ஹோண்டாவின் சிறப்பாக விற்பனையாகும் புதிய வாகனம்: ஜாஸ்
published on ஆகஸ்ட் 07, 2015 09:24 am by manish for ஹோண்டா ஜாஸ் 2014-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
கடந்த ஜூலை மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய மாடலான ஜாஸ் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி, ஹோண்டா சிட்டியின் விற்பனையை முறியடித்துள்ளது. ஹோண்டா ஜாஸ் 6,676 யூனிட்கள் விற்பனையாகி, ஹோண்டா சிட்டியின் 5,180 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கையை முறியடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால், இந்தாண்டு ஹோண்டா கார்களின் விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15,709 கார்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்நிலையில் கடந்தாண்டை விட அதிகமாக, இந்தாண்டு ஜூலை மாதம் 18,606 கார்களை விற்பனை செய்துள்ளது.
முதல் தலைமுறை ஜாஸ் மிக முன்னதாகவும், அதிக விலையுடனும் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டதால், ஹோண்டா நிறுவனத்திற்கும் அதன் நுகர்வோருக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. ஆனால் இரண்டாம் முறை ஜாஸ் அறிமுகத்தில், புதிய டீசல் என்ஜின் மற்றும் போட்டிக்கு ஏற்ற விலை நிர்ணயம் ஆகியவை, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
ஹோண்டா சிட்டியில் உள்ளது போலவே, ஹோண்டா ஜாஸிலும் அதே 1.5-லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் யூனிட்டை காண முடிகிறது. பெட்ரோல் வகையில், அமேஸ் மற்றும் பிரியோ ஆகியவற்றில் பொதுவாக காணப்படும், 1.2-லிட்டர் ஐ-விடிஇசி வழங்கும் அம்சங்களை கொண்டுள்ளது. ஜாஸ் மாடலை ஒத்த, உயர் வகையை சேர்ந்ததும், நம் நாட்டில் அதிகமாக விற்பனையாகி வருவதுமான ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஆகிய மாடல்களுடன் ஜாஸ் போட்டியிடுகிறது. இந்திய வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா கடந்த ஜூலை மாதத்தில் 14,556 கார்களை விற்பனை செய்ததை கூட ஹோண்டா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.