்) மற்றும் லிட்டருக்கு 25.2 கிலோ மீட்டர் (டீசல்)