மஹிந்திரா KUV100-யை குறித்து நீங்கள் அறிய வேண்டியவை!
மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டீ க்காக டிசம்பர் 21, 2015 04:07 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- 18 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
நம் நாட்டின் மிகப்பெரிய பயன்பாட்டு வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா அண்டு மஹிந்திரா, KUV100-ன் மூலம் மைக்ரோ SUV பிரிவில் நேற்று களமிறங்கியது. தற்போது இதன் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், வரும் 2016 ஜனவரி 15 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜெய்ப்பூர்:
அதிக எதிர்பார்ப்பு மற்றும் காத்திருப்பை ஏற்படுத்திய மஹிந்திராவின் S101 நேற்று வெளியிடப்பட்டது. இந்த வாகனத்திற்கு அதிகாரபூர்வமாக KUV100 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரின் பிற்பகுதியை ‘ஒன் டபுள் ஜீரோ’ என்று உச்சரிக்க வேண்டும். இந்த வாகனத்தில் மஹிந்திராவின் புதிய mஃபால்கன் குடும்பத்தை சேர்ந்த டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. KUV1OO-ன் முன்பதிவை ஏற்றுக் கொள்ள துவங்கியுள்ள மஹிந்திரா நிறுவனம், 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக, அதாவது 2016 ஜனவரி 15 ஆம் தேதியன்று அறிமுகம் செய்ய உள்ளது.
இயந்திரவியல்
- mஃபால்கன் D75 – 1.2-லிட்டர் 3-சிலிண்டர் டர்போ டீசல் மூலம் 3,750 rpm-ல் 77bhp ஆற்றலையும், 1,750-2,250 rpm என்ற இடைப்பட்ட நிலையில் 190 Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது.
- mஃபால்கன் G80 – 1.2-லிட்டர் 3-சிலிண்டர் இயல்பான உள்ளிழப்பு பெட்ரோல் 5,500 rpm-ல் 82 bhp ஆற்றலும், 3,500 rpm-ல் 114 Nm என்னும் உயர் முடுக்குவிசையையும் அளிக்கிறது.
- டிரான்ஸ்மிஷன் – அறிமுக நேரத்தில் KUV100-ல் ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் பிற்காலத்தில் இதில் ஒரு AMT பாக்ஸை, மஹிந்திரா நிறுவனம் அளிக்க வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு
KUV100-ன் எல்லா வகைகளிலும் தரமான ABS-யை, மஹிந்திரா நிறுவனம் அளிக்க உள்ளது. ஆனால் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகளை பொறுத்த வரை, துவக்க வகையில் தேர்விற்குட்பட்டதாக அளிக்கப்படும்.
அம்சங்கள் மற்றும் உட்புற அமைப்பியல்
KUV100-ன் உட்புற அமைப்பு மற்றும் அம்சங்களை குறித்து, மஹிந்திரா தரப்பில் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஏற்கனவே இந்த வாகனத்தின் கேபின் பல முறை வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வேவுப் பார்க்கப்பட்ட படங்களை வைத்து, இந்த வாகனத்தில் 6-சீட்களை கொண்டு, முன்பக்கத்தில் நடுவே உள்ள சீட்டை மடக்கி, கப்-ஹோல்டர்களை கொண்ட ஆர்ம்ரெஸ்ட்டாக பயன்படுத்த முடியும் என்பதை அறியலாம். இதில் உள்ள ஆடியோ சிஸ்டம் குறித்து பார்க்கும் போது, பெரும்பாலும் TUV3OO-ல் உள்ளது போன்ற ப்ளூடூத் இணைப்பு, USB, AUX-இன், மஹிந்திரா ப்ளூ சென்ஸ் ஆப் இன்டிகிரேஷன், இன்டேல்லிபார்க் ரிவெர்ஸ் அசிஸ்ட், வாய்ஸ் மெசேஜிங் சர்வீஸ் ஆகிய அதே அம்சங்களை பகிர்ந்து கொள்ளக் கூடும் என்று தெரிகிறது.
விலைகள்
வரும் 2016 ஜனவரி 15 ஆம் தேதியன்று விலைகள் அறிவிக்கப்படும் என்றாலும், B-பிரிவை சேர்ந்த ஹேட்ச்களான ஹூண்டாய் கிராண்ட் i10, 2015 ஃபோர்டு ஃபிகோ, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் பல வாகனங்களின் விலைப் பட்டியலை ஒத்துக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை நிர்ணயம் ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான நிலையில் உட்பட்டு அமையலாம் என்று தெரிகிறது. எனவே தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.
மேலும் வாசிக்க