சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra XUV400 இந்த தீபாவளிக்கு ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி க்காக நவ 06, 2023 01:49 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் டாப் வேரியன்ட்டின் பழைய யூனிட்களில் மட்டுமே கூடுதலான பலன்கள் கிடைக்கும்

  • 2023 ஆகஸ்ட் மாதத்தில் மஹிந்திரா சில பாதுகாப்பு அம்சங்களுடன் XUV400 காரை மேம்படுத்தியது.

  • ஆகஸ்ட் மாதத்திற்கு முந்தைய பழைய எலக்ட்ரிக் எஸ்யூவி -கள் மொத்தமாக ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடியை பெறுகின்றன.

  • புதுப்பிக்கப்பட்ட XUV400 ரூ. 3 லட்சம் வரை சேமிக்கலாம்.

  • நீங்கள் கார் வாங்கும் நகரத்தைப் பொறுத்து இந்த சலுகைகள் மாறுபடலாம்.

  • 2023 நவம்பர் மாதத்தின் இறுதி வரை மட்டுமே இந்த அனைத்து சலுகைளும் செல்லுபடியாகும்.

புதிய கார்கள் உட்பட புதிய தயாரிப்புகளை தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் ் மக்கள் வாங்குவார்கள், ஏனெனில் அவை அதிக தள்ளுபடிகள் மற்றும் பலன்களுடன் கிடைக்கும் எலக்ட்ரிக் SUVயை, குறிப்பாக மஹிந்திரா XUV400 வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதை வாங்குவதற்கு இதுதான் நல்ல நேரம். 2023 நவம்பர் மாதத்தில் எலக்ட்ரிக் காரில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம்.

நகரம் மற்றும் வேரியன்ட் வாரியான சலுகைகள்

Variant
வேரியன்ட்கள்

Delhi Offers
டெல்லி ஆஃபர்கள்

Mumbai Offers

மும்பை ஆஃபர்கள்

Non-ESP EC (3.2kW)

N.A.


ரூ. 1.5 லட்சம்

Non-ESP EL


ரூ. 3 லட்சம்


ரூ. 3.5 லட்சம்

Non-ESP EL Dual Tone


ரூ. 3 லட்சம்


ரூ. 3.5 லட்சம்

ESP EC (3.2kW)


ரூ. 1 லட்சம்


ரூ. 1.5 லட்சம்

ESP EL


ரூ. 2.5 லட்சம்


ரூ. 3 லட்சம்

ESP EL Dual Tone


ரூ. 2.5 லட்சம்


ரூ. 3 லட்சம்

குறிப்பு: இந்தச் சலுகைகள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்டின் அடிப்படையில் அவை மாறுபடும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

XUV400 ஆனது 2023 ஆகஸ்ட் மாதத்தில் சில பாதுகாப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டது, இதன் விலை ரூ. 20,000 வரை அதிகரித்துள்ளது. எனவே, ப்ரீ-அப்டேட் மாடலின் பழைய இன்வென்டரி அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்.

எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் மற்றும் சார்ஜிங் விவரங்கள்

மஹிந்திரா XUV400, EVயை இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது: 34.5kWh மற்றும் 39.4kWh இந்த பேட்டரிகள் 150PS மற்றும் 310Nm உற்பத்தி செய்யும் ஒற்றை மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. MIDC இன் படி 34.5kWh பேட்டரி மதிப்பிடப்பட்ட 375km பயணதூர வரம்பை வழங்குகிறது, அதே நேரத்தில் பெரிய 39.4kWh பேட்டரி 456km ரேன்ஜை கொண்டிருக்கும் என தெரிகிறது.

பின்வரும் காலகட்டங்களில் AC மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் இரண்டையும் பயன்படுத்தி SUV -க்கு ஆற்றல் அளிக்கப்படலாம்:

  • 50kW DC ஃபாஸ்ட் சார்ஜர்: 50 நிமிடங்கள்(0-80 சதவீதம்)

  • 7.2kW AC சார்ஜர் 6.5 மணிநேரங்கள்

  • 3.3kW டொமஸ்டிக் சார்ஜர்: 13 மணிநேரங்கள்

மேலும் படிக்க: 6 ஏர்பேக்குகளை ஸ்டான்டர்டாக கொண்டுள்ள ரூ.10 லட்சத்திற்கும் குறைவான 8 கார்கள்

விலை மற்றும் போட்டியாளர்கள்


மஹிந்திரா XUV400 கார்களின் விலை இப்போது ரூ. 15.99 லட்சம் முதல் ரூ. 19.39 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) இருக்கும். அதன் ஒரே நேரடி போட்டியாளர் டாடா நெக்ஸான் EV ஆகும். மேலும் இது MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள: மஹிந்திரா XUV400 EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி400 இவி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை