• English
  • Login / Register

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது

published on ஆகஸ்ட் 01, 2024 04:06 pm by shreyash for ரெனால்ட் டிரிபர்

  • 33 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டிரைவரின் ஃபுட்வெல் பகுதி நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ரெனால்ட் ட்ரைபரின் பாடிஷெல் நிலையற்றதாக இருந்தது மேலும் லோடிங்கை தாங்கும் திறன் இல்லை.

  • பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) ட்ரைபர் 34 -க்கு 22.29 மதிப்பெண்களை பெற்றது.

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு (COP), இது 49 -க்கு 19.99 மதிப்பெண்களைப் பெற்றது.

  • தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் ட்ரைபரில் உள்ள பாதுகாப்புக்காக 4 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் முன் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா -வில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனால்ட் ட்ரைபர் -க்கான புதிய கிராஷ் டெஸ்ட் முடிவுகளை குளோபல் NCAP வெளியிட்டுள்ளது. சப்-4 மீ கிராஸ்ஓவர் MPV மோசமான பாதுகாப்பு மதிப்பீடுகளை மட்டுமே பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) ஆகிய இரண்டிலும் தலா 2 நட்சத்திரங்கள் கிடைத்தன. இந்தியா-ஸ்பெக் ட்ரைபர் 2021 -ஆம் ஆண்டில் குளோபல் NCAP ஆல் சோதிக்கப்பட்டது மற்றும் முந்தைய விதிமுறைகளின் அடிப்படையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. இருப்பினும் புதுப்பிக்கப்பட்ட குளோபல் NCAP விதிமுறைகளின் கீழ்  டிரைபர் பாதுகாப்பு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளது.

ஒவ்வொரு சோதனையிலும் ரெனால்ட் ட்ரைபரின் செயல்திறனைப் பற்றிய ஒரு விரிவான பார்வை இங்கே:

பாதுகாப்பு

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

மதிப்பீடு

2 நட்சத்திரங்கள்

2 நட்சத்திரங்கள்

மதிப்பெண்

22.29/34

19.99/49

பாடிஷெல் இன்டெக்ரிட்டி

நிலையற்றது

புட்வெல்

ஓட்டுநரின் பக்கமானது நிலையானது. ஆனால் பயணிகள் பக்கம் சமச்சீராக இல்லை

பெரியவர்களுக்கான பாதுகாப்பு (34 -க்கு 22.29 புள்ளிகள்)

முன்பக்க தாக்கம் (64 கிமீ/மணி)

முன்பக்க தாக்க கிராஷ் டெஸ்ட் சோதனையில் ரெனால்ட் ட்ரைபர் ஓட்டுநர் மற்றும் இணை ஓட்டுநரின் தலை மற்றும் கழுத்துக்கு 'நல்ல' பாதுகாப்பு இருப்பதை காட்டியது. ஓட்டுநரின் முழங்கால்கள் 'விளிம்பு' பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது, அதே நேரத்தில் பயணிகளின் முழங்கால்கள் 'நல்ல' பாதுகாப்பை வெளிப்படுத்தின. டிரைவரின் முழங்கால்கள் காரின் முன் பகுதிக்கு பின்னால் உள்ள ஆபத்தான கட்டமைப்புகளை பாதிக்கலாம் என்பதே இதற்குக் காரணம். மேலும் ஓட்டுநருக்கு மார்புப் பாதுகாப்பு 'பலவீனமானது' என மதிப்பீடு கிடைத்தது, பயணிகளுக்கு அது 'போதுமானதாக' இருந்தது. அவர்களின் இரு தொடைக்கும் ‘போதுமான’ பாதுகாப்பைக் காட்டின.

சைடு இம்பாக்ட்(50 கி.மீ மணி)

தலை, இடுப்பு மற்றும் வயிறு 'நல்ல' பாதுகாப்பைப் பெற்றன. மார்பு 'பலவீனமான' பாதுகாப்பு இருப்பதை மட்டும் காட்டியது.

சைடு போல் இம்பாக்ட்

பக்கவாட்டு மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள் இல்லாததால் இந்த சோதனை நடத்தப்படவில்லை.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு (49 -க்கு 19.99 புள்ளிகள்)

முன்பக்க தாக்கம் (64 கிமீ/மணி)

முன்னோக்கி எதிர்கொள்ளும் குழந்தை இருக்கைகளில் ISOFIX ஆங்கரேஜைப் பயன்படுத்தி 3 வயது குழந்தை டம்மியானது வைக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் கழுத்து மற்றும் மார்புக்கான பாதுகாப்பு மோசமானதாக மதிப்பிடப்பட்டது; முன் தாக்கத்தின் போது ஆங்கரேஜால் தலை வெளிப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

18 மாத குழந்தை டம்மி விஷயத்தில் குழந்தை இருக்கை பின்புறமாக வைக்கப்பட்டது மற்றும் அது குழந்தையின் தலைக்கு முழு பாதுகாப்பை வழங்கியது.

பக்க தாக்கம் (50 கி.மீ மணி)

இரண்டு சைல்டு ரீஸ்ட்ரெயின்ட் அமைப்புகளாலும்(CRS) பக்க தாக்க சோதனையின் போது முழு பாதுகாப்பை வழங்க முடிந்தது. 

மேலும் பார்க்க: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Maruti Suzuki Ertiga குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 1-ஸ்டார் என்ற மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது

பாடி ஷெல் இன்டெக்ரிட்டி & கால்வெல்

ரெனால்ட் ட்ரைபரின் பாடிஷெல் நிலையற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது மேலும் அது கூடுதலான லோடிங்குகளை தாங்கும் திறன் கொண்டதாக இல்லை. ஃபுட்வெல் பகுதிக்கு வரும்போது ​​ஓட்டுநரின் பக்கவாட்டு பகுதி நிலையானதாக இருந்தாலும் அதே அளவிலான பாதுகாப்பு பயணிகள் தரப்பில் வழங்கப்படவில்லை.

தென்-ஆப்பிரிக்கா-ஸ்பெக் ட்ரைபரில் உள்ள பாதுகாப்பு வசதிகள்

தென் ஆப்ரிக்கன் ரெனால்ட் ட்ரைபரில் உள்ள பாதுகாப்பு வசதிகளில் 4 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் முன் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவை உள்ளன. இந்தியா-ஸ்பெக் ட்ரைபருடன் வழங்கப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை தென் ஆப்ரிக்கா -வில் விற்பனை செய்யப்படும் காரில் கிடைக்கவில்லை. இந்தியா-ஸ்பெக் மாடல்களில் பின்புற இருக்கைகளுக்கு சீட் பெல்ட் ரிமைண்டர்கள், 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் கிடைக்கின்றன.

இந்தியாவில் ட்ரைபரின் விலை மற்றும் போட்டியாளர்கள்

இந்தியாவில் ரெனால்ட் ட்ரைபர் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கிறது. இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை ஆனால் மாருதி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும். 

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ரெனால்ட் ட்ரைபர் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Renault டிரிபர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா கார்னிவல்
    க்யா கார்னிவல்
    Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • எம்ஜி euniq 7
    எம்ஜி euniq 7
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஏப், 2025
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2025
×
We need your சிட்டி to customize your experience