ஜகுவார் XE மாடலை 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த திட்டம்
published on டிசம்பர் 14, 2015 03:03 pm by அபிஜித் for ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜகுவாரின் 3 சீரிஸ் வாகனமான XE மாடல், 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், புதிய XF மற்றும் F-பேஸ் மாடலும் இந்த என்ட்ரி-லெவல் ஆடம்பர சேடான் வாகனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படும். XE சேடான் இந்த வருட முற்பகுதியில், வெளிநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, தனது நேர்த்தியான வசீகரமான தோற்றத்தினால் பரவலான பாராட்டைப் பெற்றது. 3 சீரிஸ் கார்களுடன் மட்டுமல்லாது, ஆடி A4 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் போன்ற கார்களுடனும் XE மாடல் போட்டியிட உள்ளது.
புனேவில் உள்ள ஜகுவார் லாண்ட் ரோவர் ஆலையில் XE மாடல் தயாரிக்கப்படும். எனவே, இதன் விலை சகாயமாக, ஏறத்தாழ 40 லட்சங்களை நெருக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
XE மாடலின் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பற்றி பேசும் போது, இந்த காரை ஒத்த XF மற்றும் F-பேஸ் கார்களைப் போலவே இதன் அடிச்சட்டமும் (சேசிஸ்) முழுமையான அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய இங்கேணியம் இஞ்ஜின் வரிசைகளில் உள்ள, 161 bhp 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்டில், 2.0 லிட்டர் மோட்டாரும், ஆப்ஷனாக V6 இஞ்ஜினும் வரலாம் என்று தெரிகிறது. எனினும், இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
ஜகுவார் நிறுவனத்தின் பிரத்தியேகமான தோற்றத்தில் வரும் XE காரின் வெளிப்புற வடிவம் பந்தய கார்களை ஒத்து இருப்பதை, இதற்கு முன் வந்த மாடல்களின் வெளிப்புறத் தோற்றத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, மிகவும் கச்சிதமான பூனை வடிவத்தில் உள்ளது. இந்த காரின் உட்புறத்தில், ஜகுவாரின் சாராம்சம் இருந்தாலும், புத்துணர்ச்சி பொங்கும் புதிய வடிவத்தில் காணப்படும் என்று தெரிகிறது.
XE கார் 2016 –ஆம் வருடத்தின் முதல் பாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், XF மற்றும் F-பேஸ் ஆகிய மாடல்கள் அதற்கு பின் மெதுவாக வெளியிடப்படும். 2016 –ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அல்லது அதற்கு முன், XF மாடல் அறிமுகப்படுத்தப்படலாம்; F-பேஸ் மாடல் இந்தியாவில், 2016 –ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று யூகிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்