நெக்ஸா டீலர்களின் யார்டில் மாருதி பலீனோ: அக்டோபர் 26 –ஆம் தேதி அறிமுகம்
published on அக்டோபர் 23, 2015 02:25 pm by manish for மாருதி பாலினோ 2015-2022
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, குறைவான சக்தியை உற்பத்தி செய்யும் பிரிமியம் ஹாட்ச் பேக் காரான மாருதியின் பலீனோ, நெக்ஸா டீலர்ஷிப் யார்டில் வந்து இறங்கித் தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் 26 –ஆம் தேதி அறிமுகத்திற்கு, இந்த கார் ஆயத்தமாகிவிட்டது. இந்தியா முழுவதும் உள்ள நெக்ஸா பிரிமியம் டீலர்ஷிப்பில் இதன் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்ய ரூ. 25,000 பெற்றுக் கொள்ளப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் மற்ற பிரிமியம் வரிசை கார்களான சியாஸ் மற்றும் S க்ராஸ் ஆகிய கார்களைப் போலவே, பலீனோவும் நெக்ஸாவின் மூலம் விற்கப்படும். சியாஸ் காரில் உள்ள மைல்ட்-ஹைபிரிட் SHVS தொழில்நுட்பத்தை, புத்தம் புதிய பலீனோவின் டீசல் ரகத்திலும் பொருத்தியுள்ளனர். இந்த தொழில்நுட்பம், மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தைத் தரும். அதாவது, லிட்டருக்கு 27.39 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இந்த சிறந்த ஹாட்ச் பேக் காரின் மறு பக்கத்தில், குறைந்த சக்தியுடைய டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 75 PS சக்தியை மட்டுமே உற்பத்தி செய்கிறது. மேலும், இதன் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜின் 84.3 PS சக்தி மற்றும் 115 Nm டார்க்கை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
வழக்கமாக பொருத்தப்படும் ABS மற்றும் EBD; முன்புறத்தில் இரட்டை ஏர்பேக் போன்றவை, பலீனோவின் அனைத்து மாடல்களிலும் இணைக்கப்படுகின்றன. ஆனால், உயர்தர டாப்-எண்ட் வேரியண்ட்களில், டெல்டாவில் ஆரம்பித்து புளுடூத் இணைக்கப்பட ம்யூசிக் சிஸ்டம்; தானியங்கி தட்பவெட்ப கட்டுப்பாட்டு அமைப்பு (ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்); பின்புறத்தில் சென்று நிறுத்த உதவும் ரியர் பார்க்கிங் சென்சார்கள்; பின்புறத்தில் வைப்பர் மற்றும் வாஷர்; மற்றும் இறக்கைகளைப் போன்ற வடிவில் உள்ள மின்னணு மூலம் மாற்றவும் மடக்கவும் கூடிய விங் மிர்ரர்ஸ் போன்ற கவர்ச்சியான அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பலீனோவின் வெளிப்புற வடிவம், மிகவும் புதுமையான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், V வடிவத்திலான குரோம் கிரில்; பார்ஷியல் ஃப்லோட்டிங்க் ரூஃப் மற்றும் உறுதியான வீல் வளைவுகள் போன்றவை இதன் கம்பீரத்தை அதிகப்படுத்துகின்றன. முன்புற ஃபெண்டர்களில் சற்றே பின்புறம் சென்றது போன்ற ஹெட்லாம்ப் க்ளஸ்டரில் காலையிலும் பளபளவென பிரதிபலிக்கும் LED மற்றும் அதன் கீழே, வட்ட வடிவமான பனி விளக்குகள் (ஃபாக் லாம்ப்) பொருத்தப்பட்டு பார்ப்பவர்களை உற்றுநோக்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார், ஹுண்டாய் எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
மேலும் வாசிக்க:
0 out of 0 found this helpful