பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் நடக்கும் பந்தயத்தில் மாருதி பலீனோ வேகமாக முன்னேறிச் செல்கிறது
published on நவ 17, 2015 02:58 pm by அபிஜித் for மாருதி பாலினோ 2015-2022
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி பலீனோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாத காலமே ஆகிவிட்ட நிலையில், இந்த கார் இந்தியர்களின் மத்தியில் பேராதரவு பெற்றுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி இருக்கிறது. பண்டிகை கால அறிமுகமும், புதிய வடிவமைப்பும் இத்தகைய மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது என்று கூறினாலும், வெறும் ஒரு மாதமே கடந்துள்ள நிலையில், 21,000 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஆச்சர்யமான செய்தியாகும். பண்டிகை சீசனின் இறுதி 10 நாட்களில் மகத்தான சாதனையாக 56,000 வாடிக்கையாளர்களைத் தாண்டி, பலீனோ சரித்திரம் படைக்க முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. வாகன சந்தையின் மற்றொரு புறம் பார்க்கும் போது, பலீனோவின் போட்டியாளர்களான ஹுண்டாய் எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களின் முன்பதிவு சுமார் 5,000 முதல் 11,000 வரை மட்டுமே இருந்தது. முன்பதிவு எண்ணிக்கைகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தாலும், பலீனோ மற்ற அனைத்து மாடல்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க பல நாட்கள் ஆகாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில், பலீனோ முன்னேறிச் சென்று முதலிடத்தைப் பிடிக்க, மாருதி நிறுவனம் எத்தகைய சூத்திரங்களைக் கையாண்டுள்ளது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தோற்றம்:
ஹாட்ச் பேக் பிரிவிலேயே மிகப் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்ட பலீனோ, சாலையில் செல்லும் போது ஜாஸ் மற்றும் எலைட் i20 கார்களுக்கு இணையாக அருமையான ரோட் பிரெசென்ஸ் பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. மாருதியின் லிக்குய்ட் ஃப்லோ டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் ஓரங்கள் நேர்த்தியாக வளைந்து உள்ளது. எனவே, i20 மற்றும் ஜாஸ் மாடல்களைப் போல கம்பீரமான மிடுக்குடன் இல்லாமல், சற்றே மென்மையானதாகவும், நேர்த்தியாகவும், எழில் மிகுந்ததாகவும் காட்சியளிக்கிறது. பலீனோவின் முன்புறத்தில் வெள்ளை நிற புரொஜெக்டர் ஹெட் லாம்ப் பொருத்தப்பட்டு பளீரென்று வெளிச்சம் தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு மற்ற இரண்டு கார்களிலும் இடம் பெறவில்லை.
கட்டுமான தொழில்நுட்பம்
கார் உற்பத்தியாளர்கள், கார்களின் எரிபொருள் சிக்கனத்தை போட்டி போட்டு நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இணைந்து வரும் சிறந்த செயல்திறன் வாய்ந்த இஞ்ஜின்கள் மட்டுமல்லாது, காரின் எடையைக் குறைக்கும் தொழில்நுட்பமும் பிரபலமாகி வருகிறது. மாருதி நிறுவனம், தனது மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை பலீனோ உற்பத்தியில் பயன்படுத்தவில்லை என்றாலும் காரின் எடையை கணிசமாகக் குறைத்துள்ளது. இலகுவான எடையில் இருந்தாலும், இதற்கு முந்தைய கார்களை விட இது மிகவும் வலுவாக உள்ளது. மாருதி நிறுவனம், இந்த காரில் TECT (டோட்டல் எஃபக்ட்டிவ் கண்ட்ரோல் டெக்னாலஜி) என்னும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறது, அதாவது விபத்து ஏற்படும் போது, அந்த வலிமையான சக்தியை உள்வாங்கி சரியான விதத்தில் வெளியேற்றிவிடுவதன் மூலம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. எடையில் குறைந்ததாக இருந்தாலும், இந்த கார் அதன் போட்டியாளர்களை விட சிறந்த பாதுகாப்பை வழங்குவதால் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.
பிரிவிலேயே முதல் முறையாக இடம்பெற்றுள்ள சிறப்பம்ஸங்கள்
இதன் பிரிவிலேயே, பலீனோவில் முதல் முறையாக பலவிதமான உயர்தர சிறப்பம்ஸங்களை மாருதி நிறுவனம் பொறுத்தியுள்ளது. LED DRLகள் மற்றும் புரொஜெக்டர் விளக்குகள்; அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த தரமான ABS-EBD மற்றும் இரட்டை காற்றுப்பைகள்; ஆப்பிள் CarPlay ஆப் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட்; 85 சதவிகிதம் UV கதிர்வீச்சைத் தடுக்கும் கண்ணாடி பொருத்தப்பட்ட வண்ண விண்ட் ஸ்கிரீன்கள்; லோட் லிமிடர்கள் இணைக்கப்பட்ட சீட் பெல்ட்கள்; மற்றும் ஓட்டுனருக்கான 3-D இன்ஃபர்மேஷன் ஸ்கிரீன் போன்றவை முதல் முறையாக இந்த பிரிவில் பொருத்தப்பட்டு வருகின்றன.
மாருதி நிறுவனம் பிரிமியம் கார் பிரிவில் வெற்றி பெறுவதற்கு பல விதமான சிரமங்களை மேற்கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த முயற்சியில் பல முறை தோற்றும் விட்டது. ஆனால், இந்நிறுவனம் பிரிமியம் கார் பிரிவில் இமாலய வெற்றியைப் பெற, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நெக்ஸா பிரிமியம் டீலர்ஷிப் மற்றும் பலீனோ போன்றவை நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றன.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful