மாருதி தனது பலேனோ பற்றிய தகவல்களை புதிய வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளது!
published on அக்டோபர் 21, 2015 02:05 pm by raunak for மாருதி பாலினோ 2015-2022
- 17 Views
- 13 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
ஹயுண்டாய் எளிட் i 20 கார்களை ப்ரீமியம் ஹேட்ச் பேக் பிரிவின் அரியணையில் இருந்து இறக்கி மற்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களை ஒரு கை பார்த்து விடுவதென கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்க உள்ளது மாருதியின் பலேனோ கார்கள். வரும் திங்களன்று அறிமுகமாகி மாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் டீலர்ஷிப் மையங்களான நெக்ஸா மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது 80+ நெக்ஸா டீலர்ஷிப் மையங்கள் உள்ளன. அந்த எண்ணிகையை 100 என்ற அளவுக்கு இந்த வருட இறுதிக்குள் அதிகரிக்க மாருதி திட்டமிட்டுள்ளது. பலேனோ கார்களுக்கான முன்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியுள்ள நிலையில், இந்த காரின் அதிகாரபூர்வ அறிமுகம் வரும் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறியப்படுகிறது.
உலக சந்தையில் உற்பத்தி தொடங்குவதற்கு தயாராக உள்ள மாடலாக 2015 ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவிலும், iK2 கான்செப்ட் வாகனம் என்ற முறையில் 2015 ஜெனீவா மோட்டார் ஷோவிலும் இந்த பலேனோ காட்சிக்கு வைக்கப்பட்டது. உலக சந்தையில் அறிமுகமாவதற்கு முன்னரே இந்தியாவில் அடுத்த வாரம் பலேனோ அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பலேனோ கார்களுக்கு இந்தியா தான் மிக முக்கியமான வாகன சந்தை என்று மாருதி சுசுகி நிறுவனம் நினைப்பதையே இந்த அறிமுகம் நமக்கு உணர்த்துகிறது. இதே போல் தான் பலேனோ கார்களின் முக்கிய எதிரியாக பார்க்கப்படும் ஹயுண்டாய் நிறுவனத்தின் தற்போது விற்பனையில் முன்னணியில் உள்ள i20 கார்களும் உலக சந்தையில் அறிமுகமாவதற்கு முன்னரே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது மாதத்திற்கு 10 ஆயிரம் எளிட் i20 கார்களை சராசரியாக ஹயுண்டாய் நிறுவனம் விற்பனை செய்துக் கொண்டிருக்கிறது. தங்களது புதிய பலேனோ கார்களையும் அதே அளவுக்கு விற்பனை செய்யவேண்டும் என்றே மாருதி நிறுவனமும் திட்டமிட்டிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
பாருங்கள் : மாருதி புதிய பலினோ பற்றிய தகவல்களை வெளியிடுகிறது.
மாருதி சுசுகி பலேனோ : முதல் ட்ரைவ் வீடியோ
பரிந்துரைக்கப்படுகிறது :