மஹிந்திரா, புக்கிங் செய்யப்பட்ட கார்களுக்கான முன்பணத்தை திருப்பி தருகிறது
published on டிசம்பர் 21, 2015 05:26 pm by sumit for மஹிந்திரா கேயூவி 100 என் எக்ஸ்டி
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்
சமீபத்தில் உச்ச நீதி மன்றம் கொண்டு வந்துள்ள சட்டத்தால் ( டீசல் வாகனங்கள் சம்மந்தான ) பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனம் . டெல்லியில் 2000 cc அல்லது அதற்கு கூடுதாலான திறன் கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட புதிய வாகனங்களை ரெஜிஸ்டர் (பதிவு) செய்ய உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இந்திய கார் தயாரிப்பாளர்களான மஹிந்திரா நிறுவனத்தினர் சைலோ, XUV 500 மற்றும் ஸ்கார்பியோ கார்களுக்காக பெற்றுள்ள முன்பணத்தை திருப்பி தர துவங்கி உள்ளனர். இந்த உச்ச நீதி மன்றத்தின் தடை உத்தரவு மஹிந்திரா நிறுவனத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்த தடை உத்தரவால் தங்களது ஒரு மாத மொத்த விற்பனையில் 2% குறைந்துள்ளதாக மஹிந்திரா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தடை உத்தரவு மற்றும் அதன் விளைவுகளை மனதில் கொண்டு , இந்த தடை உத்தரவினால் பாதிக்கபடாத தங்களது மற்ற தயாரிப்புக்களை சந்தை படுத்துவதில் மஹிந்திரா முனைப்புடன் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய e20 , வெரிடோ மற்றும் TUV 300வாகனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதன் விற்பனையை கூட்டும் விதத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர தங்களது புதிய படைப்பான KUV 100 சிறிய க்ராஸ்ஓவர் பிரிவு வாகனங்களை வரும் ஜனவரி மாத மத்தியில் மஹிந்திரா அறிமுகப்படுத்தும் என்றும் தெரிகிறது. வரும் ஜனவரி 5, 2016 அன்று இந்த டீசல் வாகனங்கள் மீதான தடை உத்தரவின் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற உள்ள நிலையில் , டீசல் வாகனங்கள் மீது "டீசல் வரி " விதிப்பது பற்றி ஆழ்ந்து விவாதிக்கப்பட உள்ளது. அந்த சட்டமும் அமல் படுத்தப்பட்டால் சிறிய , பெரிய என்று அனைத்து டீசல் என்ஜின் மூலம் இயங்கும் வாகனங்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டீசல் வாகனங்கள் மீதான தடை , வாகன தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுற்று சூழல் மாசுபடுவதை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி அரசு கொண்டு வந்துள்ள ஒற்றை - இரட்டை விதிமுறை கொண்டு வரப்பட்ட நாள் முதல் டெல்லி நகரம் வாகன தொழிற்துறையில் அதிகமாக பேசப்படும் இடமாக மாறியுள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு இந்த ஒற்றை /இரட்டை இலக்க விதிமுறை சோதனை ரீதியில் அமல்படுத்தப்படும் ஜனவரி 1, 2016 முதல் ஜனவரி 15, 2016 வரையிலான காலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க