மஹிந்த்ரா தனது TUV 300 வாகன தயாரிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தவுள்ளது
sumit ஆல் டிசம்பர் 11, 2015 12:09 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
பெருகி வரும் தேவைகளை சமாளிக்க, மஹிந்த்ரா தனது TUV 300 மாடலின் தயாரிப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும் ஆச்சர்யம் தரும் பேராதரவிற்கு பிறகு (குறிப்பாக AMT வகைகளுக்கான), இந்த இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் தனது உற்பத்தி எண்ணிக்கையை சுமார் 6,000 என்ற அளவிற்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
மாதத்திற்கு, ஏறத்தாழ 4,000 கார்கள் என்ற அளவில் விற்பனையாகி கொண்டிருக்கும் மஹிந்த்ரா TUV 300 மாடல், கடும் போட்டி நிறைந்த பிரிவில் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த சப்-4m SUV கார், ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் மற்றும் ரினால்ட் டஸ்டர் ஆகியவற்றின் மீது மக்களுக்கு உள்ள ஆர்வத்தை சற்றே மட்டுப்படுத்தி, மாருதி S க்ராஸ் மற்றும் ஹுண்டாய் கிரேட்டா கார்கள் மீது மக்களுக்கு உள்ள மோகத்துடனும் போட்டியிட்டு, தனது அபார செயல்திறனால் சந்தையில் தன்னை நிலைநாட்டி கொண்டிருக்கிறது. இந்திய வாகன சந்தையில் நடக்கும் இந்த கழுத்து பிடி போட்டியில் தாக்குபிடித்து, அறிமுகமான இரண்டு மாதங்களுக்குள்ளாகவே 12,000 முன்பதிவுகளை வெற்றிகரமாக பெற்றுள்ளது என்பது ஒரு சாதனை என்றே குறிப்பிடவேண்டும். அதே நேரத்தில், இந்நிறுவனத்தின் மார்கெட்டிங் தந்திரங்கள் சரியாக வேலை செய்துள்ளது என்றும் தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், TUV 300 AMT வகை காருக்கான ஆதரவு ஆச்சர்யமூட்டும் விதமாக இருக்கிறது. ஆட்டோமாட்டிக் வகை கார்களின் முன்பதிவு மட்டும், மொத்த பதிவான 12,000 எண்ணிக்கையில் 50 சதவிகிதம் இருக்கிறது. சமீபத்திய தகவலின் படி, 16,000 –க்கும் அதிகமான TUV 300 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. TUV 300 காரின் இமாலய வெற்றிக்கு முக்கிய காரணம் இதன் விலையாகும். ஏனெனில், இந்த பிரிவில் இதே அம்சங்களை கொண்ட மற்ற கார்களின் விலையோடு ஒப்பிடும் போது, TUV 300 கார்கள் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன.
84 bhp சக்தி மற்றும் 230 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் mHAWK 80 டீசல் இஞ்ஜின் கொண்டு, இந்த காம்பாக்ட் SUV மாடல் சக்தியூட்டப்படுகிறது. AMT கியர்பாக்ஸ் தவிர, 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனோடும் இதன் இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை ஒட்டி, இந்த காரின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மஹிந்த்ரா மட்டுமல்ல, அனைத்து ஆட்டோ தயாரிப்பாளர்களும் புத்தாண்டு முதல் ஆட்டோமொபைல் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க