ஏன்? புதிய பலேனோ கார்களில் 90 PS திறன் வெளியிடும் என்ஜின் பொருத்தப்படாதது ஏன்!
published on அக்டோபர் 19, 2015 01:28 pm by அபிஜித் for மாருதி பாலினோ 2015-2022
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
மாருதி பலேனோ கார்களின் அறிமுக தினமான அக்டோபர் 26 ஆம் தேதிக்கு மிக குறைந்த நாட்களே உள்ள நிலையில் நாம் அந்த கரை ஓட்டி அதன் அம்சங்கள் அனைத்தையும் அறிந்து ஏற்கனவே உலகுக்கு தெரியபடுத்தி உள்ளோம். நாம் எதிர்பார்த்தது போலவே ஸ்விப்ட் காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1 .2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இந்த பலேனோ கார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆச்சரிய தக்க வகையில், 90 ps அளவு சக்தியை உற்பத்தி செய்யும் எஞ்சினுக்கு பதிலாக 75 ps சக்தியை வெளியிடும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது நிச்சயம் எனக்கு ஓரு அதிர்ச்சியான செய்தியாகவே தோன்றுகிறது. ஏனெனில் உலகம் முழுமையிலும் கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களில் அதிக சக்தி கொண்ட என்ஜினை பொருத்தி வரும் வேளையில் மாருதி நிறுவனம் ஏன் இப்படி குறைவான சக்தி கொண்ட என்ஜினை பொறுத்த வேண்டும் என்பது மிகவும் வியப்பான விஷயமாகவே தெரிகிறது. . அதுவும் பலேனோ குறிப்பாக 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கார்கள் ரேலி கார்கள் என்ற அளவுக்கு பெயரெடுத்துள்ள நிலையில் மாருதியின் இந்த முடிவே ஏன் என்பது தெரியவில்லை.
கூடுதல் மைலேஜ் தரவேண்டும் என்பதற்காகவா?
ஹோண்டா ஜாஸ் கார்கள் 6 – வேக மேனுவல் கியர் அமைப்பு இணைக்கப்பட்ட 100PS i-DTEC என்ஜின் பொருத்தப்பட்டு 27.3 கி.மீ. மைலேஜ் தரும் வகையிலும், இதற்கு அடுத்தப்படியாக ஹயுண்டாய் நிறுவனத்தின் எளிட் i20 லிட்டருக்கு 22.5 கி.மீ என்று சற்று குறைவான மைலேஜ் தந்தாலும் 219 nm அளவுக்கு டார்க் உடன் ( இந்த பிரிவிலேயே அதிகமாக) 6- வேக மேனுவல் கியர் அமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இவைகளுக்கு ஒரு படி கீழே போர்ட் பீகோ டீசல் கார்களில் 25.83 மைலேஜ் தந்து 100PS அளவுக்கு சக்தி மற்றும் 215 nm டார்கை வெளியிடும் 1.5 லிட்டர் TDCi என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. இது ஜாஸ் மற்றும் பலேனோவை விட சற்று குறைவான மைலேஜ் தான் என்றாலும் 100 PS சக்தியை வெளியிடும் ஆற்றல் இருப்பதை கவனிக்க தவற கூடாது.
இதையும் படியுங்கள் : அடுத்த 15 நாட்களில் அறிமுகமாக உள்ள வாகனங்கள்
மாருதியை பொறுத்தவரை SHVS ஹைப்ரிட் டெக்னாலஜி பொருத்தப்பட்ட சியஸ் எடை சற்று கூடுதலான சியஸ் கார்கள் 90PS சக்தியை வெளியிடும் 1.3 லிட்டர் என்ஜின் உதவியுடன் 26 கி.மீ. மைலேஜ் தந்தன. அதை விட எடை குறைவான பலேனோ கார்கள் இதே என்ஜின் பொருத்தப்பட்டாலும் தானாகவே தனது குறைவான எடை கொண்ட தன்மையால் சியஸ் கார்களை விட அதிக மைலேஜ் கொடுத்திருக்கும். அப்படியே ஒரு வேளை கூடுதல் மைலேஜ் தரவில்லை என்றாலும் 26கி.மீ. என்பது உண்மையிலேயே ஒரு சராசரிக்கும் அதிகமான மைலேஜ் தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மேலும் பலேனோவின் 75PS சக்தியை வெளியிடும் என்ஜின் இதே பிரிவில் உள்ள மற்ற இரண்டு கார்களைப் போல் 6 - வேக கியர் அமைப்பு பொருத்தப்படாமல் வெறும் 5- வேக கியர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
விலை ஒரு காரணமா ?
மாருதி நிறுவனம் தனது கார்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்வதில் முதன்மையான நிறுவனம். இதற்கு தக்க சான்றாக சமீபத்தில் வெளியான மேம்படுத்தப்பட்ட எர்டிகா ரூ. 5.99 லட்சங்களுக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) வெளியிடப்பட்டதை சொல்லலாம். பலேனோ கார்களுக்கும் அதைப் போன்றே வாங்க தூண்டும் குறைவான விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக குறைந்த சக்தி கொண்ட என்ஜினை பொருத்த வேண்டும் என்று இந்த இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்கள் முடிவு செய்தால் அந்த முடிவை நிச்சயம் இவர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது, அது மட்டுமல்லாமல் 90 PS என்ற இந்த சிறிய அளவுக்கு என்ஜின் சக்தி கூட்டப்படுவது எந்த வகையிலும் மாருதி நிறுவனத்திற்கு பெரியதொரு செலவாக ஆகாது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
அறிமுக செய்தியை பாருங்கள் : புதிய மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி எர்டிகா ரூ. 5.99 லட்சங்களுக்கு அறிமுகமானது.
மொத்தத்தில் பலேனோ பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றம் கொண்ட ஒரு கார் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அகலமான உடலமைப்பு, இரட்டை காற்று பைகள், ABS தொழில் நுட்பம் , நேர்த்தியான உட்புற வடிவமைப்பு மற்றும் இந்த பிரிவு கார்களுடன் ஒப்பிடுகையில் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு கையாள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். இன்னும் ஒரு 15 PS அளவுக்கு சக்தியையையும் 10nm அளவுக்கு டார்கயும் கூட்டி இருந்தால் இந்த பலேனோ கார்கள் மிகவும் போட்டி மிகுந்ததாக மாறி இருக்கும். அதுவும் இந்த அபர்த் கார்கள் அறிமுகமாகியுள்ள இந்த சமயத்தில் ஏற்கனவே அறிமுகமாகி விற்பனையில் உள்ள போலோ GT TSI மற்றும் பீகோ 1.5 TiVCT கார்களே பயந்து போய் உள்ள நிலையில் இந்த மாருதியின் முடிவு எந்த வித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் பாருங்கள் : மாருதி பலேனோ பிரத்தியேக படங்கள் - தெளிவான புகைப்பட கேலரி
0 out of 0 found this helpful