பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ பின்புற டிஸ்க் ப்ரேக் உடன் வேவு பார்க்கப்பட்டது

மாருதி பாலினோ 2015-2022 க்கு published on பிப்ரவரி 01, 2016 06:07 pm by manish

  • 12 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்  என்று தெரிய வருகிறது.   தற்போதய சூழலில் இந்தியாவில் ஏற்றுமதிக்காக  மட்டுமே இந்த 110 PS  வேரியன்ட் தயாரிக்கப்படுகிறது.   அவ்வாறு தயாரிக்கப்படும் இந்த பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட பலேனோ வேரியன்ட்கள் மாருதி என்ற பெயரில் இல்லாமல் சுசுகி  சின்னம் பொறிக்கப்பட்டு  சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அனுப்ப படுகிறது.  சமீபத்தில் எடுக்கப்பட்ட இந்த காரின் பின்புற  க்ளோஸ் - அப் படங்களில் நமக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.  பின் சக்கரங்களில் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டிருப்பதை நம்மால் தெளிவாக காண முடிந்தது. இந்த சிறப்பம்சம் , பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட பலேனோ காரை இயக்குபவர் ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கையாளும் அனுபவத்தை பெற வைக்கும் என்று சொல்லலாம். 

இந்த பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட பலேனோ கார்களின் அறிமுகத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் மாருதி வெளியிடாத நிலையில் ,  அறிமுகமான பின்  அபர்த் புன்டோ ஈவோ மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் விரைவில் அறிமுகமாக உள்ள போலோ GTI ஹேட்ச்பேக் கார்கள் ஆகியவற்றுடன்  இந்த பலேனோ போட்டியிடும் என்று தெரிய வருகிறது. 

பலேனோ பூஸ்டர்ஜெட் அனைவரையும் கவர்ந்திழுக்க பல நியாயமான காரணங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது.  இப்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள என்ஜின்களிலேயே அதிசக்தி வாய்ந்ததாக இந்த பூஸ்டர்ஜெட் என்ஜின் இருப்பதும் , எடை குறைவான கட்டமைப்புடன் இந்த கார்  உருவாக்கப்பட்டிருப்பதும் இதனுடைய செயல்திறன் அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. இதைத் தவிர ஆபிள் கார்ப்ளே இன்போடைன்மென்ட் சிஸ்டம் போன்ற கூடுதல் சிறப்பம்சங்கள் இந்த பலேனோ  பூஸ்டர்ஜெட் கார்களை மற்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் இருந்து தனித்து காட்டுகிறது.  இந்திய கார் ஆர்வலர்கள் குதூகலமடைய மற்றுமொரு காரணமும் உள்ளது. வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை கிரேடர் நொய்டா பகுதியில்  நடைபெற போகும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய பலேனோ RS கான்செப்டை காட்சிக்கு வைக்க உள்ள தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.  
இந்த RS கான்செப்டில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பவர்ப்லேன்ட் பொருத்தப்பட்டிருப்பது மட்டுமின்றி 2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கென  இந்த கார் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. 

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி பாலினோ 2015-2022

Read Full News

trendingஹாட்ச்பேக்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience