ICCU பாகத்தில் கண்டறியப்பட்ட குறைபாட்டின் காரணமாக 1100-க்கும் மேற்பட்ட Kia EV6 கார்கள் ரீகால் செய்யபட்டுள்ளன
இன்டிகிரேட்டட் சார்ஜிங் கன்ட்ரோல் யூனிட்டில் (ICCU) ஏற்பட்ட சிக்கல் காரணமாக கியா EV6 கார்கள் ரீகால் செய்யப்படுகின்றன.
-
மார்ச் 3, 2022 முதல் ஏப்ரல் 14, 2023 வரை தயாரிக்கப்பட்ட யூனிட்கள் இந்த ரீகாலால் பாதிக்கப்பட்டுள்ளன.
-
ICCU-இல் ஏற்பட்ட சிக்கலால் கார்கள் ரீகால் செய்யபட்டுள்ளது, இது இரண்டாம் நிலை பேட்டரியை டிஸ்சார்ஜ் செய்வதற்கு வழிவகுக்கும்.
-
EV6-இன் உரிமையாளர்கள் தங்களின் கார்களை ஆய்வுக்காக அருகிலுள்ள கியா -வின் அங்கீகரிக்கப்பட்ட ஒர்க் ஷாப்பிற்கு எடுத்துச் சென்று பழுதடைந்த பகுதியை மாற்றிக்கொள்ளலாம்.
-
இது 77.4 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது RWD மற்றும் AWD டிரைவ் டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
-
EV6-இன் விலை ரூ.60.97 லட்சம் முதல் ரூ.65.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை உள்ளது.
மார்ச் 3, 2022 மற்றும் ஏப்ரல் 14, 2023-க்கு இடையில் தயாரிக்கப்பட்ட EV6-இன் இன்டெக்ரேட்டட் சார்ஜிங் கன்ட்ரோல் யூனிட்டில் (ICCU) ஏற்பட்ட சிக்கல் காரணமாக கியா EV6-இன் 1,138 யூனிட்களை கியா நிறுவனம் ரீகால் செய்துள்ளது. EV6 -யின் ரீகால் அதன் போட்டியாளரான ஹூண்டாய் அயோனிக் 5 காரில் ஏற்பட்ட அதே சிக்கல் போல உள்ளது.
இன்டெக்ரேட்டட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட் (ICCU) என்றால் என்ன?
இது உயர் வோல்டேஜை பெரிய பேட்டரி பேக்கிலிருந்து 12V பேட்டரியை (இரண்டாம் நிலை பேட்டரி) சார்ஜ் செய்வதற்கு ஏற்ற குறைந்த வோல்டேஜாக மாற்றுகிறது. எலக்ட்ரிக் கார்களில் ICCU முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த 12V பேட்டரி கிளைமேட் கண்ட்ரோல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள் மற்றும் லைட்கள் போன்ற EV-யின் அத்தியாவசிய எலக்ட்ரானிக் எலமென்ட்களை இயக்குகிறது. ICCU ஆனது V2L (வெஹிகிள்-டு-லோட்) செயல்பாட்டின் மூலம் காருடன் இணைக்கப்பட்ட துணை சாதனங்களை இயக்குவதற்கும் உதவுகிறது. இருப்பினும் ICCU சில நேரங்களில் 12V பேட்டரியை எதிர்பாராதவிதமாக டிஸ்சார்ஜ் செய்யக்கூடும்.
காரின் உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
கியா EV6 உரிமையாளர்கள் தங்கள் கார்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பிற்கு எடுத்துச் செல்லலாம், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு ஆய்வுகளை திட்டமிடலாம். பாகம் பழுதடைந்து காணப்பட்டால் அது வாடிக்கையாளர்களுக்கு எந்த வித கூடுதல் செலவில்லாமல் இலவசமாக மாற்றித்தரப்படும்.
EV6 பற்றிய கூடுதல் தகவல்கள்
கியாவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 77.4 கிலோவாட் பேட்டரி பேக்கை பெறுகிறது. இது ஒரே ஒரு ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் டூயல் மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட் அப் உடன் வருகிறது.
பேட்டரி பேக் |
77.4 கிலோவாட் |
|
டிரைவ் டைப் |
RWD |
AWD |
பவர் |
229 PS |
325 PS |
டார்க் |
350 Nm |
605 Nm |
ARAI-கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் |
708 கிமீ வரை |
கியா EV6 டூயல் 12.3-இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கு மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு).64-கலர் ஆம்பியன்ட் லைட்கள், வென்டிலேட்டட் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் ஃபிரன்ட் சீட்கள் மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகள் இருக்கின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இதில் 8 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கொலிஷன் அவாய்டன்ஸ் போன்றவை வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா EV6 விலை ரூ. 60.97 லட்சத்தில் இருந்து ரூ. 65.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. இது ஹூண்டாய் அயோனிக் 5, வோல்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா என்யாக் iV ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் BMW i4-க்கு குறைவான விலையில் உள்ள மாற்றாக இருக்கும். கூடுதலாக கியா EV6-க்கு மாற்றாக வோல்வோ C40 ரீசார்ஜ் கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: கியா EV6 ஆட்டோமேட்டிக்