Mahindra XUV700 AX5 Select மற்றும் Hyundai Alcazar Prestige: எந்த 7-சீட்டர் எஸ்யூவி -யை வாங்கலாம் ?
published on மே 28, 2024 08:15 pm by ansh for மஹிந்திரா எக்ஸ்யூவி700
- 68 Views
- ஒரு கருத்தை எழு துக
இரண்டு எஸ்யூவி -களும் பெட்ரோல் பவர்டிரெய்ன், 7 பேர் பயணிக்கக்கூடிய இட வசதி மற்றும் கூடுதல் சிறப்பான வசதிகளை சுமார் ரூ. 17 லட்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம்) வழங்குகின்றன.
மஹிந்திரா XUV700 AX5 Select (அல்லது AX5 S) எஸ்யூவி -யின் மிகவும் விலை குறைவான விலை 7-சீட்டர் வேரியன்ட்யாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் அதன் நெருங்கிய போட்டியாளர் ஹூண்டாய் அல்கஸார் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் ஆகும். இதுவும் முந்தையதை போல விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களின் விலை நெருக்கமாக இருக்கும் நிலையில் எந்த வேரியன்ட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதைக் கண்டுபிடிக்க இங்கே நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்:
விலை
விலை, எக்ஸ்-ஷோரூம் |
||
வேரியன்ட் |
Mahindra XUV700 AX5 Select |
Hyundai Alcazar Prestige Turbo |
மேனுவல் |
ரூ.16.89 லட்சம் |
ரூ.16.77 லட்சம் |
ஆட்டோமெட்டிக் |
ரூ.18.49 லட்சம் |
- |
மிட்-ஸ்பெக் XUV700 AX5 எஸ் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஆட்டோமேட்டிக் ரூ. 1.6 லட்சம் விலையில் வருகிறது. மறுபுறம் அல்கஸார் பிரஸ்டீஜ் XUV700 ஐ விட சற்று விலை குறைவாக உள்ளது ஆனால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே வருகிறது.
பவர்டிரெய்ன்
விவரங்கள் |
Mahindra XUV700 AX5 Select |
Hyundai Alcazar Prestige Turbo |
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
200 PS |
160 PS |
டார்க் |
380 Nm |
253 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6MT 6AT |
6MT |
XUV700 ஒரு பெரிய மற்றும் அதிக சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. அதே நேரத்தில் அல்கஸாரின் இந்த வேரியன்ட்டுடன் ஆட்டோமேட்டிக் கொடுக்கப்படவில்லை.
மேலும் படிக்க: இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற 7 சிறப்பான 7-சீட்டர் எஸ்யூவி-கள்: உங்கள் பெரிய குடும்பத்திற்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்!
இரண்டும் டீசல் இன்ஜினுடன் வருகின்றன. XUV700 ஆனது 185 PS 2.2-லிட்டர் யூனிட்டை பெறுகிறது. அதே நேரத்தில் அல்கஸார் 116 PS 1.5-லிட்டர் யூனிட்டை வழங்குகிறது. இரண்டு இன்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுகின்றன. ஆனால் செயல்திறன் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதன் பெரிய திறன் கொண்ட இன்ஜின் காரணமாக மஹிந்திரா எஸ்யூவி -யானது ஹூண்டாய் காரை விட முன்னணியில் உள்ளது
வசதிகள்
வசதிகள் |
Mahindra XUV700 AX5 Select |
Hyundai Alcazar Prestige Turbo |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
கம்ஃபோர்ட் & வசதி |
|
|
பாதுகாப்பு |
|
|
அல்கஸாரின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் மிட்-ஸ்பெக் XUV700 காரை விட பல வடிவமைப்பு கேபின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பாக உள்ளது. XUV700 ஆனது அல்கஸாரை விட கூடுதலாக வைத்திருக்கும் விஷயம் ஒரு சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் தொகுப்பு ஒரு பெரிய டிரைவர் டிஸ்பிளே மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மட்டுமே.
எதை வாங்குவது?
இந்த இரண்டு மாடல்கள் மற்றும் இந்த குறிப்பிட்ட வேரியன்ட்களில் அல்கஸார் ஒட்டுமொத்தமாக சிறந்த தேர்வாகும். மேலும் இது அதிக பிரீமியம் மற்றும் அதே விலையில் சிறந்த வசதிகள் கொண்ட காராக இருப்பதால் அதைத் தேர்ந்தெடுப்பது அதிக மதிப்பை கொடுக்கக்கூடியதாக இருக்கும். மேலும் XUV700 நீளமாகவும் அகலமாகவும் உயரமாகவும் இருக்கும் அதே வேளையில் அல்கஸார் ஒரு நீண்ட வீல்பேஸுடன் உள்ளது இதன் விளைவாக கேபினுக்குள் அதிக இடம் கிடைக்கும்.
இருப்பினும் செயல்திறன் அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதிக்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால் XUV700 உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த விலையில் இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் ஃபுல்லி லோடட் வசதிகளுடன் மிகவும் சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் வழங்குகிறது. ஆகவே நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: XUV700 டீசல்
0 out of 0 found this helpful