நெக்ஸா வலைத்தளத்தில் மாருதி பலினோ கார்களின் முதல் அறிமுக தகவல்கள்
published on அக்டோபர் 06, 2015 06:37 pm by nabeel for மாருதி பாலினோ 2015-2022
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
மாருதி நிறுவனத்தின் அடுத்து வெளிவர தயாராக உள்ள பலினோ கார்களின் அறிமுக தேதி நெருங்கி வரும் வேளையில் இந்த புதிய ஹேட்ச்பேக் பிரிவு காரைப் பற்றிய ஆர்வமும் உற்சாகமும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளமென கரை புரண்டு ஓடுகிறது. மேலும் இந்த ஆர்வத்தைக் கூட்டும் வகையில் மாருதி நிறுவனம் இந்த காரின் படங்களையும் தகவல்களையும் முதல் முறையாக நெக்ஸாவின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 'தி பிரிமியம் ஹேட்ச்பேக் ' என்ற தலைப்பின் கீழ் இந்த காரின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. . சமீபத்தில் அறிமுகமான எஸ் - கிராஸ் கார்களுக்கு பிறகு நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கும் மாருதி நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக இந்த முற்றிலும் புதிய பலினோ இருக்கும். இந்த கார் முதன் முதலில் செப்டம்பர் 2015 ல் நடந்த ப்ரேன்க்பர்ட் IAA மோட்டார் ஷோவில் தான் சுசுகி நிறுவனத்தினரால் காட்சிக்கு வைக்கப்பட்டது. அக்டோபர் 26 , 2015 ல் முற்றிலும் புதிய இந்த பலினோ அறிமுகமாகும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வாகன உலகில் உலவி வந்தாலும், நெக்ஸா வலைத்தளத்தில் இந்த செய்தியை உறுதிப் படுத்தும் விதத்தில் எந்த தகவலும் இடம் பெறவில்லை. அதற்கு மாறாக , புதிய பலினோ விரைவில் அறிமுகமாகும் என்றே சொல்லப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தால் முற்றிலும் புதிய பிளாட்பார்ம் (தொழில்நுட்ப தளம்) கொண்டு இந்த பலினோ உருவாக்கப்பட்டுள்ளது. இதே தளத்தில் மாருதி நிறுவனம் எதிர்காலத்தில் வெளிவர இருக்கும் தங்களது YBA மற்றும் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் கார்களை உருவாக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த புதிய பலினோ வெளிவர உள்ளது. மாருதி நிறுவனத்தின் SHVS ஹைப்ரிட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு டீசல் எஞ்சின் கார்கள் வெளிவரும் என தெரிகிறது. 83bhp சக்தி, 115Nm அளவிலான டார்க் ஆகியவைகளை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கார்களிலும், 4000rpm சுழற்சியில் 74bhp சக்தி மற்றும் 2000rpm சுழற்சியில் 190Nm அளவிலான டார்க் ஆகியவைகளை வெளியிடவல்ல 1.3 லிட்டர் DDiS190 யூனிட் டீசல் என்ஜின் ஆப்ஷன் கார்களிலும் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது. மேலும் SHVS தொழில்நுட்பம் கண்டிப்பாக ஒரு முக்கிய அங்கமாக இணைக்கப்பட்டே பலினோ கார்கள் வெளிவரும் என்றும் எதிர்பர்க்கப்படுகிறது. பிரதான நிறமாக கருப்பு நிறமே கொடுக்கப்பட்டே இருந்தாலும் இன்ஸ்ட்ருமன்டேஷன் க்ளஸ்டர் மற்றும் ஸ்டீரிங் வீல் ஆகியவற்றில் நேர்த்தியான வெள்ளி மற்றும் குரோம் நிறத்திலான பூச்சு கொடுக்கப்பட்டுள்ளதைப்பார்க்க முடிகிறது. சியஸ் மற்றும் எஸ் - கிராஸ் கார்களில் உள்ளது போன்ற 7 – அங்குல ஸ்மார்ட்ப்ளே இன்போடைன்மென்ட் அமைப்பு இந்த புதிய பலினோ கார்களிலும் இணைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தைப் பொறுத்தவரை மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு தத்துவத்தை பின்பற்றி 'V' வடிவிலான முன்புற க்ரில், கூரையின் ஒரு பகுதியில் மட்டும் ப்லோடிங் ரூப், ஸ்லோபிங் ரூப் லைன் ( சரிவான மேற்புற கூரை அமைப்பு ) , பின்புற ஸ்பாயிலர்கள் மற்றும் புதிய சுசுகி அல்லாய் சக்கரங்கள் போன்ற அம்சங்களையும் காண முடிகிறது.