சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் கியா கார்னிவெல் விற்பனை நிறுத்தம்

published on ஜூன் 21, 2023 03:04 pm by shreyash for க்யா கார்னிவல் 2020-2023

இந்தியாவிற்கு ப்ரீமியம் MPV -யின் சமீபத்திய தலைமுறைக் காரை கொண்டு வரும் முடிவில் கார் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது.

  • கியா இந்தியா, அதன் இணையதளத்திலிருந்து கார்னிவெல் -ஐ நீக்கி உள்ளது.

  • 6- மற்றும் 7- இருக்கை கட்டமைப்புகளில் அது வழங்கப்பட்டு வந்தது.

  • கார்னிவெல் 200PS 2.2-லிட்டர் டீசல் இன்ஜினால் ஆற்றல் அளிக்கப்பட்டது, புதிய ரியல் டிரைவிங் எமிஷன்(RDE) விதிகளுக்கு ஏற்ப அது புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

  • அதன் விற்பனைக் காலம் முழுவதும் கார்னிவெலின் தொடக்க விலை ரூ.30.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆக இருந்தது.

இந்தியாவில் கியா கார்னிவெல் இப்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது., ப்ரீமியம் MPVக்கான முன்பதிவுகளை கார் தயாரிப்பு நிறுவம் இப்போது ஏற்பதில்லை மற்றும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து அதனை நீக்கி உள்ளது. 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்னிவெல் அதன் ப்ரீமியம் கேபினால் பிரபலமடைந்தது அது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு மேலே நிலை நிறுத்தப்பட்டது, விலை அதிகமான லக்சுரி MPV பிரிவிற்குள் நுழையாமலேயே அது பிரபலமானது.

இங்கே விற்பனை செய்யப்பட்ட கார்னிவெல், கார் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தலைமுறை மாடல்தான், மற்றும் சமீபத்திய BS6 இரண்டாம் கட்ட உமிழ்வு விதிகளுக்கு பொருந்துவதற்காக அதனை புதுப்பிக்க வேண்டாம் என கியா முடிவெடுத்துள்ளது. 6 மற்றும் 7 இருக்கை ஆகிய இருகட்டமைப்புகளில் கார்னிவெல் வழங்கப்படுகிறது மற்றும் மூன்று விதமான கார் வேரியன்ட்களில் அது கிடைக்கிறது. அறிமுக காலத்தில் அதில் நான்கு வரிசை கார் வகை கூட இருந்தது, குறுகிய காலத்தில் அந்த மாடல் நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் விற்பனைக் காலத்தில் கார்னிவெல் ரூ.30.99 லட்சம் முதல் ரூ.35.49 லட்சம்(எக்ஸ் ஷோரூம் டெல்லி) வரையிலான விலையில் விற்கப்பட்டது.

அது வழங்கிய அம்சங்கள்

கியா கார்னிவெல்-இன் கேபின் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நடு வரிசைப் பயணிகளுக்காக 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, டூயல்-பேனல் சன்ரூஃப் மற்றும் த்ரீ ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெற்றிருந்தது. அறிமுகத்தில், இந்தியாவில் சொகுசு அல்லாத சிறந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட கார்களில் ஒன்றாக இது இருந்தது. இப்போது, பெரிய சந்தை பிராண்டுகளிடமிருந்து மூன்று வரிசைக் கார்கள் வரத் தொடங்கி உள்ளன மற்றும் அவை வழங்கும் தொழில்நுட்பத்தால் கார்னிவெல்-ஐ பின்தள்ளிவிட்டன.

பாதுகாப்பைப் பொருத்தவரை, கியாவின் ப்ரீமியம் MPV அதிகபட்சம் ஆறு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டு கன்ட்ரோல்(ESC), கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ஹில் அசிஸ்ட் போன்றவற்றை பெற்றிருந்தது.

மேலும் படிக்கவும்: ஜூலை 4 ஆம் தேதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட உள்ள தோற்றப்பொலிவு கூட்டப்பட்ட கியா செல்டோஸ்

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:

கார்னிவெல், 200PS மற்றும் 440Nm உருவாக்கும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் மற்றும் அது 8-வேக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குத் திரும்ப வருமா?

டெல்லியில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஃபேஸ்லிப்டட் நான்காம் தலைமுறை கார்னிவெல்-ஐ கியா காட்சிக்கு வைத்திருந்தது. தற்போது நிறுத்தப்பட்ட மாடலைவிட அது அளவில் பெரியது, மற்றும் பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) போன்ற விரிவான அம்சங்களின் பட்டிலைக் கொண்டுள்ளது. கியா இன்னமும் சந்தையை பற்றி ஆய்வு செய்கிறது, மேலும் அனைத்தும் சரியாக நடந்தால் அடுத்த வருடத்தில் கியா கார்னிவெல் வெளியிடப்படலாம்.

மேலும் படிக்கவும்: கியா கார்னிவெல் டீசல்

s
வெளியிட்டவர்

shreyash

  • 532 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது க்யா கார்னிவல் 2020-2023

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.44 - 13.73 லட்சம்*
Rs.19.77 - 30.98 லட்சம்*
Rs.10.52 - 19.67 லட்சம்*
Rs.2 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை