நவம்பர் மாதத்தில் ரெனால்ட் இந்தியாவிற்கு 144% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்ய க்விட் உதவி
published on டிசம்பர் 03, 2015 05:49 pm by akshit for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லி:
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட துவக்க-நிலை தயாரிப்பான க்விட் காரின் தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதத்தில் ரெனால்ட் இந்தியா 144 சதவீதம் என்ற ஒரு மலைக்க வைக்கும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பிரான்ஸ் நாட்டு வாகன தயாரிப்பாளர் கடந்த மாதம் 7,819 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், இதே காலளவில் கடந்தாண்டு 3,201 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது.
இந்நிறுவனத்தின் விற்பனை செயல்பாட்டை குறித்து ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO திரு.சுமித் சாஹ்னி கூறுகையில், “இந்தியாவில் ரெனால்ட் க்விட்டை நாங்கள் அறிமுகம் செய்த போது, இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையில் ஒரு புதிய சகாப்தம் அல்லது திறனளவை அறிமுகம் செய்ய போவதாக உணர்ந்தோம். இந்நிலையில் இந்த காருக்கு கிடைத்துள்ள தனித்தன்மை வாய்ந்த கருத்துக்கள் மற்றும் ஆச்சரியப்படுத்தும் வரவேற்பு ஆகியவை, இதை நிரூபிக்கின்றன” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த வரலாற்று சிறப்புமிக்க காரின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி அதிகப்படுத்துவதை கருத்தில் கொண்டு, ஒருமனத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் செய்ய வேண்டிய எங்களின் விரிவாக்கத் திட்டங்களில், ரெனால்ட் க்விட் தொடர்ந்து மிக முக்கியமான பங்கை வகிக்கும். எங்களின் கவர்ச்சிகரமான, புதுமையான மற்றும் மலிவான தயாரிப்பின் மூலம் எல்லோருக்கும் எளிதான பயணத்தை நாங்கள் உறுதி செய்ததன் எதிரொலியாக, இந்தியாவில் நகர்புற மற்றும் கிராமபுற பகுதிகளை உட்கொண்ட புதிய வாடிக்கையாளர்களின் கூட்டத்தை, முதல் முறையாக கூடிவரும் நுகர்வோர் இடையே எங்களுக்கு காண கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்” என்றார்.
க்விட் காருக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரெனால்ட் நிறுவனம் அதன் தயாரிப்பை அதிகரித்துள்ளது. அதோடு நில்லாமல், நாடெங்கிலும் உள்ள அதன் விற்பனை மற்றும் சர்வீஸ் இணைப்பை, கணிசமான அளவில் இந்நிறுவனம் அதிகரித்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டின் மத்தியில் வெறும் 14 விற்பனை மற்றும் சர்வீஸ் நிலையங்களை கொண்டிருந்த நிலையில், தற்போது அது 190 ஆக உயர்த்தப்பட்டு, அடுத்த ஆண்டின் முடிவில் இந்த எண்ணிக்கையை 240 நிலையங்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி விரிவாக்கத்தில் தற்போதைய சந்தைகளை மட்டும் உட்கொள்ளாமல், இந்தியாவில் உள்ள கிராமப்புறம், நகர்புறம், நகர்புறத்தை சார்ந்த பகுதிகளிலும் புதிய சந்தைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்