• English
  • Login / Register

Mahindra Bolero Neo Plus காரின் கலர் ஆப்ஷன்கள் விவரங்கள் இங்கே

published on ஏப்ரல் 22, 2024 07:40 pm by rohit for மஹிந்திரா போலிரோ neo பிளஸ்

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது: P4 மற்றும் P10

Mahindra Bolero Neo Plus colour options detailed

  • பொலிரோ நியோ ப்ளஸ் அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட TUV300 பிளஸ் ஆகும்.

  • மெஜஸ்டிக் சில்வர் டயமண்ட் ஒயிட் மற்றும் நபோலி பிளாக் ஆகியவை இந்த காரில் கிடைக்கும் எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்கள் ஆகும்.

  • 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் ஒற்றை 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் கிடைக்கிறது.

  • பொலிரோ நியோ ப்ளஸ் காரின் விலை ரூ. 11.39 லட்சம் மற்றும் ரூ. 12.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கின்றது.

மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் ( ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட TUV300 பிளஸ்) சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: P4 மற்றும் P10. இது 7-சீட் பொலிரோ நியோவை போலவே இருக்கின்றது. ஆனால் ஒட்டுமொத்த நீளம் மற்றும் கேபின் வசதிகள் மற்றும் இருக்கை அமைப்பில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் காரை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த காரில் கிடைக்கும் அனைத்து கலர் ஆப்ஷன்களையும் பாருங்கள்:

Mahindra Bolero Neo Plus Majestic Silver

  • மெஜஸ்டிக் சில்வர்

Mahindra Bolero Neo Plus Diamond White

  • டயமண்ட் வொயிட்

Mahindra Bolero Neo Plus Napoli Black

  • நபோலி பிளாக்

பொலிரோ நியோ பிளஸ் மேலே குறிப்பிட்டுள்ள அதே மூன்று ஷேடுகளை பெறுகிறது பொலேரோ நியோ ராக்கி பெய்ஜ் மற்றும் ஹைவே ரெட் நிறங்கள் பொலிரோ நியோவிற்கு மட்டுமே பிரத்தியேகமானவை. இரண்டு எஸ்யூவி -க்களுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் பொலிரோ நியோ பிளஸ்' மெஜஸ்டிக் சில்வர் கலருக்கு பதிலாக பிந்தையவற்றின் சில்வர் பெயிண்ட் ஆப்ஷன் 'டிசாட் சில்வர்' என்று அழைக்கப்படுகிறது. இரண்டு எஸ்யூவி -களிலும் எந்த டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனும் கொடுக்கப்படவில்லை.

தொடர்புடையது: Mahindra Bolero Neo Plus மற்றும் Mahindra Bolero Neo ஆகியவற்றுக்கு இடையேயான டாப் 3 வித்தியாசங்கள் இங்கே

டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே

மஹிந்திரா ஒரு 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் (120 PS/280 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் ஆப்ஷனை பெறவில்லை. மேலும் இது ஒரு ரியர் வீல் டிரைவ் (RWD) எஸ்யூவி ஆகும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்

Mahindra Bolero Neo Plus cabin

பொலிரோ நியோ பிளஸ் ஆனது புளூடூத் aux மற்றும் USB கனெக்ட்டிவிட்டியுடன் கூடிய 9-இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட் உடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றைப் பெறவில்லை. இது 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் அனைத்து நான்கு பவர் ஜன்னல்கள் மேனுவல் ஏசி மற்றும் ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் இருக்கையுடன் வருகிறது. இதன் பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்குகள் EBD உடன் ABS முன் ஃபாக் லைட்ஸ் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் விலை ரூ.11.39 லட்சம் முதல் ரூ.12.49 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எந்த நேரடி போட்டியாளர்களும் கிடையாது. ஆனால் இது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N ஆகியவற்றுக்கு விலை குறைவான விருப்பமாக கருதப்படலாம் 

மேலும் படிக்க: பொலிரோ நியோ பிளஸ் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra போலிரோ Neo Plus

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience