சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

3.4 நொடிகளில் 100 கி.மீ வேகம், ரூ. 4.57 கோடி விலையில் Lamborghini Urus SE அறிமுகம்

shreyash ஆல் ஆகஸ்ட் 09, 2024 04:19 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
104 Views

உருஸ் SE காரில் 4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இது இன்டெகிரேட்டட் ஆக 800 PS பவரை கொடுக்கிறது. இந்த கார் 3.4 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும்.

  • உருஸ் SE ஆனது புதிய ஹூட், LED DRL -கள், முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ஆகியவற்றின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • கேபினில் ரெவல்டோ இன்ஸ்பைர்டு டேஷ்போர்டு மற்றும் ஆரஞ்சு கலர் இன்செர்ட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் மற்றும் பவர்டு முன் சீட்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது.

  • பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், பின்புறக் வியூ கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • வி8 டர்போ-பெட்ரோல் இன்ஜின் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது

உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு லம்போர்கினி உருஸ் SE இறுதியாக ரூ. 4.57 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) விலையில் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த பிளக்-இன் ஹைப்ரிட் பெர்ஃபாமன்ஸ் எஸ்யூவி சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் ஒரு ரிவால்டோ-இன்ஸ்பயர்டு கேபின் மற்றும் 4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட 25.9 kWh பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வரும் உருஸ் SE ஆனது 60 கி.மீ வரை அனைத்து எலக்ட்ரிக் ரேஞ்சை வழங்குகிறது. உருஸ் SE காரில் என்ன கிடைக்கும் என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள்

முதல் பார்வையில் உருஸ் SE ஆனது உருஸ் S காரை போலவே தோன்றுகிறது; இருப்பினும் மற்ற உருஸ் வேரியன்ட்களில் இருந்து வேறுபடுத்தும் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளன. போனட் பகுதியின் வடிவமைப்பும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் உருஸ் எஸ் மற்றும் உருஸ் பெர்ஃபார்மன்ஸ் ஆகியவற்றில் காணப்படும் ஏர் ஸ்கூப்கள் இனி இடம்பெறாது. கூடுதலாக உருஸ் SE ஆனது Y-வடிவ DRL களுக்கு பதிலாக C-வடிவ LED DRL -களுடன் வருகிறது. கிரில் மற்றும் முன்பக்க பம்பருக்கு சிறிய அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய அலாய் வீல்களை தவிர பக்கவாட்டில் உருஸ் SE கார் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் பெறவில்லை. வீல்களின் அளவு 21 முதல் 23 இன்ச் ஆக உள்ளது. பின்புறத்தில் உருஸ் SE ஆனது அப்டேட்டட் பம்பர் மற்றும் டிஃப்பியூசரைக் கொண்டுள்ளது. ஆனால் இது மற்ற உருஸ் வேரியன்ட்களில் காணப்படும் அதே Y-வடிவ LED டெயில் லைட்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெயில் லைட்களுக்கு கீழே லம்போர்கினி கல்லார்டோ காரின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு அறுகோண வடிவிலான மெஷ் உள்ளது. புதிய பின்புறம் உருஸ் S காரை விட 35 சதவிகிதம் அதிவேக டவுன்ஃபோர்ஸை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெவால்டோ-இன்ஸ்பையர்டு கேபின்

லம்போர்கினி உருஸ் SE காரில் ரெவால்டோ இன்ஸ்பைர்டு டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், டோர் பேட்கள் மற்றும் இருக்கைகளில் ஆரஞ்சு கலர் இன்செர்ட்களுடன் புதுப்பிக்கப்பட்ட கேபினை பெறுகிறது. ஏசி வென்ட்களின் வடிவமைப்பு முன்பு இருந்ததைப் போலவே இருந்தாலும், இப்போது நீங்கள் உருஸ் SE -க்குள் ஒரு பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட்டை பெறுவீர்கள். மற்ற லம்போர்கினிகளை போலவே உருஸ் SE ஆனது பல்வேறு கேபின் தீம்களில் கிடைக்கிறது. மற்றும் அதன் உட்புறத்திற்கான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களையும் பெறுகிறது.

உருஸ் SE ஆனது 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே, மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பவர்டு மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்

லம்போர்கினியின் பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆனது 25.9 kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 4-லிட்டர் V8 டர்போ இன்ஜினுடன் வருகிறது. விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இன்ஜின்

4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல் + 25.9 kWh பேட்டரி பேக்

இன்ஜின் பவர்/டார்க்

620 PS/800 Nm

எலக்ட்ரிக் மோட்டார் பவர்

192 PS/ 483 Nm

இன்டெகிரேட்டட் பவர் / டார்க்

800 PS/950 Nm

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் (AT)

டிரைவ் டைப்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

ஆக்ஸிலரேஷன் (0-100 கிமீ/மணி)

3.4 வினாடிகள்

அதிகபட்ச வேகம்

மணிக்கு 312 கி.மீ

உருஸ் SE பியூர் எலக்ட்ரிக் டிரைவிங் மோடை கொண்டுள்ளது. இதில் 130 கி.மீ வேகத்தில் 60 கி.மீ டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. இந்த பிளக்-இன் ஹைப்ரிட் பெர்ஃபாமன்ஸ் எஸ்யூவி -யில் ஸ்ட்ராடா, ஸ்போர்ட், கோர்சா, சாபியா, டெர்ரா மற்றும் நெவ் என 6 டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்கள்

லம்போர்கினி உருஸ் SE -க்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: உருஸ் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Lamborghini அர்அஸ்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6 - 10.51 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.67.65 - 73.24 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.8.25 - 13.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை