TUV 300 காருக்கான புதிய கடினமான பாடிகிட் வசதியை மஹேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது
manish ஆல் செப் 19, 2015 11:52 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்திய வாகன சந்தையில் உள்ள வாடிக்கையாளர்கள், நம்பமுடியாத அளவில் அதீதமான ஈடுபாட்டை SUV வகை மீதும், கச்சிதமான சிறிய ரக கார்களின் மீதும் வெளிபடுத்துகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில், கச்சிதமான சிறிய ரகத்தை சேர்ந்த ஹுண்டாய் கிரேட்டாவின், 40,000 கார்களுக்கும் அதிகமான முன்பதிவே, இதற்கு நல்ல ஒரு உதாரணமாக திகழ்கிறது. இந்த SUV வகை கார்களை வாங்க முடிவு செய்ய இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன, அதில் ஒன்று பகட்டான ஆடம்பர தோற்றம் மற்றொன்று தரையிலிருந்து கணிசமான அளவு உயர்ந்து இருப்பது, என இரு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அழகிய வடிவமைப்பே இந்த கார் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் முதன்மையாக உள்ளது. மேலும், பெரிய தரை இடைவெளி அம்ஸமும், இந்த SUV வகை காரை நீண்ட காலம் சந்தையில் நிலைத்திருக்க செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
மஹேந்திராவின் புதிய கார், சற்றே குறைவான தரை இடைவெளியை கொண்டிருந்தாலும், அதுவே தற்போது இக்காரின் தோற்றத்தை கணிசமான அளவு உயர்த்தியுள்ளது. இந்திய வாகன சந்தையின் மாபெரும் உற்பத்தியாளரான மஹேந்திரா நிறுவனம், புதிய பாடிகிட் விருப்ப தெரிவுடன் TUV 300 மாடலை வெளியிட்டுள்ளது. ரூபாய் 6.9 லட்சத்திற்கு (மும்பை ஷோரூம் விலையாக) வெளியிடப்பட்ட TUV 300 எளிதாக வாங்கக்கூடிய விலையிலும், வசதியாக 7 நபர்கள் அமர கூடிய இருக்கைகளையும் தனது தனிச்சிறப்புகளாக கொண்டுள்ளது. இந்த கச்சிதமான SUV வகை கார் கம்பீரமான மற்றும் கடினமான பாடிகிட் வசதியுடன் அறிமுகப்படுத்தியிருப்பது, முன்பு வெளியான இதன் வரைவு ஓவியத்தை போலவே அருமையாகவும் மனதை கொள்ளை கொள்ளும்படியும் உள்ளது.
ஜீப் செரோகியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இதன் கிரில் மற்றும் பகட்டான மேற்பூச்சு கொண்ட முட்டுதாங்கி (பம்பர்) ஆகியன இணைந்து தனிச் சிறப்புடன் காட்சியளிக்கிறது. உட்புற தோற்றதில், சுற்றுப்புற ஒலி மேம்பாட்டு அமைப்பு (சரௌண்ட் சவுண்ட் சிஸ்டம்) மற்றும் பின்புற இருக்கையில் பொழுதுபோக்கு திரை ஆகியவை விருப்ப தெரிவுகளாக தரப்படுகிறது. மற்ற விருப்ப தெரிவாக, முன்புற மற்றும் பின்புற நிறுத்த உணரிகள் (பார்க்கிங் சென்சார்) விளங்குகின்றன. இதை போல பல வித கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் சேர்ந்து, போட்டிகளுக்கு ஏற்ற விலை, சரியான தரை இடைவெளி, அழகிய வடிவமைப்பு மற்றும் கம்பீரமாக உறுமும் சத்தம் ஆகிய அனைத்தின் உதவியோடும் மஹேந்திராவின் இந்த புது வரவான TUV 300 சந்தையில் இதன் போட்டியாளர்களான ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட், ஹுண்டாய் கிரேட்டா மற்றும் ரினால்ட் டஸ்டர் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறது என காணலாம்.
பிற விருப்ப தெரிவுகள்
வெளிப்புற தோற்றம்
- கடினமான தோற்றத்தை தரும் பாடிகிட்
- பற்பல இடங்களில் உள்ள அழகான குரோமிய பூச்சு
- உலோகத்தால் ஆன சக்கர மூடி
- ஒளியூட்டப்பட்ட ஸ்கஃப் தகடுகள்
- இருக்கை உறைகள்
- பக்க படிகள்
- கூரை கேரியர்
- சைக்கிள் கேரியர்
- இயந்திர அலாய் சக்கரங்கள்
- செனோன் முகப்பு விளக்குகள்
- முன்புற மற்றும் பின்புற நிறுத்தம் உணரிகள் (பார்க்கிங் சென்சார்)
உட்புற தோற்றம்
- பின்புற இருக்கையில் பொழுதுபோக்கு திரை
- தெர்மோ-மின் குளிர்விப்பான்
- ஓட்டுனர்கள் வசதியாக தலை நிமிர்ந்த நிலையில் ஓட்டுவதற்கான ஹெட்ஸ் அப் அமைப்பு
- சுற்றுபுற ஒலி மேம்பாட்டு சாதனம் (சரௌண்ட் சவுண்ட் சிஸ்டம்)