KUV 100 வேரியண்ட்களைப் பற்றிய விவரங்கள்: அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளன
மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டீ க்காக ஜனவரி 18, 2016 12:20 pm அன்று sumit ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 13 Views
- 8 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்தவுள்ள காரின் பெயரை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், KUV 100 என்று அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர், அனைத்து தரப்பு கார் பிரியர்களும் இதைப் பற்றிதான் உற்சாகத்துடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வாகன பிரியர்களின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்த, நாம் KUV 100 காரின் சிறப்பம்ஸங்கள் மற்றும் விவரங்களை இங்கே வேரியண்ட் வாரியாக தொகுத்து அளித்திருக்கிறோம். K2, K4, K6 மற்றும் K8 என்ற நான்கு விதமான வேரியண்ட்களில், இந்த மைக்ரோ SUV வெளியிடப்படும். 2016 ஜனவரி 15 –ஆம் தேதி, இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில், மஹிந்த்ரா நிறுவனம் வெளியிட்ட ஒரு டீசரில், இந்த காரின் பின்புறம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அனைத்து KUV 100 வேரியண்ட்களிலும், பாதுகாப்பு அம்சமான ABS அமைப்பு பொருத்தப்படும். ஆனால், ஏர் பேக்குகள் ஆப்ஷனல் அம்சமாக வருகிறது. தேவைப்பட்டவர்கள், இதனை இணைத்துக் கொள்ளலாம். வேரியண்ட் வாரியாக விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
K2 (அடிப்படை)
- டில்ட் ஃபங்சன்னுடன் வரும் பவர் ஸ்டியரிங்
- மேனுவல் AC மற்றும் ஹீட்டர்
- முன்புறத்தில் ஆர்ம்ரெஸ்ட்
- கியர் ஷிப்ட் இன்டிகேட்டர்
- பின்புறத்தில் ஸ்பாய்லர்
- EBD –யுடன் வரும் ABS மற்றும் இஞ்ஜின் இம்மொபிலைசர்
- பாடி நிறத்திலேயே பம்பர்கள்
- ஸ்டீல் சக்கரங்கள்
K4
- மடக்கக் கூடிய பின்புற சீட்கள்
- பவர் விண்டோக்கள்
- பாடி வண்ணத்திலேயே கதவு கைப்பிடி மற்றும் விங் பிளாப்கள்
- சக்கர ஆர்ச்சில் கிளாடிங்க்
- மட் பிளாப்கள் மற்றும் வீல் கேப்கள்
- சென்ட்ரல் லாகிங்க் அமைப்பு
K6
- ட்ரைவ் மோட்கள் – பவர் மற்றும் எக்கோ
- 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீடர்கள் இணைந்த இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்
- கருப்பு நிறத்தில் B பில்லர்
- காரின் மேலே, ரூஃப் ரைல்ஸ் மற்றும் ஆன்டெனா
- கதவுகளில் கிளாடிங்க்
- பியானோ கருப்பு வண்ணத்தில் சென்டர் கன்சோல்
- டிரைவர் சீட் உயரத்தை மாற்றி அமைக்கலாம்
- பின்புறத்தில் ஆர்ம்ரெஸ்ட்
- கீ-லெஸ் என்ட்ரி
- விங் மிர்ரர்களை மின்சாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்
- குளிரூட்டப்பட்ட கிலோவ் பாக்ஸ்
- முன்புற கதவுகளில் படுள் விளக்குகளுடன் வரும் ஃபாலோ-மீ-ஹோம் முன்புற விளக்குகள்
- குரோம் வேலைப்பாடுகளுடன் வரும் முன்புற கிரில்
K8
- மைக்ரோ ஹைபிரிட் அமைப்பு
- 12 ஸ்போக் அலாய் சக்கரங்கள்
- முன்புறத்தில் க்ரோமிய இன்ஸர்ட்களுடன் கூடிய பனி விளக்குகள்
- அனைத்து கதவுகளுக்கும் படில் விளக்குகள்
- பின்புற கதவு கைபிடிகளில் வெள்ளி நிறத்தில் வேலைப்பாடு
- காலையிலும் இயங்கும் விளக்குகள்
மஹிந்த்ராவின் புதிய mஃபால்கான் இஞ்ஜின் வரிசையில் உள்ள இஞ்ஜின்கள், KUV 100 காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இஞ்ஜின் வரிசையில் மொத்தம் 6 இஞ்ஜின்கள் உள்ளன. இவற்றில், KUV காரில் 1.2 லிட்டர் இஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் இஞ்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. KUV –யில் உள்ள பெட்ரோல் இஞ்ஜின் 82 bhp சக்தி மற்றும் 114 Nm என்ற அளவில் அதிகபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், KUV 100 காரின் டீசல் இஞ்ஜின், 77 bhp அளவு சக்தி மற்றும் 190 Nm அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஆரம்பமாகி, தற்போது முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்ய ரூ. 10,000 வசூலிக்கப்படுகிறது. KUV –யின் விலை பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இதன் விலை ரூ4 லட்சங்கள் முதல் ரூ. 7 லட்சங்கள் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க