மஹிந்திரா KUV 100 நாளை அறிமுகமாகிறது

மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி க்கு published on ஜனவரி 14, 2016 01:18 pm by manish

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

Mahindra KUV100

மஹிந்திரா  நிறுவனத்தின்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட KUV – 100 மைக்ரோ SUV கார்கள் நாளை அறிமுகமாகிறது. இந்தய வாகன உலகில் புதிய மைக்ரோ SUV என்ற பிரிவு உதயமாகிறது. இந்த பிரிவில் தற்போது வேறு எந்த காரும் இல்லாத நிலையில் , இந்த KUV 100 கார்கள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும். ஆனால் இந்த வருட பிற்பகுதியில் மாருதி நிறுவனம் இதே பிரிவில் இக்னைஸ் மைக்ரோ SUV கார்களை அறிமுகப்படுத்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  இந்த காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்களைக் காட்டும்  வீடியோ ஒன்று நமது உளவாளிகளின் கண்ணில் சிக்கியது. இந்த கார் எவ்வாற இயங்கும் என்பதும் ஓரளவு இந்த வீடியோ படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

KUV 100 ஒரு சிக்ஸ் சீட்டர் ( ஆறு பேர் அமரும் வசதி  ) வசதி கொண்ட வாகனமாகும்.  முன்னிருக்கையில் இரண்டு பேர் அமரும் பெஞ்ச் சீட் வசதியும்  , கியர் ஷிப்ட்டர்  டேஷ்போர்ட் உடன் இணைக்கப்பட்டிருப்பதும் இந்த கார் மற்ற கார்களின் சராசரியான வடிவமைப்பை உடைத்து வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு தக்க சான்றாகும்.   இந்த புதுமையான வடிவமைப்பின் மூலம் கேபின் இடவசதி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன்,  பெஞ்ச் இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது.   

Mahindra KUV100 

இந்த புதிய மைக்ரோ SUV எம்பால்கன் (mFalcon) என்ஜின் வகைகள் மூலம் சக்தியூட்டப்படுகிறது. 82PS  அளவு சக்தியை வெளியிடக்கூடிய 1.2-லிட்டர் , 3 சிலிண்டர் எம்பால்கன் G80  பெட்ரோல் யூனிட் பொருத்தப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிகிறது .இந்த என்ஜின் குறிப்பாக க்ரேண்ட் i10, ஸ்விப்ட், போல்ட் மற்றும் இன்னும் சில கார்களுடன் இந்த KUV 100 போட்டியிட உதவும். டீசல் ஆப்ஷனைப் பொறுத்தவரை 77PS  அளவு சக்தியை வெளியிடும் ஆற்றல் கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்படும் என்றும் தெரிகிறது. இந்த டீசல்  இன்ஜின் ஆற்றலின் அளவு போர்ட் பீகோ கார்களின் அபார 100PS ஆற்றலுடன் ஒப்பிடுகையில் மட்டும் சற்று குறைவாக உள்ளதை நாம் மறுக்க முடியாது.   

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா KUV 100 NXT

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

trendingஹாட்ச்பேக்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience