இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE: 2016 யூரோப்பியன் கார் ஆப் தி இயர் பட்டியலில் தேர்வு
published on ஜனவரி 05, 2016 12:57 pm by bala subramaniam for ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 யூரோப்பியன் கார் ஆப் தி இயர் விருதிற்கான 7 முன்னணி கார்களுக்கான பட்டியலில் ஜாகுவார் XE தேர்வாகி உள்ளது. 22 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 58 அங்கத்தினர் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும் யூரோப்பியன் கார் ஆப் தி இயரின் வெற்றியாளர், 2016 பிப்ரவரி 29 ஆம் தேதியன்று அறிவிக்கப்படுவார். இந்த முக்கிய விருது வழங்கப்பட, தொழிற்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் அளிக்கும் பணத்திற்கான மதிப்பு ஆகியவை முக்கிய அடிப்படை கூறுகளாக எடுத்து கொள்ளப்படுகிறது.
ஜாகுவாரின் மூலம் அதன் மேம்பட்ட எடைக்குறைந்த அலுமினியம் கட்டமைப்பு தன்மை முதல் முறையாக ஜாகுவார் XE-ல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறப்பான பயணம், கையாளும் தன்மை மற்றும் மெருமேற்றம் ஆகியவை ஒருங்கே பெறும் வகையில் அமைந்த ஒரு உயர் அதிநவீன இரட்டை விஷ்போன் மற்றும் இன்டிகரல் லிங்க் சஸ்பென்ஸன் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதேபோல லோ-பிரஷர் எக்ஸ்சாஸ்ட் கியஸ் ரீசர்குலேஷன், மாறுபடும் எக்ஸ்சாஸ்ட் கம் டைமிங் மற்றும் செலக்ட்டிவ் கேட்டலைட்டிக் ரீடெக்ஷன் ஆகியவற்றை உட்படுத்திய மேம்பட்ட தொழிற்நுட்பங்களை பயன்படுத்தும் புதிய இன்ஜினியம் டீசல் என்ஜின்களை கொண்ட முதல் ஜாகுவாரும் இந்த XE தான்.
ஜாகுவாரின் XE, XF, F-பேஸ் ஆகியவற்றின் வாகன வரிசை இயக்குனர் திரு.கெவின் ஸ்ட்ரைடு கூறுகையில், யூரோப்பியன் கார் ஆப் தி இயர் விருதிற்கான பட்டியலில் ஜாகுவார் XE தேர்வாகி இருப்பதை எண்ணி, இந்நிறுவனம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது, என்றார். அவர் மேலும் கூறுகையில், “எந்த வகையிலும் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்ற எங்களின் அணுகுமுறையினால், அதன் வகையிலேயே அலுமினியம்-இன்டென்ஸீவ் மோனோகோக் பெற்ற ஒரே கார் XE மட்டுமே. அதேபோல உலகிலேயே புரட்சிகரமான ஆல் சர்ஃபேஸ் ப்ரோகிரஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை கொண்ட முதல் காரும் இந்த XE தான். எங்களின் கடின உழைப்பை தொடரும் வகையில், ஆல்-வீல் டிரைவ் மற்றும் எங்களின் ஸ்டேட்-ஆப்-தி ஆர்ட் இன் கன்ட்ரோல் டச் ப்ரோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். ஆனால் மற்ற அணி உறுப்பினர்களை போல, அடுத்தாண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ள வெற்றியாளரை அறிய நானும் ஆவலாக உள்ளேன்” என்றார்.
2017 ஜாகுவார் XE-ல் ஆல்-வீல் டிரைவ் வசதி அளிக்கப்பட்டு, அதன் டார்க் ஆன்-டிமென்டு சிஸ்டம் மூலம் XE-யின் துரித தன்மை மற்றும் ரேர்-வீல் டிரைவ் தன்மை ஆகியவை பாதுகாப்பாக அமைகிறது. அதே நேரத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் இழுவை மூலம் கையாளுவதில் எளிமை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful