எதிர்காலத்தில் ஜாகுவார் XJ லைன்அப் முழுவதும் மாற்றி அமைக்கப்படுகிறது

published on ஜனவரி 08, 2016 10:31 am by nabeel for ஜாகுவார் எக்ஸ்ஜெ

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதுப்பிக்கப்பட்ட XJ சேடனின் மாற்று வெளியிட ஜாகுவார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல, ஒரு சில பாடி மாற்றங்களை கொண்ட புதுப்பிக்கப்பட்டவைகளாக வெளியிடுவதை காட்டிலும், ஒரு முழு புதிய மாடல் ரேஞ்ச்-சை, அவர்கள் அறிமுகம் செய்ய உள்ளனர். இதை ஜாகுவாரின் வடிவமைப்பு தலைவரான இயன் கல்லும் உறுதி செய்துள்ளார். அவரை பொறுத்த வரை, XJ-யின் தற்போதைய மாடலில் இன்னும் நட்சத்திரத் தன்மைகள் மற்றும் புதிய தோற்றங்கள் காணப்படுகிறது. ஆனால் இந்த காரை இன்னும் நடைமுறைக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்று இந்நிறுவனம் கருதுகிறது. ஜாகுவார் XJ-க்கு கடந்த 2010-ல் ஒரு முக்கிய மாற்றம் பெற்றது. அதை தொடர்ந்து கடந்த 2015-ல் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய XJ தொடர்பாக கல்லும் கூறுகையில், “இப்போது நாங்கள் அதையும், மற்ற கார் லைன்கள், கூடுதலானவைகள் போன்ற மற்ற காரியங்களையும் கவனித்து வருகிறோம். இதன்மூலம் தொடர்ந்து வளர்ச்சியை பெறுவோம்” என்றார். மேலும், ஆட்டோகாரிடம் பேசிய போது, இந்த மாற்றத்திற்கான காலநேரம் குறித்து எதுவும் தெரிவிக்காவிட்டாலும், எந்த புதிய மாடல்களும் தற்போதைய வெளியீடு திறனுக்கு ஏற்றதாக அமைவது கடினம் என்பதை சாடையாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கொள்ளளவு மற்றும் எண்ணிக்கையை பொறுத்த வரை BMW அல்லது ஆடியை போல, ஜாகுவார் லேண்டு ரோவரும் போட்டியிடும் எண்ணிக்கையில் இருப்பது ஒரு இரக்கமற்ற பிரச்சனை ஆகும். ஓராண்டிற்கும், எங்களுக்கும் இடையே ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்க, எங்களுக்கு விருப்பமில்லை. நீங்கள் கெளரவத்தை இழக்க நேரிடும்” என்றார்.

இங்கிலாந்தில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலை, 6,50,000 யூனிட் தயாரிப்புத் திறன் கொண்டது. இதில் F-பேஸ் மற்றும் XE ஆகியவற்றின் தயாரிப்பை அதிகரித்து, விரைவில் சோதனையில் ஈடுபட உள்ளது. மேலும், ஜாகுவார் லேண்டு ரோவரின் ஒரு தொழிற்சாலையை ஸ்லோவாகியாவில் அமைக்கப்பட உள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு முதல் இதன் செயல்பாட்டை துவங்கும். USD 1.5 பில்லியன் உள்ளீடு மூலம் கட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலையில், 2,800-க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டிருக்கும். இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்டு ரோவரின் உலகளாவிய தயாரிப்பிற்காக 1,50,000 யூனிட் கொள்ளளவை மேலும் இணைக்கப்பட உள்ளது. ஆனால் பிற்காலத்தில் இந்த தொழிற்சாலையில் இருந்து 3,00,000 யூனிட்களை பெற வேண்டும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. தற்போதைய நிலையில், ஜாகுவார் லேண்டு ரோவரின் தயாரிப்பு தொழிற்சாலைகள், இங்கிலாந்து, இந்தியா, பிரேசில் மற்றும் சீனா ஆகிய இடங்களில் உள்ளது. XE-யை விட சிறிய அளவிலான கார் தயாரிப்பிற்கு வாய்ப்பு இருப்பதாக, திரு.கல்லும் மேலும் தெரிவித்தார். ஏனெனில் அவரது அணியினர் தொடர்ந்து ஒரு சிறிய அளவிலான ஜாகுவாரை குறித்து தொடர்ந்து பேசப்படுவதாக, அவர் தெரிவித்தார். ஆனால், அதிகாரபூர்வமான தயாரிப்பு மாடல் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. XK-னை திரும்ப கொண்டு வருவதை அவர் மறுத்தார்.

மேலும் வாசிக்க

இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE: 2016 யூரோப்பியன் கார் ஆப் தி இயர் பட்டியலில் தேர்வு

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஜாகுவார் எக்ஸ்ஜெ

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience