சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra Bolero Neo Plus மற்றும் Mahindra Bolero Neo ஆகியவற்றுக்கு இடையேயான டாப் 3 வித்தியாசங்கள் இங்கே

published on ஏப்ரல் 18, 2024 08:19 pm by shreyash for மஹிந்திரா பொலேரோ நியோ

கூடுதல் சீட் வசதியுடன், பொலிரோ நியோ பிளஸ் பெரிய டச்ஸ்க்ரீன் மற்றும் பெரிய டீசல் இன்ஜினை பெறுகிறது.

மஹிந்திரா சமீபத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ், பொலிரோ நியோவின் 9 சீட்கள் கொண்ட வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திரா பொலிரோ நியோவின் இந்த நீட்டிக்கப்பட்ட வெர்ஷன் இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: P4 மற்றும் P10. அதன் பெரிய டைமென்ஷன்கள் மற்றும் கூடுதல் சீட்கள் திறன் ஆகியவற்றை தவிர பொலிரோ நியோ பிளஸ் அதன் சிறிய 7-சீட்டர் பொலிரோ நியோ உடன் ஒப்பிடும்போது வசதிகள் மற்றும் பவர்டிரெயின் அடிப்படையில் சற்று வேறுபடுகிறது. அதன் விவரங்களைப் பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்:

அளவுகள் மற்றும் சீட்டிங் லேஅவுட்



அளவுகள்



மஹிந்திரா பொலேரோ நியோ பிளஸ்



மஹிந்திரா பொலேரோ நியோ



நீளம்



4400 mm



3995 mm



அகலம்



1795 mm



1795 mm



உயரம்



1812 mm



1817 mm



வீல்பேஸ்



2680 mm



2680 mm



சீட்டிங் கான்பிகரேஷன்



7-சீட்டர்



9-சீட்டர்

பொலிரோ நியோவுடன் ஒப்பிடும்போது, ​​பொலிரோ நியோ பிளஸ் 515 மிமீ நீளம் கொண்டது, இரண்டு கார்களும் ஒரே அகலம் மற்றும் வீல்பேஸ் கொண்டவை. இரண்டில் மிக நீளமானது, பொலிரோ நியோ பிளஸ் நீளமான பக்கவாட்டு ஜம்ப் சீட்களைக் கொண்டுள்ளது, இது 9 சீட்களை கொண்ட எஸ்யூவி -யாகும். இருப்பினும் நியோ 7 சீட்டர் அதன் 9 சீட்டர் எடிஷனை விட சற்று உயரமாக உள்ளது.

வசதிகளில் உள்ள வேறுபாடுகள்

இந்த இரண்டு எஸ்யூவி -களுக்கு இடையே உள்ள முக்கியமான வித்தியாசம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகும். பொலிரோ நியோ பிளஸில் ஒரு பெரிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. ஆனால், இது க்ரூஸ் கன்ட்ரோல் வசதியை கொண்டிருக்கவில்லை. மாறாக, பொலிரோ நியோ ஒரு சிறிய 7-இன்ச் டச்ஸ்க்ரீன் சிஸ்டத்தை கொண்டுள்ளது, ஆனால் க்ரூஸ் கன்ட்ரோலை உள்ளடக்கியது. இது நீண்ட நெடுஞ்சாலை பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் பார்க்க: மஹிந்திரா XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) மீண்டும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, இது கனெக்டட் கார் டெக்னாலஜியை இருப்பதை உறுதிப்படுத்துகிறது

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்

பொலிரோ நியோவுடன் ஒப்பிடும்போது, ​​பொலிரோ நியோ பிளஸ் ஒரு பெரிய டீசல் இன்ஜினுடன் வருகிறது. இரண்டு எஸ்யூவி -களுக்கான விரிவான இன்ஜின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:



விவரங்கள்



பொலேரோ நியோ பிளஸ்



பொலேரோ நியோ



இன்ஜின்



2.2 லிட்டர் டீசல்



1.5 லிட்டர் டீசல்



பவர்



120 PS



100 PS



டார்க்



280 Nm



260 Nm



டிரான்ஸ்மிஷன்



6-ஸ்பீட் MT



5-ஸ்பீட் MT

பொலிரோ நியோவின் 9-சீட்டர்களை கொண்ட வெர்ஷன், அதிக சக்திவாய்ந்த டீசல் இன்ஜினை பெறுவது மட்டுமல்லாமல், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் பெறுகிறது.

விலை மற்றும் வேரியன்ட்கள்



பொலேரோ நியோ பிளஸ்



பொலேரோ நியோ



ரூ.11.39 லட்சம் முதல் ரூ.12.49 லட்சம் வரை



ரூ.9.90 லட்சம் முதல் ரூ.12.15 லட்சம் வரை

விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை

பொலிரோ நியோ பிளஸ் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: P4 மற்றும் P10 - அதேசமயம் பொலிரோ நியோ நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: N4, N8, N10 மற்றும் N10 (O). இந்த இரண்டு எஸ்யூவி -களும் மஹிந்திரா ஸ்கார்பியோ - N மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவற்றுக்கு மலிவு விலையில் உள்ள மாற்றாகக் இருக்கும்.

மேலும் படிக்க: மஹிந்திரா பொலேரோ நியோ டீசல்

s
வெளியிட்டவர்

shreyash

  • 53 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மஹிந்திரா போலிரோ Neo

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.86.92 - 97.84 லட்சம்*
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை