புதுப்பிக்கப்பட்ட ஜாகுவார் XJ: ரூ.98.03 லட்சத்தில் அறிமுகம்
ஜாகுவார் எக்ஸ்ஜெ க்காக ஜனவரி 29, 2016 11:58 am அன்று அபிஜித் ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிரிட்டிஷ் ஆடம்பர கார் தயாரிப்பாளரான ஜாகுவார் மூலம் அதன் முன்னணி சேடனான XJ-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, ரூ.98.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் குறைந்த அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஹெட்லெம்ப்களில் நவீன DRL செட்ஆப் உடன் புதிய LED வெளிபுற அமைப்பியல் லைட்டிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர மறுவடிவம் கொண்ட கார், BMW 7-சீரிஸ், ஆடி A8 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் S-கிளாஸ் ஆகியவை உடன் போட்டியிட உள்ளது.
இது குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா லிமிடேட் தலைவர் ரோஹித் சூரி கூறுகையில், “உயர்தர ஆடம்பரம் மற்றும் செயல்திறனை அளிக்கும் வகையில், இந்த புதிய ஜாகுவார் XJ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ள உறுதியான மற்றும் தடித்த தோற்றத்தின் மூலம் இந்த புதிய XJ-விற்கு, சாலையில் ஒரு கம்பீரத் தன்மை கிடைப்பதால், சாலையில் நடமாடுபவர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. இதில் உள்ள ஆடம்பர உட்புற அமைப்புகள், சக்தி வாய்ந்த என்ஜின் மற்றும் நவீன தொழிற்நுட்பம் ஆகியவை சேர்ந்து, விரைவாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட எங்களின் வாடிக்கையாளர்களுக்கு காருக்குள் இன்னும் அதிகளவிலான ஆக்கபூர்வமான, பொழுதுபோக்கு மற்றும் இதமான அனுபவங்களை அளிக்கிறது” என்றார்.
இந்த ஆடம்பர சேடன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இவ்விரண்டு என்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கிறது. அதன் விலை விபரம் பின்வருமாறு:
- ஜாகுவார் XJ 2.0L (177 kW) பெட்ரோல் போர்ட்ஃபோலியோ: ரூ.99.23 லட்சம்
- ஜாகுவார் XJ 3.0L (221 kW) டீசல் பிரிமியம் ஆடம்பரம்: ரூ.98.03 லட்சம்
- ஜாகுவார் XJ 3.0L (221 kW) டீசல் போர்ட்ஃபோலியோ: ரூ.105.42 லட்சம்
இவ்விரு மோட்டார்களும் பாராட்டத்தக்க வகையிலான ஆக்ஸிலரேஷன் மற்றும் செயல்திறனை கொண்டுள்ளது. பெட்ரோல் மோட்டாரை கொண்டுள்ள XJ கார், 7.9 வினாடிகளில் 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டுகிறது. அதே நேரத்தில் டீசல் பதிப்பு இதற்கு 6.2 வினாடிகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
பழைய XJ-யைப் போலவே, இந்த காரும் அதே நேர்த்தியான தன்மையை தனக்குள் கொண்டுள்ளது. DRL-களுடன் கூடிய முன்பக்க கிரில் அமைப்பு, இதற்கு அதிக தோற்ற பொலிவை அளிக்கிறது. வெளிபுற அமைப்பில் உள்ள ஒரு தனித்தன்மையான டியர்டிராப் வடிவம், இக்காரின் ஏரோடைனாமிக் பண்புகளை மேம்பட்டதாக செயல்பட உதவுகிறது.
காரின் உட்புறத்தில், மறு-அளவுத்திருத்தம் (ரீ-காலிப்ரேட்டேட்) மற்றும் மறுவடிவமைப்பு கொண்ட மல்டி லேயர் உள்ள வெர்ச்சூவல் டிஸ்ப்ளே-யை உட்கொண்டுள்ளது. ஒரு மேம்பட்ட டிரைவிங் அனுபவத்தை அளிக்கும் வகையில், ஒரு 20.32 செ.மீ டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே உடன் கூடிய ஒரு முழுமையான டிஜிட்டல் தன்மை கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரை பெற்றுள்ளது. நம் காதுகளுக்கு இனிமை சேர்க்கும் பணிக்கு, மிரிடியன் மியூஸிக் சிஸ்டம் பொறுப்பேற்றுள்ளது.
மேலும் வாசிக்க